English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
ad libitum
adv. விருப்பம்போல, வேண்டுமட்டும்.
ad mixture
n. சேர்த்துக் கலத்தல், கூட்டுக்கலவை, கலவைக்கூறு. துணைச் சேர்க்கைப்பொருள்.
ad nauseam
adv. வெறுப்பு உண்டாக்கும் வகையில்.
ad rem
adv. சுற்றி வளைக்காமல், நேரே.
ad unguem
a. முற்றும் செய்து தீர்ந்த.
ad valorem
a. மதிப்பீட்டின்படி உரிய, (வினையடை) விலைமதிப்பின் படி, மதிப்பீட்டின் படி.
ad verbum
a. சொல்லுக்குச் சொல்லான, (வினையடை) சொல்லுக்குச் சொல்லாக.
ad vitam autculpam
adv. வாழ்நாள் முழுதும் அல்லது குற்றம் மெய்ப்பிக்கப்படும் வரையில்.
ad-mass, admass
தொலைபேசி தொலைகாணி ஆகியவற்றில் விளம்பரக்காரர்க்ள நாடும் மக்கள் திரள்.
adagio
n. (இசை) மென்னடை, (வினை) மெதுவாய்ச் செல்லுகிற, (வினையடை) மெதுவாக, அடங்கிய குரலில்.
Adam
n. விவிலிய மரபுக்குரிய முதல் மனிதன், பண்படாமனித இயல்பு.
adamant
n. வைரம், வைரக்கல், வைரம் போன்ற திண்பொருள், காழ், காழ்ப்பு.
adamantine
a. வைரத்தைப் போன்ற, வைரத்தாலான, உடைக்க முடியாத, துளைத்தலாகாத, வளையாத.
Adamite
n. ஆதம் மரபினர், மனித இனத்தவர், உடையின்றித் திரிபவர்.
adapt
v. பொருத்தமாக்கு, மாற்றி அமை, வேறுபடுத்தி அமை, தழுவி எழுது.
adaptability
n. நெகிழ்வுத்திறன், மாற்றி அமைத்துக்கொள்ளக்கூடிய திறன்.
adaptable
a. மாற்றியமைத்துக் கொள்ளத்தக்க, நிலைமைக்குத் தக்கபடி தன்னை வேறுபடுத்திக்கொள்ளக்கூடிய.
adaptation
n. வேறுபடுத்தி அமைத்தல், மாற்றி அமைக்கப்பட்டது, தழுவல்.