English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
torch
n. கைப்பந்தம், கைப்பந்த மின்விளக்கு, சுளுந்து, ஒளிக்கம்பம், (வினை) பந்தங் காட்டு, பந்தத் துணைக்கொண்டு ஒளிகாட்டு, பந்தத் துணைக்கொண்டு வழிகாட்டு.
torch-bearer
n. பந்தமேந்தி, ஒளிகாட்டி, வழிகாட்டி, முனைவர், புதுவழி முனைந்து பின்மரபினருக்கு வழிகாட்டுபவர், முன்னணித் தொண்டர், புத்தறிவு கொளுத்தியஹ்ர்.
torch-fishing
n. இராப்பந்த மீன்வேட்டை, இரவிருளிற்பந்தத் துணைக்கொண்டு செய்யும் மீன்வேட்டை.
torch-race
n. பந்த ஒளி ஓட்டப் பந்தயம்.
torch-singer
n. காதற்புலம்பு பாடற்காரிகை, காதலன் கைதுறப்பால் புலம்பிப்பாடும் அணங்கு.
torch-song
n. காதற்புலப்பப் பாடல், 1ஹீ30-ஆம் ஆண்டில் பொதுமக்களார்வப் பாராட்டுப்பெற்ற காதற் கடுவேதனைப் புலப்பப்பாடல்.
torchon
n. கலத்துடைப்புத்துணி.
tore
v. 'டீர்' என்பதன் இறந்த காலம்.
toreador
n. ஸ்பானிய மஞ்சிவிரட்டு வீரர்.
torential
a. விசைமாரியான.
torentially
adv. விசைமாரியாக.
toreutic
a. உலோகச் சித்திரச் செதுக்கணிச் சிற்பம் சார்ந்த, புடைப்பு அகழ்வுச் செதுக்கிழைக் கலை சார்ந்த.
torii
n. ஜப்பானிய ஷிண்டோ கோயில் முப்ப்புவாயில்.
torment
-1 n. படுநோவு, மனவேதனைன, வேதனைதருஞ்செய்தி, கடுந்தொல்லை.
tormentil
n. குருதிப்போக்கு நிறுத்தும் பூண்டுவகை.
tormenting
a. வேதனைப்படுத்துகிற.
tormentor
n. அலைக்கழிப்பவர், வேதனை தருவது, உணவுண்ணுதற்குரிய கவைமுட் குறடு, மரமடிக்கும் பரம்புச் சகடம்.
tormina
n. சூலை, கடும் வயிற்றுவலி.
torn
v. 'டீர்' என்பதன் முடிவெச்சம்.
tornadic
a. சூறைப்புயல் சார்ந்த, சூழல்வளிபோன்ற.