English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Bofors, Bofors gun
n. வானுர்தி எதிர்ப்புத் துப்பாக்கி.
bog
n. சதுப்புநிலம், அழுவம், சேறு, சகதி, (வினை) சேற்றில் அமிழ், முழுகிப்போ.
bog-spavin
n. குதிரையின் கணு உறை வீக்கம்.
bogbutter
n. தழை நிலக்கரியில் காணப்படும் கொழுப்பு மிக்க நீர்க் கரியகம்.
bogey
-1 n. குழிப்பந்தாட்டத்தில் கணிசன்ன மதிப்புடைய கெலிப்பெண்.
bogginess
n. அழுவத்தன்மை, சதுப்புநில இயல்பு.
boggle
v. அச்சத்தால் திடுக்கிடு, ஒதுங்கிநில், தயங்கு, தடைப்படு, தடைகூறு, ஐயங்களை எழுப்பு, தாக்காட்டு, இருகொருளிற் பேசு, தடுமாறு.
boggy
n. சதுப்புத்தன்மையுள்ள.
bogie
n. மொட்டைச் சகடம், தாழ்வான பாரவண்டி, ஊர்தியின் பின் அடியே கொளாவிக் கோக்கப்படும் அடிக் கட்டைச் சகடம்.
bogland
n. சதுப்புநிலப் பரப்பு.
boglatin
n. அயர்லாந்து நாடோடிகளின் இரகசியக் குழுஉக்குறிப் பேச்சு.
bogle
n. பேயுரு, ஆவியுரு, நிழல் உரு, மாயஉரு, பூச்சாண்டி,.
bogtrotter
n. சதுப்புல வாழ்நர், அயர்லாந்து நாட்டுவாசி.
bogtrotting
n. சதுப்புநிலப் பயணம், (பெ.) சதுப்புநிலத்தில் செல்கிற.
bogus
a. போலியான, உண்மையில்லாத, மோசடியான, பாசாங்கான.
bogy
n. பேயுருவம், நிழலுருவம், ஆவியுரு, பொய்த்தோற்றம், மாயத்தோற்றம், போலியச்சப்பொருள், பூச்சாண்டி.
bogyism
n. பேய்களில் நம்பிக்கை.
bohea
n. தரங்குரைந்த தேயிலை, கருந்தேயிலை.
Bohemian,
n,. நடு ஐரோப்பாவிலுள்ள பொஹீமியா நாட்டவர், சமுதாயக் கட்டற்றவர், மரபொழுங்குக்கு இணங்காதவர், நாடோடி, கலைமரபு பின்பற்றாதவர், (பெ.) நாடோடியான, கட்டுப்பாடில்லாத, ஒழுக்கவரம்பற்ற, மரபொழுங்குக்குப் புறம்பான.