English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
whisht
int. ஓசையடக்கும் ஒலிக்குறிப்பு.
whisk
n. துடைப்பக் குச்சி, துடைக்குந் தூரிகை, மத்து, முட்டை பால் கலக்குங் கருவி, வாலாட்டம், வால்குஞ்ச அடிப்பு, (வினை.) தூசகற்று, தூசுதட்டு, துடை, முட்டை முதலியவற்றை அடித்துக் கலக்கு, விரைந்து பார்வையினின்று அகன்று செல், வேகமாக ஆட்டு, சட்டெனத் தெறித்து வீசு, வாலாட்டு, துடிதுடித்து வேகமாக ஆடு, விரைவாக அசை.
whisker
-1 n. பூனை மீசைமயிர், பூனையின் ஒருபுற மீசை மயிர்.
whiskered
a. மீசையுடைய, கன்ன மயிர்க்கற்றையுடைய.
whiskers,
n. pl. மீசை, கன்ன மயிர்க்கற்றை.
whiskery
a. கன்னமயிரடைய, மீசை மயிருடைய.
whiskified
a. சாராயங் குடித்த, குடி மயக்கமுடைய.
whisking
n. வாலாட்டம், தெறிப்பாட்டம், தூசுதுடைப்பு, (பெ.) வாலாட்டுகிற, சட்டெனத் தெறித்து வீசுகிற, வேகமாக ஆட்டுகிற, துடிதுடித்தாடுகிற, துடைத்தகற்றுகிற, தூசுதட்டுகிற.
whisky
-1 n. மாத்தேறல், சாராயம்.
whisky-frisky
a. அரைக்கிறுக்கான, அறிவு திரிந்த, மனம்போன போக்கான.
whisky-liver
n. சாராய நச்சால் ஏற்படும் ஈரல்நோய்.
whisper
n. குசுகுசுப்பு, குறுகுறுப்பேச்சு, ஒட்டுப்பேச்ச, காதோடு காதான பேச்சு, மறைவுரை, மறைசெய்தி, தோற்றுவாய் தெரியாத அலர், சலசலவொலி, (வினை.) மெல்லப் பேசு, தாழ்குரலிற் பேசு, இரகசியமாகப் பிறர் அறியாதவாறு பேசு, மறைவடக்கமாக உரையாடு, மறைதூற்றலில் ஈடுபடு, மறைவாக அவதூறு பேசு, மறை சூழ்ச்சியால் ஈடுபடு, மறைவாகச் செய்தி முதலியவற்றைப் பரவவிட, இலை-ஓலை முதலியன வகையில் சலசலப்பு ஒலி செய்.
whisperer
n. காதுகடிப்பவர், இரகசியமாகப் பேசுபவர்.
whispering
n. மறைவாகப் பேசுதல், காதோடு காதாகப் பேசுதல், (பெ.) மறைவாகப் பேசுகிற, காதோடு காதாகப் பேசுகிற.
whispering-dome, whispering-gallery
n. குசுகுசுமாடம், மிக மெல்லிய ஒலியும் எளிதில் முழுத் தொலைவு கேட்கும் இயலமைவுடைய ஒலி பரவு மாடம்.
whist
-1 n. யோகத்திறச் சீட்டாட்டம், நால்வர் அல்லது இருவர் ஆடும் அரைத்திற அரையோகச் சிட்டாட்ட வகை.
whistle
n. சீழ்க்கை, சீழ்க்கையொலி, வாய்க்கருவி, சீழ்க்கயாலிக்கருவி, ஊதல், (வினை,) சீழ்க்கையடி, வாயால் சீழ்க்கையொலி, ஊதலால் சீழ்க்கையொலி எழுப்பு, பறவைகள் வகையில் சீழ்க்கையொலி செய், எறிபடை-காற்று வகையில் விரைவியக்கத்தால் கீச்சிடு, சீழ்க்கையொலிமூலங் கட்டளையிடு, சீழ்க்ககை ஒலியால் அழை, சீழ்க்கையொலியில் பண்திறம் எழுப்பு.
whistle-fish
n. சீழ்க்கை மீன்.
whistle-stop
n. ஊர்தி விருப்ப நிறுத்த இடம், வேண்டின போதுமட்டும் சமிக்கைல் ஊர்தி நிறுத்தப்பெறத்தக்க இடம்.
whistler
n. சீழ்க்கையடிப்பவர், சீழ்க்கை அடிப்பது.