English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
teacher
n. கல்வி ஆசிரியர், கணக்காயர்.
teachership
n. கல்வி ஆசிரியர் பணி, கணக்காயர் நிலை.
teaching
n. கற்பித்தல், படிப்பினை, பாடம், கற்பிக்கப்பட்ட செய்தி, கற்பித்த மெய்ம்மை, போதிக்கப்பட்ட கோட்பாடு.
teachnical
a. தொழில் நுட்பமான, தனிததுறைக்குரிய, தொழில் துறை சார்ந்த, தொழில் நுட்பத் துறை சார்ந்த, இயல் நுட்பத் துறைக்குரிய, கலைநுட்பத் துறை சார்ந்த, கலையியலான, சட்ட நுணக்கஞ் சார்ந்த, சட்டமுறைப்பட்ட.
teacupful
a. தேநீர்க் குவளை அளவு.
Teague
n. (இழி) அயர்லாந்து நாட்டவர்.
teal
n. குறுவடிவ நன்னீர் வாத்துவகை.
team
n. கூட்டணி, ஒருங்கு ஒரு தரப்பாக ஆடும் விளையாட்டுக் குழுமம், ஒருதரப்பு ஆட்டக்குழு, குடும்பு, ஒருங்கிணைவான ழிலாளர் இணைகுழு, பிணையல், ஒன்றாக நுப்த்தில் பிணைக்கப்படும் விலங்கு தொகுதி, அணி வரிசை, ஒருங்கு பறக்கும் பறவைகளில் இணைகூட்டு வரிசை, (பே-வ) கலப்பை இழுப்புச்சங்கிலி (பே-வ)மூ சங்கிலி, (வினை) குடும்பினுக்கு வேலையளி, தொழிலாளர், குழுவின் தொழிற் குத்தகையொத்த குடும்பன் வாயிலாகக் குழுவுக்கு வேலையமர்த்திக்கொடு, பிணையலிற் குதிரையினை ஒருங்கு பூட்டு, குதிரைகளை நுகத்திற் பூட்டு.
team-spir-it
n. கூட்டணி மனப்பான்மை, கூட்டொருமையுணர்வு.
team-work
n. கூட்டணி முயற்சி, இணைகூட்டுவேலை ஒன்றுபட்ட ஒத்துழைப்பு.
teamer
n. குதிரைப் பிணயைல் ஓட்டி, ஏரில் கட்டிய குதிரைகளை ஓட்டுபவர், குடும்பன், தொழிலாளர் இணைகுழுவின் குத்தகையேற்ற கண்காணி.
teamster
n. குதிரைப் பிணையல் ஓட்டி, ஏரில் கட்டிய குதிரைகளை ஓட்டுபவர், கூட்டணி முதல்வர்.
teamwise
adv. பிணையலாக, விலங்குகள் வகையில் பிணையலாகப் பிணைக்கப்பட்டு, பிணைக்குழு பிணைக்குழுவாக.
teapoy
n. முக்காலி, சிறுமேசை.
tear
-1 n. கிழிவு, கீறுதல், கிழிசல், கீறல், பொத்தல், (இழி) வேகப் பாய்ச்சல், (வினை) கிழி, கிழியச்செய், பிளவுறச் செய், கிழத்து உருவாக்கு. கிழித்தெடு, பிய்த்திழு, பற்றியிழு,. வெட்டியிழு, இழுத்துப்பறி, பறி, பறித்தெடு, சூர்ந்தெடு, இடித்துத் தப்ர், சின்னாபின்னாக்கு, குலைவி, பிளவு உண்டுபண்ணு, வேற்றுமை உண்டுபண்று துயர்க்காளாக்கு, அலைக்கழிவுறுத்து, கிழிபடு, கிழிசலாகு, கீறலுக்கு ஆளாகு, பிளவுறு, வேகமாகப்பாய், பாய்ந்தோடு, பாய்ந்து செல், துளைத்துச் செல், மூர்க்கமாகச் செயலாற்று, சீறியெழு, சீறிவிழு, (பே-வ) பரபரப்புடன் செல், (இழி) ஆளின் நல்வாய்ப்புக் கெடு, (இழி) திட்டங்குலைவி, (இழி) அழி, இறுதிக்கேடு செய்துவிடு.
tear-duct
n. கண்ணீர் நரம்புக்கால், கண்ணீர் நரம்பிழை.
tear-gas
n. கண்ணீர்ப் புகை.