English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
aegis
n. கிரேக்கப் பெருந்தெய்வத்தின் கேடயம், ஆதரவு, சார்பு.
aegrotat
n. மருத்துவச்சான்று, பல்கலைக்கழகங்கிளல் மாணவர் தேர்வுக்கு அல்லது வகுப்பிற்கு வரமுடியாத நிலையில் நோயுற்றிருக்கிறாரென்ற சான்று.
Aeneid
n. வர்ஜில் என்ற பண்டை ரோமக் கவிஞர் இயற்றிய பெருங்காப்பியம்.
Aeolian
n. இயோலியாவைச் சார்ந்த கிரேக்கர்,(பெ.) இயோலியா அல்லது மேலே ஆசியாவைச் சார்ந்த, காற்றுக்குரிய, காற்றால் இயக்கப்படுகிற, காற்றுவெளியூடான.
Aeolian harp.
இயோலியா அல்லது மேலே ஆசியாவைச் சார்ந்த யாழ்வகை.
Aeolian mode.
பண்டைக் கிரேக்கரின் இசைத்திற வகை.
Aeolian rocks.
(மண்.) காற்றின் செயலால் உருவாகும் மவ்ல் போன்ற பாறைவகை.
Aeolic
n. கிரேக்க மொழியின் இயோலியக் கிளைவழக்கு.
aeolipile, aeolipyle
ஆவிவேக மானி.
aeon
n. ஊழி, பேரூழி, யுகம், கற்பம், எல்லையற்ற காலம், பிளேட்டோவின் கோட்பாடு வகையில் அணாதி காலந்தொட்டு நிலைபேறுடைய கடவுட்கூறான தத்துவம்.
aerated
a. வளியுடன் கலந்த, காற்றுட்டப்பட்ட.
aerated waters.
காற்றுட்டப்பட்ட பானங்க்ள.
aeration
n. காற்றுட்டல், வளிகலத்தல், வளிசெறித்தல், காற்றாடவிடல், உயிர்ப்புமூலம் குருதியுல்ன் உயிர்வளிகலக்கவிடல்.
aerator
n. காற்றுட்டுக் கலம்.
aerial
n. வான்கம்பி, உணர்கொம்பு, (பெ.) காற்றைச் சார்ந்த, காற்றுவெளிக்குரிய, காற்றுடான, வளிமண்டலத்துக்குரிய.
aerie,aery
வேட்டப்பறவையின் கூண்டு, மலைமுகட்டு அரண், மலைமேல், மனை, கொடும்பறவைக் குஞ்சுகளின் தொகுதி, கொடிய வமிசம்.
aeriform
a. ஆவி வடிவான, போலியான.
aero
n. வான ஊர்தி, விமானம், (பெ.) விமானம் சார்ந்த.
aero-biology
n. காற்றிற் கலந்து மிதக்கும் நுண்ணணு உயிரிக்ள நுண்ணணுச் சிதல்கள் ஆகியஹ்ற்றைப் பற்றிய உயிர்நுல் துறை.