English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
seawithwind
n. கடற்பாசி வகை.
seawoman
n. கடற்கன்னி, கடலணங்கு.
seaworthy
a. கடற்பயணத்திற்குப் பொருத்தமான, கடலோடும் கட்டுர வலிமையுடைய.
sebaceous
a. கொழுப்புச் சார்ந்த, கொழுப்பினை உடைய.
sebestan, sebesten
மருந்தாக முன்பு பயன்படுத்தப்பட்ட திராட்சை போன்ற பழம்.
sec
-1 a. இன்தேறல் வகையில் உலர்வான.
secant
n. வெட்டுக்கோடு, ஒன்றிற்கு மேற்பட்ட இடங்களில் வளைவரையை வெட்டும் நேர்க்கோடு, குறுக்கை, வட்டத்தில் தொடுகோட்டின் செவ்வெட்டுக் கோட்டிற்கும் ஆரக்கோட்டிற்கும் இடையே உள்ளவீதம், செங்கோண முக்கோணத்தின் பிறிது கோண வகையில் சாய்வரை அடிவரைகளின் வீதம், (பெ.) வரைவகையில் வெட்டிச் செல்கிற.
secateur
n. தழைக் கத்திரிக்கோல், செடிகொடிகளை வெட்டுவதற்கான பெரிய கத்தரிக்கோல்.
secco
n. சுவரோவியம், உலர்சாந்த மீது தீட்டப்படும் வண்ண ஓவியம்.
seccotine
n. பசைநீர், பசைக்கு மாற்றீடாகப் பயன்படுத்தப்படும் நீர்மவகை, (வினை.) பசைநீர் கொண்டு ஒட்டு.
secede
v. பிரிந்து செல், குழுவின் உறுப்பினர் பதவியினின்றும் முறையாக விலகிக்கொள், திருச்சபையிலிருந்து வெட்டிக்கொண்டு செல், கூட்டிலிருந்து விலகிவிடு, அரசியல் அமைப்பிலிருந்து பிரிந்துவிடு.
seceder
n. பிரிந்து செல்பவர்.
secernent
n. (உட.) சுரப்பு உறுப்பு, சுரப்பூட்டும் மருந்து, (பெ.) சுரப்பு ஊக்குவிக்கிற.
secession
n. பிரிந்து செல்லுதல்.
seclude
v. விலக்கிவை, ஒதுக்கிவை, தனிமைப்படுத்து.
secluded
a. ஒதுங்கிய, பிறர் பார்வையிலிருந்த விலகிய, சமுத்யத் தொடர்பற்ற.
seclusion
n. ஒதுக்கிவைப்பு, தனிமை, ஒதுக்கம், சமுதாயத்தொடர்பின்மை, மக்கள் தொடர்பின்மை, தனிநிலை, பிறர் பார்வையிற் படாநிலை, கலந்து பழகா நிலை, ஒதுக்குப்புறஇடம்.
second
-1 n. நொடி, வினாடி, விகலை, கோண அளவு வகையில் கலையில் அறுபதில் ஒரு கூறு, (இசை.) சுர இடைவெளி, (இசை.) இலயம், இடைவெளிச்சுர இயைபு, பந்தய வகையில் இரண்டாமவர், பந்தய வகையில் இரண்டாவது, இரண்டாவது குதிரை, மாதத்தின் இரண்டாம் நாள், அடுத்தவர், அடுத்தது, சிறப்புத் தேர்வில் இரண்டாம் வகுப்பு, சிறப்புத்தேர்வில் இரண்டாம் வகுப்பாளர், இன்னொருவர், இன்னொன்று, மற்போரில் ஒரு பக்கத்தாரின் துணை ஆதரவாளர், ஆதரவாளர், (பெ.) இரண்டாவதான, ஒன்றுவிட்ட, ஒன்றுவிட்டடுத்த, மற்றொரு, மற்றும் இன்னொரு, கூடுதலான, மறுமுறையான, உடன்துணையான, உடன்நிரப்பான, துணைமையான, கீழடங்கிய, இரண்டாம்படியான, அடுத்தபடியான, மூலமல்லாத, கிளைவரவான, கிளை நிலையான, வருநிலையான, பிறிதின் சார்புடைய, போன்றுள்ள, போன்றமைந்த, உருவகவரவான, அணிநிலை வரவான, அடுத்தபடியான, தாழ்நிலையான, கீழ்நிலையுடைய, (இலக்.) முன்னிலையான, பேசுபவர் முன்னின்று கேட்பவரைக் குறித்த (வினை.) ஆதரி, ஆதரித்துரை, வழிமொழி, பின் மொழிந்துரை, ஆதரவு வழங்கு, உதவு, கைகொடுத்து ஆதரி, மேம்படுத்து, மற்போரில் பக்கத்துணைவராகச் செயலாற்று, பின்பற்று, பின்பற்றி நடை, பின்பற்றி ஒப்பிணைவாகு, குறைநிரப்பு, உடனின்று, நிறைவாக்கு, (இசை.) உட்னொத்துநின்று பாடு, (வினையடை.) இரண்டாவதாக, இரண்டாமிடத்தில்.
second- class
a. இரண்டாந்தரமான.
second-adventist
n. இயேசுநாதரின் மறுவருகையில் நம்பிக்கையுள்ளவர்.