English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
with one accord
ஒருமனப்பட்டு.
withal
adv. அதனுடன், மேற்கொண்டு, அல்லாமலும் கூட, அதேசமயத்தில், உடனாக.
withdraw
v. திரும்பப் பெற்றுக் கொள், பின்னிடு, பின்வாங்கு, பின்னிடை, பின்னுக்கு இழுத்துக்கொள், சுருக்கிக்கொள், உள்வாங்கு, போட்ட பணத்தைத் திரும்ப எடு, சொன்னசொல் மாற்று, சொன்னசொல் திரும்பப்பெறு, விலகிச்செல், பின்செல், விலகிக்கொள், ஒதுங்கிச்சென்றுவிடு, மறைவாகப் போ, பிரிந்து செல்.
withdrawal
n. மீட்டுப்பேறு, திரும்பப் பெறுதல், பின்னிடைவு, பின்வாங்கல், உள்வாங்கல், உள்ளிழுப்பு, விலகல்.
withdrawing
n. பின்வாங்கல், திருமபப் பெறுதல், உட்சுருங்கல், விலகல், பின்னிடைவு, (பெ.) பின்னிடைகிற, பின்வாங்குகிற, விலகுகிற, தனி ஓய்விற்குரிய.
withdrawing-room
n. ஓய்வு அறை.
withe
n. மிலாறு, வளார், முறுக்கின கொடி.
wither
v. வாடு, வதங்கு, வற்றிச்சுருங்கு, சுரித்துப்போ, உலர்சருகாகு, வாட்டு, பொசுக்கு, சருகாக்கு, சுரிக்க வை, உள்ளுரமிழக்கச் செய், ஆற்றலிழக்கச் செய், புதுமை குன்றுவி தளர்வுறு, சோர்வுறு, பெருமையிழ, மடிவுறு, அழிவுறு.
withering
n. வாடல், வதங்குதல், தளர்வு, சோர்வு, வாட்டம், பொசுக்குதல், (பெ.) வாட்டுகிற, பாடுகிற, பொசுக்குகிற, பொசுங்குகிற, தளர்கிற, சோர்கிற, உலர் பதனப்படுத்தப் பயன்படுகிற.
withers
n.pl. மூரி, குதிரைத் தோள்பட்டை எலும்புகளுக்கு இடையிலுள்ள உயர்முகடு.
withershins
adv. இடஞ்சுழியாக, அவமாகக் கருதப்படுந்திசையாக.
withhold
v. தடுத்து நிறுத்து, செயற்படுத்தாமலிரு, கொடுக்க மறு, நிறுத்தி வைத்துக்கொள்.
within
n. உள்ளிடம், உட்பக்கம், உட்புறம், உட்பரப்பு, (வினையிடை.) உள்ளே, உட்புறமாக, உட்பக்கத்தில், உள்ளாக, உள்ளிடம் நோக்கி, உட்பக்கத்தில், சூழப்பட்டு, உட்பட்டு, எல்லைக்கு உள்ளாக, புறஞ் சொல்லாமல், மேற்படாதவாறு, உட்பட்டு, பாதிக்கும் அளவிற்கு அருகே, பாதிக்கப்படுமளவிற்கு அருகே, கால எல்லை கழிவதற்கு முன், எல்லைக்குள்ளாக.
without
n. வெளிப்புறம், புறநிலை, புற ஆதாரங்கள். (வினையிடை.) வெளிப்புறத்தில், வெளிப்புறம் நோக்கி, உள்ளேயிராமல், அடைக்கப்பட்டிராமல், சேர்க்கப்பட்டிராமல், மாமன்றத்திற்கு வெளியே, திறந்த வெளியில், வெளிப்புறமாக, புறம்பாக, புறம்பாக சேர்க்கப்பட்டிருத்தல், எல்லைகளுக்கப்பால், உள்ளேயிராமல், வெளிப்புறத்தில், வெளிப்புற நோக்கி, பெற்றிராமல், இன்றி, இல்லாமல், உடனாக இருக்கப்பெறாமல், முழுதுந் தவிர்த்து, குறைபட்டு, தேவைப்பட்டு, இணைவுறாமல், தொடர்பற்று, இராத நிலையில், என்றாலல்லாமல், இல்லாவிடில், ஒழிய.
withstand
v. எதிர்த்து நில், தாங்கி நில், தாங்கும் ஆற்றல் பெற்றிரு, ஈடு கொடு, தடு, தடைசெய்.
withy
n. கட்டுக்கொடி, முறுக்கிய கட்டுத்தளை, (பெ.) கட்டுக் கொடி போன்ற, கட்டுக் கொடிகளால் ஆன, ஓசிவிழைவான, வலிவிழைவான.
witless
a. அறிவுத்திறமற்ற, பகுத்தறிவில்லாத, பைத்தியம் பிடித்துள்ள.
witling
n. அறிவு குறைந்தவர், போலி அறிஞர்.
witness
n. சான்று, ஆய்வுத் தௌிவு, சான்றுரை, சாட்சியம், சான்றாளார், சாட்சி, நேர்காட்சியாளர், உடனிருந்தவர், தகவல் மெய்பிப்புத் துணைவர், காண்பவர், சான்றுச் செய்தி, எண்பிப்பு ஆதாரம், சான்றுப் பொருள், ஆதாரமாகக் காட்டப்படும் பொருள், உறுதிப்பாடு, உறுதிப்படுத்துஞ் செய்தி, (சட்.) நீதிமன்றத்தில் ஆணையிட்டுச் சான்று கூறுபவர், சாட்சிக் கையொப்பமிடுவர், (வினை.) சான்றாயிரு, சான்றுபகர், சாட்சிகூறு, சாட்சியங் காட்டு, காட்சியாளராயிரு, நேரில் காண், பார், கண்டுணர், பட்டறி, (சட்.) ஆணையிட்டுச் சான்றுரை கூறு, (சட்.) சாட்சிக் கையொப்பமிடு, அறிகுறியாயிரு, எடுத்துக்காட்டு, எதற்கேனுஞ் சான்றாகப் பயன்படு, பார், பார்வையாளராயிரு, ஆவணத்தில் சாட்சிக் கையெழுத்திடு.
witness-box
n. சாட்சிக் கூண்டு.