English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Bobadil
n. வீம்படிப்பவன், தற்பெருமைக்காரன், வீண்பெருமைபேசுபவர்.
bobbery
n. அமளிகுமளி, கலைசல், (பெ.) இரைச்சல் மிக்க, ஆரவாரமான, தொந்தரவான, இடக்குச் செய்கிற, குறும்புடைய, சிடுசிடுப்புடைய, சஞ்சலமான.
bobbin
n. தையல் பொறியின் நுல் வட்டு, கம்பி இழையுருளை, தாழ் ஏற்றி, தாழ்ப்பாள் உயர்த்திக் திறக்கச் செய்வதற்காக இழுக்கப்படும் கயிற்றுப் பொறியமைவு.
bobbin-lace
n. தலையணிப் பின்னல் சரிகை.
bobbinet
n. கைவினைப் பூவேலைத்துணிபோல இயந்திரத்தால் ஆக்கப்பட்ட வலைத்துணி.
bobbish
a. கிளாச்சியுடைய.
bobble
n. நீர்க்கொந்தளிப்பு இயக்கம், ஆடைகளைத் திருத்தும் கம்பளிப்பந்து.
bobby-dazzler
n. பகட்டான பொருள், பகட்டான மாது.
bobby-sock
n. கணைக்காலளவே வரும் குறுங்காலுறை.
bobbysoxer
n. திரைநட்சத்திர ஆர்வ மடந்தை.
bobcat
n. அமெரிக்காவின் பூனையினக் காட்டுவிலங்கு வகை.
bobsled
n. பனிக்கட்டி மீது செல்லும் சறுக்குவண்டி.
bobstay
n. கப்பல் முன்புறத்தைக் கட்டும் கயிறு
bobtail
n. துண்டிக்கப்பட்ட வால், குறுகத்தறித்த மயிரையுடைய வால், வால்தறித்த குதிரை, வால் தறிக்கப்பட்ட நாய், மக்கட் பற்றிய இழிவுக்குறிப்பு, (பெ.) தறித்த வாலையுடைய.
bobtailed
a. துண்டிக்கப்பட்ட வாலுள்ள.
bobwheel
n. எடுப்பிசையிணைந்த தொடுப்பிசை, பல்லவியுல்ன் அனுபல்லவி.
Boche
n. செர்மானியரைக் குறித்த பிரஞ்சு வசைச் சொல்.
bock
n. வலிமையடைய கருநிற செர்மானியச் சாராயவகை, சாராயவகை உடைய கண்ணாடிக்கலம்.
bode
-1 n. முன்னறி, வருவது கூறு, பின்வரும் கேடு பற்றி முன்னெச்சரிக்கை செய், முன்னறிகுறி காட்டு.
bode(2), n.bide
என்பதன் பழைய இறந்தகால வடிவம்.