English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
scabrous
a. (வில., தாவ.) சொரசொரப்பான மேற்பரப்புடைய, பொருக்குகள் நிறைந்த, மிகு திறம்படக் கையாளவேண்டிய, இதவுக்கேடான, மட்டுமதிப்புடன் கையாள முடியாத.
scaffold
n. சாரக்கட்டு, கட்டிடமெழுப்பும் வேலையாட்கள் பயன்படுத்துவதற்குரிய அழிக்கட்டுமானம், பரண்கட்டு, வேட்டைக்காரர் தங்குமேடை, காட்சிமேடை, காட்சிப் பொருளுக்கான உயர் அழிச்சட்டமேடை, பார்வையாளர்க்கான மேடைக்கட்டு, ஆடரங்கமேடை, வேடிக்கை காட்டுபவர்களுக்கான, மேடைக்கூண்டு, தூக்குமேடை, கோக்கா மரம், நேராக ஆணைக் கொலைஞர் கையாலேயே பெறும் கொலைதண்டனை, பிணக்கூடு, முற்காலங்களில் இறந்த உடலை வைப்பதற்குரிய சட்டம், பிணவைப்புச் சட்டம், இறந்த வேட்டை விலங்குகளின் உடலை வைப்பதற்குரிய அழிக்கூடு, (உயி.) முற்சட்டக்கூடு, கரு, உயிரின் பின்வளர்ச்சிக்குரிய முற்படிவ அமைவு, கூண்டுச்சட்டம், (வினை.) கட்டிடத்திற்குச் சாரக்கட்டுமானம் அமை, மேடைச்சட்டமீது காட்சிக்கு வை, தூக்கிநிறுத்து, பேணிக்கா.
scaffolding
n. சாரக்கட்டு அதல், சாரக்கட்டு, சாரக்கட்டுக்கு வேண்டும் பொருள்கள், ஓவியர் நிலைச்சட்டம், தூக்குமேடைக்குரிய பகுதிகள், காட்சிமேடை, பார்வையாளர் மேடைக்கட்டு, கூண்டுச்சட்டம், மேடைச்சட்டம் மீது காட்சி வைப்பு, தூக்கி நிறுத்தல், பணிகாப்பு.
scaffolding-pole
n. சாரக்கம்பம், சாரக்கட்டைத் தாங்கும் மையத்தூண்.
scaglia
n. இத்தாலிய சிவப்புச் சுண்ணக்கல்.
scagliola
n. ஒப்பனைக்கற் போலியாகச்-செய்யப்படும் பசை நீற்றுக் கலவை வேலைப்பாடு.
scalable
-1 a. மீன்வகையில் செதிக்களகற்றக்கூடிய, விதைகள் வகையில் தோல் தோலாய் உரிக்கத்தக்க, பல்வகையில் கீற்றுக்கீற்றாக அகற்றத்தக்க, உலோகவகையில் சிம்பு சிம்பாக எடுக்கத்தக்க, தோல்வகையில் உரியத்தக்க, உலோக வகையில் தகடுதகடாக வருகிற, தோல்வகையில் வங்கு உருவாகிற, சிம்புசிம்பாக விழுகிற, சிதள்கள் வகையில் அவிழ்ந்து விழுகிற.
scalariform
a. (வில.) பூச்சி இறகு நரம்புகள் வகையில் ஏணிவடிவமான, (தாவ.) மாறிமாறிக் கெட்டியும் தளர்வுமான சிம்புகளால் அமைவுற்ற.
scalawag
n. கறளை விலங்கு, போதிய வளர்ச்சி பெறாத உயிர், தீனியின்றி ஒட்டிக்குறுகிய விலங்கு, மூளையற்றவர், கவைக்குதவாதவர், கயவர், போக்கிரி.
scald
-1 n. சுடுபுண், ஆவிப்பெருக்கம், (வினை.) பொள்ளவை, சுடுபுண் உண்டுபண்ணு, ஆவிப்பொக்குளம் உருவாக்கு, கொதி நிலைக்குச் சற்றுக்குறைவாகச் சூடாக்கு, கொதிநீர்விட்டுக் கழுவு.
scalded
a. கொடு வெஞ்சூடாக்கப்பட்ட.
scalding
n. பொள்ளவைப்பு, சுடுதல், (பெ.) கொடு வெஞ்சூடான.
scaldino
n. இத்தாலிய நாட்ட வழக்கில் மண்தணல் தட்டு.
scale-armour
n. செறிபாளப் போர்க்கவசம்.
scale-board
n. நிலைக்கண்ணாடி-படம் முதலியவற்றின்பின்புற மென்மரப்பலகை.
scale-borer
n. வேம்பாக்குழாய்களிலிருந்து துருப்பொருக்குகளை அகற்றுங் கருவி.
scale-fern
n. செதிள்களையுடைய சூரல் இனம்.
scale-insect
n. செதிற்பூச்சி, செடிகளில் இறுக்கமாக ஒட்டிக்கொண்டு கேடயம் போன்ற செதிளைச் சுரப்பிக்கும் பூச்சிவகை.