English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
seedwool
n. பருத்தி, விதை பிரிக்கப்படா நிலையிலுள்ள கொட்டைப் பஞ்சு.
seedy
a. விதைகள் நிறைந்த, மலர்ச்சிநின்று காய்ப்பருவவளர்ச்சியுடைய, விரைவளர்ச்சியுடைய, எதிர்பார்த்த விளைவுவகையில் ஏமாற்றந் தருகிற, அருவருப்பான வளர்ச்சியுடைய, அருவருப்பான, கந்தலான, கந்தலாடையணிந்த, சத்தழிந்த, வீணழிவான, நோய், நலிவுற்ற, சணல்வகையில் விதை யெடுக்காத, விதையுட்கொண்ட, விதை சணல் மணமூட்டப்பட்ட, பழத்தேறல் வகையில் களைகளாற் பெறப்படுவதாகக் கூறப்படும் நறுமணச்சுவை வாய்ந்த.
seedy-toe
n. குதிரைக்காலடி நோய்.
seek
v. தேடு, நாடிச்செல், நாடி உழை, விரும்பு, பெற விரும்பு, செய்யவிரும்பு, கண்டுபிடி, கண்டெய்த விரும்பு, கண்டுபிடிக்க முயலு, முயற்சி செய், செய்ய முனைவுறு, ஆராய்,காரணங்களை ஆராய், மெய்ம்மை ஆராய்ந்து தேடு, குறியாகக் கொள், பெறத்தக்க ஒன்றாகக் கருது, விசாரி, பற்றிக்கேள், வேண்டிக்கொள், செஞ்சு, காதலில் விரும்பி நாடு, வேட்டையில் கொன்றதை மீட்டுக் கொணர், (படை.) எதிர்த்துத் தாக்குவதற்காக முன்னேறு.
seek-no-further
n. குளிர்காலத்தில் கனிதரும் செந்நிற ஆப்பிள் வகை.
seeker
-1 n. தேடுவோர், பேரார்வலர், விருப்பமிக்கவர், ஆராய்ச்சி நாட்டமுடையவர், அறுவைக்கிளறு கருவி, ஆய்வுத்தொலை நோக்காடி.
seel
v. (செய்.) கண்ணை மூடு, பருந்து போன்ற பறவையின் கண்ணைத் தைத்து மூடு, ஏமாற்று.
seem
v. தோன்று, தெரியவரலாகு, மேலீடாகத் தென்படு, போலித் தோற்றமுடையதாயிரு, மேலீடாகக் காணப்பெறு, போலிரு, ஐயத்துக்கிடமாக அறியப்படு, உளத்துக்குச் ழரியாகப்பட, மொத்தத்தில் நல்லதாகப் படு, பொதுவாகக் கருதப்படு, மெய்யானதாகத் தோன்று, போலிரு, கேள்வியால் தெரியவரலாகு, போலியாயிரு.
seeming
n. வெளித்தோற்றம், போலித்தோற்றம், நினைவு முறைமை, (பெ.) வெளித்தோற்றமான, புறப்பகட்டுத் தோற்றமான.
seemingly
adv. வெளித்தோற்றத்தில், என்பது போன்று.
seemliness
n. வெளிமதிப்பு.
seemly
a. தகுதி வாய்ந்த, மதிப்புக் கெடாத, பொருத்தமான, அழகிய.
seen
v. சி என்பதன் முடிவெச்சம்.
seepage
n. கசிவு, ஒழுக்கு.
seer
-1 n. பார்ப்பவர், மெய்யுணர்வாளர், அறிவர்.
seer-fish, seir-fish
மீன் வகை.
seersucker
n. நீல வெள்ளைக் கோடிட்ட நாரியல் துகில் வகை.
seesaw
n. ஊசற்கட்டை, சாய்ந்தாடி மரம், ஊசற்கட்டையாட்டம், ஏற்ற இறக்க உசலாட்டம், எதிரெதிர் ஏற்ற இறக்க இயக்கம், மாறிமாறிவ இயக்கம், தூங்கிசைப்பு, இழுத்திழுத்துப் பாடும்பாட்டு (பெ.) மேல்கீழ் மாறி மாறிச் சாய்ந்தாடுகிற, முன்பின் ஊசலாடுகிற, எதிரெதிர் எழுந்தாடுகிற, (வினை.) ஊசற்கட்டையாட்டமாடு, மாறிமாறி எதிரெதிராக இயங்கு, ஊசலாடு, மாறிமாறி எதிரெதிராக இயங்குவி, அடிக்கடி கருத்து மாறுபடு, (வினையடை.) மாறிமாறி மேலுங்கீழுமாக, எதிரெதிராக எழுந்து தாழ்ந்து, முன்னும் பின்னுமாக ஊசலாடு நிலையில்.
seethe
v. கொதித்துக் குமுறு, வெந்து குழைவுறு, கொதிக்கவை.