English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
trioxide
n. (வேதி) மூவுயிரகை, உயிரக அணுக்கள் மூன்று கொண்ட சேர்ம வகை.
trip
n. சிறு பயணம்,. சிற௯ கடற்செலவு, சிற்றுலா, சிறுநடை, சிறுதொலைப் போக்குவரவு, இன்பப் பயணம், மென்னய நடனம்., நடை இடறுகை, கால்தடுமாற்றம், இடறுவிப்பு, பயணத்தடவை, (வினை) மென்னய நடையிடு, மெல்லென ஓடு, சிறு பயணம் மேற்கோள், இன்னாலாச் செல், நடை தடுமாறு, வழுவு, நேர்மை திறம்பு, காலிடற வை, கையுங்களவுமாய்ப் பிடி, (கப்) நங்கூரந் தளர்த்து, (கப்) பாய்மரக் கைகளைக் கிடை நிலையிலிருந்து நிமிர் நிலைக்கு மாற்று, இயந்திரத்தடையைத் திடீரென விலக்கி ஓடவிடு.
trip-hammer
n. சாய்வுச் சம்மட்டி.
tripartition
n. முக்கூட்டு ஒப்பந்தம், முப்பாற் கட்டுப்பாடு, முப்படி உடன்படிக்கை.
tripatite
a. முப்பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட (தாவ) இலை வகையில் அடிவரை முப்பிரிவாய்ப் பிரிந்த, மூன்று கட்சிகளிடைப்பட்ட, மூவரிடைப்பட்ட.
tripe
n. எருதின் அடிவயிற்றிறைச்சி, முதன்மைக் குடலிறைச்சி, கழிவுக் குடற்கொடி, (இழி) கீழ்த்தரப்பொருள்.
tripeman
n. மாட்டுக் குடலிறைச்சி தாயரிப்பவர், மாட்டுக் குடலிறைச்சி விற்பவர்.
tripery
n. எருதுக் குடலிறைச்சி விற்குமிடம், எருதுக் குடலிறைச்சி தயாரிப்பிடம்.
tripetalous
a. (தாவ) மூவிதழ்களையுடைய.
tripewife, tripewoman
n. மாட்டுக் குடலிறைச்சி விற்பவள், மாட்டுக் குடலிறைச்சி தயாரிப்பவள்.
triphibian
n. நில-நீர்-வான் ஆகிய மூவழிகளிலும் செல்லத்தக்க.
triphthong
n. (ஒலி) மூவிணை உயிரொலி.
triphyllous
a. மூவிலைகளையுடைய.
triplane
n. முத்தள வானுர்தி, ஒன்றன்மீதொன்றாக முத்தளங்களையுடைய விமானம்.
triplet
n. முன்றன் குதி, ஒத்திசைக்கும் மூன்று பாவடித் தொகுதி, (இசை) இரு சுர நேரத்தில் ஒருங்கிசைப்பாக இணைக்கப்படும் முச்சுரத்தொகுதி.
triplicate
n. முப்படித்தொகுதி, (பெயரடை) மும்மடியான, முப்படியான, (வினை) மும்மடங்காக்கு, முப்படியாக்கு.
triplication
n. முப்படியாக்கம, முப்படித்தொகுதிக்குரிய மறுமொழி.
triplicature
n. முப்படியாக்கம்.
triplice
n. முக்கூட்டு ஒப்பந்தம்.
triplicity
n. மூன்றாய் உள்ள நிலை, மும்மடி நிலை.