English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
segment
n. வெட்டுக்கூறு, துண்டு, குறுவட்டு, பூழி, அரிகூறு, பிரிகூறு, ஆரஞ்சுப்பழம் முதலியவற்றின் சுளைப்பகுதி, இலையின் இழ்ழ்க்கூறு, பகுதி, பிரிவு, கணு இடைக்கூறு, (வடி.) துணுக்கு வரையுருவின் வெட்டுக்கூறு, துண்டம் பிழம்புருவின் வெட்டுக்கூறு, (வினை.) கூறுபடுத்து, குறுவட்டாகத் துணி, வட்டுவட்டாக அரி, கூறுகூறாக்கு, சுளைசுளையாகப் பிரி, (கரு.) கூறுகூறாகப் பிளவுறு(கரு.) பகுதிபகுதியாகப் பிரிவுறு, (உட்.) மரபுயிர் மொக்குகளால் இனம் பெருக்கு.
segment-gear
n. சக்கரப் பல்விற்கூற்று விசைப்பொருத்து சுற்றளவின் ஒரு பகுதியில் மட்டும் பற்களைக் கொண்ட இயக்கு சக்கர விசைப் பொருத்து.
segment-rack
n. வளைகோல் பல்விசைப் பொருத்து.
segment-saw
n. பற்சக்கர இரம்பம்.
segment-wheel
n. விற்கூற்று விசைப் பற்சக்கரம்.
segmental
a. வெட்டுப்பகுதிக்குரிய, தனித்தனிக் கூறு சார்ந்த, வெட்டுப் பகுதி இயல்பான, தனித்தனிக்கூறியல்பான, கூறுகளாலான, கூறாக்கங் கொண்ட, கூறுகூறுகப் பிரிக்கப்படக்கூடிய, விட்டத்தின் வில்வரைக்கூறான, வில்வரைக் கூறுவடிவமுடைய, வில்வரைக் கூறுகளடங்கிய, வளையக்கூறுகளாலான, வளையக்கூறுகள் தோறும் காணப்படத்தக்க.
segmental arch
n. மையம் உள்ளடங்கலாயில்லாத பிறை வில்வளைவு.
segmental valve
n. திருகு தடுக்கிதழ்.
segmentary
a. கூறுகூறான, கூறாக்கமுடைய, கூறுபோன்ற, வெட்டுப்பகுதிக்குரிய.
segmentation
n. கூறுபடுத்துதல், கூறுபாடு, கூறாக்கம், பிரிவமைவு, கூறுபாட்டமைவு முறை, (கரு.) கரு உயிர்மப்பிளவீடு, (கரு.) கரு உயிமக் கூறுபாட்டுப் பெருக்கம்.
segmented
a. கூறுகளாகப் பிரிவுற்ற, கூறுபாட்டடையாளங்களையுடைய, கூறுகளாலான, கூறுகளால் இணைக்கப்பட்ட.
segregate
a. தனிப்படுத்தப்பட்ட, பிரித்துவைக்கப்பட்ட, (வில்.) தனி முழுமையான, கொத்திணைவற்ற, (வினை.) தனியாக ஒதுக்கு, தனிமைப்படுத்து, கூட்டிணைவிலிருந்து, பிரித்துவை, (இய.) மணியுருவாக்க வகையில் பொதுப்பரப்பிலிருந்து பிரிந்து மையங்களில் அல்லது பிளவு வரைகளில் கூடியுருவாகு.
seiche
n. வளிமாற்ற அசைவியக்கம், வளி அழுத்தமாறுதல் காரணமாக ஏரிநீரில் ஏற்படும் அசைவாட்டம்.
Seid
n. இஸ்லாமியரிடையே நபிநாயகத்தின் மகள் வழி மரபுக் குழுவினர்.
Seidlitz powder
n. மல இளக்க மருந்துத்தூள் வகை.
seigneur, seignior
பண்ணைத்தலைவர், பெருமகன்.
seigniorage
n. பண்ணை முதல்வர் தனியுரிமைக்கூறு, மேலாண்மைக்கூறு, தங்கச்சுரங்கத்தில் பண்ணை மேல்வளர்க்குரிய ஊதியப்பங்கு, மன்னர் காணி, அரசர் சிறப்புரிமைப் பங்கு, கம்பட்ட சாலைக்காக வாங்கும் கட்டித் தங்கத்தில் விழுக்காடாகக் கொள்ளும் முடியுரிமை கூறு.
seigniorial
a. பண்ணைத் தலைவருக்குரிய, பெருமகனுக்குரிய.
seigniory
n. பண்ணைத் தலைமை, மேலாண்மைத் தனியுரிமை,பண்ணை முதல்வர் ஆட்சிப்பரப்பு எல்லை, இடைநிலைக்கால இத்தாலிய நகரக் குடியரசின் நகராட்சி அவை.
seine
n. பார வலை, மேலே மிதவைகளையும் அடி நுனியில் பாரங்களையும் உடைய பெரிய மீன்வலை, (வினை.) பார வீச்சிழுப்பு வலைகொண்டு மீன்பிடி, பார வீச்சிழுப்பு வலை வீசு.