English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
zollverein
n. சுங்கக்கூட்டணி, சுங்க நோக்கங்களுக்கான நாடுகளின் கூட்டிணைவு.
zombi,zombie
மந்திரத்தினால் மீட்டுயிர்ப்பிக்கப் பெற்றதாகக் கருதப்படும் விணம், பேசாது விருப்பு வெறுப்பற்று உணர்ச்சியிலாதவராக்கப்பட்ட மனிதர், (இழி.) அறிவுக் கட்டையான மனிதர், உணர்ச்சிக் கட்டையான மனிதர்.
zonal
a. மண்டலமான, மண்டலம் போன்ற, மண்டலங்களாக வரிசைப்படுத்தப்பட்ட, மண்டலத் தொடர்பான, வேளாண்மை நிலநூல் வழக்கில் நில வகையில் மண்டலம் அளாவப் பரவிய நல்லாக்க வளமார்ந்த.
zonary
a. மண்டலச் சார்பான.
zonate,zonated
(தாவ.,வில.) பட்டை வளையங்களையுடைய, பட்டையாக இடப்பட்ட.
zone
n. (மண்.) மண்டலம், வரிமண்டலம், தென்வடலான நிலவுலக ஐம்பெரும் பிரிவுகளுள் ஒன்று, பட்டை வளையம், ஒரே மையமுள்ள இரண்டு வட்டங்களுக்கு இடைப்பட்ட பரப்பு, செவ்விடைப்பட்டி, கோள மேற்பரப்புப் பகுதியில் ஒரு போகு ஆகவுள்ள இரண்டு தளங்களுக்கிடைப்பட்ட பகுதி, நீளிடைப்பட்டி, கூம்பு-நீள் உருளை ஆகியவற்றின் மேற்பரப்பு வகையில் அதன் ஊடச்சுக்குச் செங்கோணமாக அதனை வெட்டும் ஒருபோகு ஆகவுள்ள இரண்டு தளங்களுக்கிடைப்பட்ட செங்குத்தான பகுதி, நீள் வரித்திட்டு, வண்ணப் பரப்பில் பிறிது வண்ணப்பட்டிகை, (பழ.) இடுப்புப்பட்டி, (வினை) வரி மண்டலமாகச் சுற்றி வளைந்துகிட, பட்டை வளையம் போல் சூழ்ந்து கொள், மண்டலங்களாக வகுத்தமை, மண்டலங்களிடையே பரப்பியமை.
zonular
a. மண்டலம் போன்ற, சிறுபட்டை வளையம் போன்ற.
zoo
n. விலங்ககம், விலங்குக் காட்சிச்சாலை, லண்டன் விலங்குக் காட்சிச்சாலை.
zoogamy
n. விலங்குகளின் பாலினப் பெருக்கம்.
zoogeography
n. விலங்கியல் நிலநூல், நிலவுருண்டையின் விலங்கினப் பரப்பீட்டாய்வு நூல்.
zoographer,zoographist
n. விலங்கியல் நில நூலார்.
zoography
n. விரி விளக்கவியல் விலங்கு நூல்.
zooid
n. இடை உயிர்ம அமைவு, விலங்குடனோ செடியினத்துடனோ சாராமல் இரண்டனையுமொத்துப் பளப்பு அல்லது முகிழ்ப்பு முறையால் இனப்பெருக்கமுறும் உயிர்த் திற உரு, கூட்டுயிரிகளின் உறுப்புயிர், (பெ.) நிறை முதிர்வு பெற உயிரியல்புடைய, உயிரியல் சார்புடைய.
zoolatry
n. விலங்கு வழிபாடு.
zoolite
n. புதைபடிவ விலங்குரு, விலங்குப் புதைபடிவ உரு, புதைபடிவமாக்கப்பட்ட விலங்குப்பொருள்.
zoological
a. விலங்கு நூல் சார்ந்த, விலங்கு நூல் பற்றிய, விலங்கு நூலாய்வில் ஈடுபட்டிருக்கிற, விலங்கு நூலாய்வுக்குப் பயன்படுகிற.
Zoological garden
உயிரியல் பூங்கா
zoologist
n. விலங்கு நூலர், விலங்கு நூலாய்வாளர்.
zoom
n. (வான்செலவுத்துறை இழி) விமானச் செங்குத்து ஏற்றச்செலவு, (வினை) விமானத்தைச் செங்குத்தாக மேலே செலுத்தி இயக்கு.