English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
throw-away
n. இலவசத் துண்டுவிளம்பரம், இலவசத்துண்டுவிளம்பர ஏடு, பத்திரிகைத்துறைச் செய்தி வெளியீடு.
throw-back
n. மரபு மூலப் பின்னெறிவு, மூலமரபின் பண்புக்குப் பின்னிடைதல், மரபுமூலப் பின்னெறிவுச் செய்தி.
throw-off
n. வேட்டைத்தொடக்கம், பந்தயத்தொடக்கம்.
throwing
n. எறிவு, (பெயரடை) எறிகிற.
throwing-table
n. குயவர் சக்கரம்.
thrown
v. 'த்ரோ' என்பதன் முடிவெச்சம்.
thrown-out
n. வேண்டாப்பொருள் எறிவு, வேண்டாது எறிந்த பொருள்.
thrown-silk
n. பட்டு முறுக்கிழை.
throwster
n. பட்டிழை முறுக்குபவர்.
thrum
-1 n. பாவிழைத் தொங்கல் விளிம்பு, பாவு வெட்டியெடுக்கப்பட்ட பிறகு தறியிலிருக்கிற நுல் தொங்கல், பாவிழைத் தொங்கல் நுல், விடுநுல், உதிரி இழை, உதிரிஇழைக்குஞ்சம், இழைநுனிப் பகுதி, துரட்டு இழைத் துணுக்கு, கழிவுநுல், நுல் கழிவு, (வினை) கழிக்கப்பட்ட நுல்கொண்டு ஆக்கு, கழிவுநுல்கொண்டு ஓரமிடு, நுல் கழிவினால் பொதிவுசெய்.
thrummy
a. பாவிழைத் தொங்கலாலான, கழிவுநுல் போன்ற, தளர் தொங்கலிழை போன்ற.
thrush
-1 n. பாடும் பறவை வகை.
thrust
n. நெக்கித் தள்ளுகை, உந்துகை, துருத்தி நீட்டுகை, குத்தித் தாக்குகை, தள்ளுவிசை, நெக்காற்றல், (படை) பகை அணி ஊடுருவு முயற்சி, வலிந்த படைக்கலக் கூர்முனைத்தாக்கு, இடிப்புரை, குத்துரை, சொட்டுரை, விமான உந்துவிசை, (க-க) பாரப் புடைவிசை, தாக்கு விசைப்பு, கட்டுமனக் கூறுகள் ஒன்றன் மீது ஒன்றன் பளுச்சென்று தாக்கும் விசை, பாரவிசை, சுரங்கத்தூண்கள் மேற்பளுத் தாங்காது நொறுங்குதல், உந்துவிசை வானொலித்துறையில் ஏவுகலத்தினை முன்னோக்கி உந்தும் இயந்திரவிசை, (வினை) நெக்கித் தள்ளு, திடுமென உந்தித் தள்ளு, குத்து, திடுமெனக் குத்தி ஊடுருவு, தள்ளிக்கொண்டு செல், முந்திக் கொண்டிரு, முந்திக்கொண்டு செல், புகுத்து, தகாமுறைத் தலையீடு உண்டுபண்ணு, புகு, தகாத் தலையீடுசெய், வலிந்து உட்செலுத்து, வலிந்து உட்செல்.
thrust-block
n. குழைமுட்டு, சுழல் பொறிகளில் சுழலச்சின் முனையழுத்தத்தைத் தாங்குவதற்கான குழைகுண்டு அடிமுட்டு.
thrust-hoe
n. மண்கோரி, உந்தித் தள்ளிச் செயற்படுத்தப்படும் மண்கிளறு கருவி.
thruster
n. நெக்குபவர், தள்ளுவது, உந்தித் தள்ளிக் கொண்டு செல்பவர், தலையிடுபவர், இடையே குறுக்கிடுபவா, முந்து இடக்காளர், நெருக்கியடித்துக்கொண்டு முந்துவதனால் மற்றவர்களுக்கோ வேட்டைநாய்களுக்கோ இடர் விளைக்கும் நரிவேட்டைக்காரர்.
thud
n. மெத்தொலி, மென் பொருள் வீழ் ஒலி, (வினை) மெத்தொலி செய், மெத்தொலியுடன் விழு.
thug
n. கொள்ளைக்காரர், முற்கால இந்தியக் கொள்ளைக்கூட்டத்தினர், கழுத்தறுப்பாளர், வழிப்பறியவர், போக்கிரி.
thuggee, thuggery, thuggism
வழிப்பறிக் கொள்ளை.