English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
armband
n. சட்டைக் கைப்பட்டி, கைதுணியைச் சுற்றி அணியப்படும் துணிப்பட்டை.
armchair
n. கை நாற்காலி, (பெ.) ஆர்வ ஈடுபாடுடைய, கலைவினோதமான, வெளியறிவற்ற, செயல்தொடர்பற்ற.
arme blanche
n. குதிரைப்படையின் வாள் அல்லது ஈட்டி, இவுளிப்படை.
armed
a. கைகள் உடைய, படைக்கலம் பூண்ட, முழுபடைக்கலக் காப்புடைய.
Armenian
n. மேற்கு ஆசியாவிலுள்ள ஆர்மீனியாவைச் சேர்ந்தவர், ஆர்மீனியக் கிறித்தவ சமயக் கிளையினர், ஆர்மீனியர்களின் மொழி, (பெ.) ஆர்மீனியாவுக்குரிய.
armet
n. 15ஆம் நுற்றாண்டுக்கு உரிய கவசத் தலையணிவகை.
armful
n. சிரங்கை, அங்கை அளவு, பிடிக்கக்கூடிய அளவு, குவியல்.
armhole
n. சட்டையில் கைவிடுவதற்கென்று அமைந்துள்ள துளை.
armiger
n. கேடயமேந்தி, கொடிவழிப் படைக்கலங்களை அணியத் தகுதி பெற்றவர்.
armigeral
a. கேடயமேந்திகளுக்கு உரிய.
armigerous
a. கொடி வழிப் படைக்கலங்களை அணியத்தகுதியுடைய.
armilla
n. கைவளை,(தாவ.) காளான் தண்டின் மேல் உள்ள குஞ்சம்.
armillary
a. கைவளைகள் சார்ந்த.
Arminian
n. ஆலந்து நாட்டைச் சேர்ந்த சீர் திருத்தக்கிளைச் சமயத்தவராகிய ஆர்மீனியஸ் என்பவரின் கொள்கையைக் கடைப்பிடிப்பவர், (பெ.) ஆர்மீனியக் கொள்கை சார்ந்த.
Arminianism
n. ஆலந்து நாட்டைச் சேர்ந்த ஆர்மீனியஸ் என்பவரது கோட்பாடு.
armipotent
a. படைக்கல ஆற்றலுடைய.
armistice
n. தற்பொழுதைய போர் நிறுத்தம், போர் ஓய்வு.
armless
a. கையில்லாத, கிளையற்ற, படைக்கலம் ஏந்தாத, வெறுங்கையரான,
armlet
n. காப்புவளை, கையைச்சுற்றி அணியும் பட்டை, குடாக்கடல், கிளையாறு, சிறுகை.