English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
thulia
n. வடமகை, வடமம் என்ற உலோகத் தனிம வகையின் உயிரகை.
thulite
n. நார்வே நாட்டிற் காணப்படுஞ் சாய்சதுர மணி உருவமுடைய கனிப்பொருள்.
thulium
n. வடகம், உலோகத்தனிம வகை.
thumb
n. கட்டைவிரல், கைப் பெருவிரல், விலங்குகளின் கட்டைவிரல், (வினை) பெருவிரலாற் கையாண்டு தேய் அல்லது அழுக்காக்கு, கட்டைவிரல்படக் ககையாளு, கட்டைவிரல் பட்டுத் தேய்வுறுத்து, ஏட்டைக் கட்டை விரல் படுதலால் அழுக்காக்கு, கட்டைவிரலால் மாசுபடுத்து, பெருவிரலால் தொடு, பெருவிரல் தொட்டுக் கையாளு, பெருவிரல் அழுத்து, ஆபாசமாக் கையாளு, கருத்து முனைப்பாக வாசி, பெருவிரஷ்ல் சைகை செய், இசைப்பெட்டியின் விரற்கட்டைகளை நயமின்றிக் கையாளு, அருவருப்பாக இசைமிழற்று,.
thumb-blue
n. சிறு கட்டிவடிவ நீலச்சாயம்.
thumb-index
n. ஏட்டோரக் கைத்தடவரிசை.
thumb-piece
n. பெருவிரலாலழுத்தத்தக்க குமிழ், பெரு விரல் வைக்க இடந்தருங் கூறு.
thumb-print
n. துப்பு அறியப் பயன்படும் பெருவிரற் சுவடு, ஆள் இனமறியப் பயன்படுத்தப்படும் பெருவிரல் அடையாளம்.
thumb-tack
n. ஓவியர் குத்தூசி, ஓவியத்தானைப் பட்டியில் குத்திவைப்பதற்கான கருவி.
thumbed
a. பெருவிரலினையுடைய, பெருவிரல் தடம்பட்ட, கைபட்டுத் தேய்வுற்ற.
thumbless
a. பெருவிரலற்ற.
thumbpot
n. சிறு பூக்குடுவை.
thumbscrew
n. விரற்கழு, பெருவிரற் கிட்டி, கைப்பெருவிரல்களை நசுக்கிச் சித்திரவதை செய்யும் முற்காலக் கருவி.
thumby
a. பெருவிரல் அடையாளத்தால் அழுக்குற்ற, பெருவிரல்போன்ற, அருவருப்பான தோற்றமுடைய, ஆபாசமாக நடந்துகொள்கிற, அருவருப்பாக இயங்குகிற.
thummim
n. வாய்மொழித் தாயித்து உரு, குறி சொல்வதற்குப் பயன்படும்படி யூத உயர் மதகுரு மார்ணியில் வைத்திருந்து இரு தாயித்துருக்களுள் ஒன்று.
thump
n. பேரடி, பலத்த அடி, (வினை) மொத்து, நையப்புடை.
thumper
n. செம்மையாக அடிப்பவர், பலமாக மொத்துவது.
thumping
n. மொத்துதல், (பெயரடை) மிகப்பெரிய.