English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
sealskin
n. பதனிடப்பட்ட கடல்நாய்த் தோல், கடல்நாய்த் தோற்போலி.
sealwort
n. அல்லியின் மலர்ச்செடி வகை.
Sealyham, Sealyham terrier
n. அகழ்ஞாளி, சுறுசுறுப்பும் வலிமையுந் தோண்டும் இயல்புமுடைய சிறுநாய் வகை.
seam
n. தையல் விளிம்பு, பலகைகளின் பொருத்து, மூட்டுவாய், பொருத்தின் இடைவெளி, தழும்பு, கைப்புத்தடம், இலைத்தடம், விதை அடித்தழும்பு, வெடிப்பு, வெட்டுவாய், சுரிப்பு, இரண்டு மண்ணியல் படுகைகளின் இடைப் பிரிவுக்கோடு, அடர்த்தியான இரு படுகைகளுக்கிடையேயுள்ள தளர்த்தியான படுகை, (உள்.) எலும்பின் பூட்டுவாய், காயத்தின் தைப்புவாய், (வினை.) விளிம்பு அல்லது கரை அமை, தடமிடு, அடையாளமாகக் குறி, மூட்டுப்பிரி, மேல்வரி அமையுமாறு காலுறை பின்னு, தையலிட்டு இணை.
seam-presser
n. உழவுப்பரம்பு, உழுதபுலம் சமப்படுத்துங்கருவி, தையற்காரர் தேய்ப்புப்பெட்டி.
seamanlike
a. கடலாண்மைத் திறமுடைய.
seamanship
n. கடலாண்மை, கப்பல்செலுத்துங் கலை.
seaming-lace, seam-lace
மூட்டுவாய் மறைப்புப் பின்னல்.
seamstress
n. தையல் மடந்தை.
seamy
a. தையல் மடிப்புவிளிம்பு தெரிகிற, மறுபுறஞ்சார்ந்த, கவர்ச்சி குன்றிய, மறைக்க விரும்புகிற.
seance, sance
குழு அமர்விருக்கை, ஆய்வாராய்வுக்குழு அமர்வு, ஆவித் தொடர்பாய்வுக் குழுவிருக்கை, ஆவித் தொடர்புக் காட்சிக் குழு.
seapiet
n. செந்நிற அலகும் காலுமுடைய நீந்து கடற்பறவை வகை.
seaplane
n. முந்நீர் விமானம், கடலிலிருந்தே ஏறி இறங்கும் அமைப்புடைய வானுர்தி.
seaport
n. பட்டினம், துறைமுக நகரம்.
sear
-1 n. துப்பாக்கித்தடுக்கு, துப்பாக்கிக் குதிரையின் பற்றுக்கொளுவி.
search
n. தேட்டம், தேடுதல், தேடுமுயற்சி, நாடித்திரிதல்,புகுந்தாய்வு, சோதனை, தேர்வாய்பு, பரிசீலனை, ஆராய்ச்சி, தேடிக்காணும் முயற்சி, (வினை.) தேடு, நாடித்திரி, சோதனையிடு, புகுந்தாராய், தடவிப்பார், பரவலாகத் தேர்ந்துபார், துருவி நோக்கு, நுணுகிக் காண முயலு, கிளறிக்காண முயலு, துருவிச்செல், எங்கும் சென்று ஊடுருவு, கூர்ந்தாராய், ஆராய்ச்சி செய், முழுதுறழ்வாகப் பரிசீலனை செய்.
search-party
n. தேடுங்குழு, காணாமற்போனவற்றைத் தேடிக் காண்பதற்குரிய குழாம்.
search-warrant
n. சோதனை எழுத்தாணை.
searching
n. தேடுதல், ஆய்தல், கூர் ஆய்வு, ஊடுருவுநோக்கு, துளைப்பு, துளைத்துச் செல்லல், (பெ.) தேடுகிற, ஊடுருவுகிற.