English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
tawdrily
adv. வெறும் பகட்டாக.
tawdry
n. போலிப் பகட்டுப்பொருள், தகுதியற்ற பகட்டணி ஒப்பணைப் பண்பு, (பெயரடை) வெறும் பகட்டான, உள்ளீடற்ற, போலித் தோற்றமுடைய, தகுதியற்ற வெறும் பகட்டணி பூண்ட.
tawer
n. தோல் வெண் பதனீட்டாளர்.
tawery
n. தோல் வெண்பதனீட்டகம், தோல் வெண்பதனீட்டுத் தொழில்.
tawniness
n. பழுப்பு நிறம்.
tawny
a. பழுப்பு மஞ்சளான, தோல் பதனீட்டு நிறமான.
tawsm, tawse
தெறிவார், குழந்தைகளை அடிக்கும் பிளவுத்தோல் வார்.
tax
n. வரி, திறை, கடுஞ்சுமை, பெரும் பாரம், தாங்க முடியாத் தொல்லை, பெருங்கட்டம், துயர்க்கடமைச்சுமை, (வினை வரி விதி, வரி மதிப்பிடு, தாங்க முடியா நிலைப்படுத்து, வரி விதிப்பிற்குரிய ஆள் பதிவுசெய், கடும்பளுச் சமந்து, வற்புறுத்திக் கோரு, வற்புறுத்திப் பெறு, வலிந்து செயலாற்றுவி, குற்றஞ் சாட்டு, (சட்) இசைவளிப்பது அல்லது மறுப்பது முன்னிட்டு மதிப்பினங்களை ஆய்வுசெய்.
tax-collector
n. வரி வசூலிப்பவர், தண்டலர்.
tax-farmer
n. வரிக் குத்தகையாளர்.
tax-free
a. வரியற்ற, இறையிலியான.
taxability
n. வரி விதிக்கத்தக்க தன்மை.
taxable
a. வரிவிதிக்கத்க்க.
taxableness
n. வரி விதிக்கத்தக்க நிலையுடைமை.
taxed-cart
n. சிறுவண்டி வகை, வரிச்சலுகை வண்டி, குறைவரி அல்லது முழு விலக்குக்குரிய உழவு-வாணிக வகைக்கான இருசக்கர வண்டி.
taxeme
n. (மொழி) இலக்கணச் சிறுக்கக்கூறு.
taxi
n. வாடகை மோட்டார், வாடகை விமானம், (வினை) வாடகை உந்துவண்டியிற் செல், வாடகை உந்து வண்டியில் இட்டுச்செல், விமானத்தை வானேறுமுன் நிலத்தில்இயக்கு. விமானத்ததை வானேற்று முன் நீரில் இயக்கு.
taxI dancer
n. காசுக்குக் கூடியாடும் மகள்.