English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
unseam
v. தையல்பிரி, தையல் பிரித்தெடு.
unsearchable
a. தேடிக் காணக்கூடாத, நாடியறியக்கூடாத, மறையியலான, மர்மமான.
unsearched,
a. தேடப்படாத.
unseasonable
a. பருவத்திற்கு உரியதல்லாத, தக்க செவ்வி அல்லாத, வேளைக்கேடான.
unseasoned
a. சுவையூட்டப்பெற்றிராத, பக்குவப்படுத்தப்பட்டிராத.
unseat
v. இருக்கையினின்றும் அகற்ற, குதிரை மேலுள்ள சேணத்திலிருந்து தூக்கியெறி, சட்டமன்ற உறுப்பினர் பதவி இழக்கச் செய்.
unseated
a. இருக்கை பெறாத, இருக்கையில் அமர்ந்திராத, இருக்கைகள் ஏற்படுத்தப் பெற்றிராத, வெளியேற்றப்பட்ட, இருக்கையினின்றும் அகற்றப்பட்ட, இருக்கையிலிருந்து தூக்கியெறியப்பட்ட.
unseemly
a. இனிய தோற்றமற்ற, பார்க்க வழங்காத, ஒவ்வாத, தகுதியற்ற, பண்பில்லாத, (வினையடை.) பண்பில்லாமல், அவலட்சணமாக.
unseen
n. திடு மொழிபெயர்ப்புப் பகுதி, பள்ளிப்பயிற்சி வகையில் மொழிபெயர்ப்புக்காக முன் எச்சரிக்கையின்றிக் கொடுக்கப்படும் ஏட்டுரைப்பகுதி, (பெ.) கண்ணுக்குத் தெரியாத, புலப்படாத.
unsegmented
a. கூறுபடுத்தப்படாத, வட்டுவட்டாகப் பிரிவுறாத.
unselected
a. தேர்ந்தெடுக்கப்பெறாத.
unself
-1 n. ஆன்மா அல்லாதது, அனான்மா, பண்புருவின்மை, பொதுநலப்பண்பு, பிறர்க்குரிய வாழ்க்கைப் பண்பு.
unselfconscious
a. தன்முனைப்புணர்வற்ற, ஆணவமற்ற.
unselfish
a. தன்னலமற்ற, தனக்கெனா வாழாது பிறர்க்கென முயல்கிற, தன்னலமுறுத்த, பொதுநல அவாக்கொண்ட.
unselfishness
n. தன்மறுப்பு, பிறர்நலம் பேணல்.
unselfsihly
adv. தன்னலமின்றி, தன்னலமறுத்து.
unsensational
a. பரபரப்பூட்டாத, மன எழுச்சியைத் தூண்டிவிடாத, திடுக்கிடச் செய்யாத.
unsentenced
a. தண்டனை விதிக்கப்படாத, தண்டனைத் தீர்ப்பு வகையில் முறைப்படி வழங்கப்பெறாத.
unsentimental
a. மேலீடான மன உணர்ச்சி கொள்ளாத, எளிதில் உணர்ச்சி ஈடுபாடு கொள்ளாத, எளிதாக உணர்ச்சி வசப்படாத, திடீர் உணர்ச்சி மேலோங்கும் இயல்பற்ற.