English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
answerable
a. மறுமொழி கூறத்தக்க, பொறுப்புடைய பொறுப்பேற்பதற்குரிய தக்க, நேர் எதிரான, ஒத்திசைந்த, அளவொத்த.
ant-bear
n. எறும்பைத்தின்னும் மிகப்பெரிய தென் அமெரிக்கக் கரடியினம், தென் ஆப்பிரிக்கக் கரடியினம்.
ant-cow
n. 'தேனா', உடலிலுள்ள தேன் கசிவுக்காக எறும்பினத்தால் வளர்க்கப்படும் பூச்சியினம்.
ant-lion
n. முட்டைப்புழுப் பருவத்தில் மணற்குழி செய்து எறும்புகளைப் பொறியிட்டுப் பிடித்துத் தின்னும் சிறகுடைப்பூச்சிவகை.
anta
n. சுவர்ப்பட்டிகைக் கல், வாயிலருகே அல்லது மூலைஓரமாகச் சுவரில் குறுக்காகப் பதிப்பிக்கப்பட்டிருக்கும் பட்டிகைக் கல்,
antacid
n. வயிற்றுப் புளிப்பகற்றும் மருந்து, (பெ.) புளிப்பு மாற்றான, காடித்தன்மைக்கு எதிரீடான.
antagonism
n. எதிர்ப்பு, பகைமை, முரண்பாடு.
antagonist
n. எதிரி, பகைவன், (உட.) எதிர்த்தசை,(பெ.) எதிர்ச்செயலாற்றுகிற.
antagonistic
a. எதிரான, எதிர்ப்பான, மாறான, பகையான.
antagonize
v. எதிரியாக்கு, எதிர்ப்பைத் தூண்டு, எதிர்ச்செயலாற்று, எதிர்ததுப்போராடு.
antakali
n. காரப்பொருளுக்கு எதிர்மாற்றான பொருள்.
antalkaline
a. காரப்பொருளுக்கு எதிர்மாற்றான.
antaphrodisiac
n. சிற்றின்பம் தணிக்கும் மருந்து, (பெ.) சிற்றின்ப வேட்கை தணிக்கிற.
antarctic
n. தென்துருவமடுத்த பெரும் பனிப்பரப்பு, (பெ.) தென்துருவமடுத்த, தென்துருவப்பகுதி சார்ந்த.
ante
-1 n. பந்தயச் சீட்டாட்டக்காரரால் சீட்டுப்பார்ப்பதற்கு முன்னே கட்டப்படும் பூச்சியினம்.
ante meridiem,(a.m.)
முற்பகலில், நண்பகலுக்கு முன்.
ante-bellum
a. போருக்கு முந்திய.
ante-post
a. பந்தய எண் அறிவிப்புக்கு முற்பட்ட.
ante-room
n. முப்ப்பு அறை, முக்கிய அறைக்குச்செல்லும் இடைவழியறை.