English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
saxhorn
n. (இசை.) பித்தளைத் துளைக்கருவி வகை.
saxifrage
n. வெள்ளை அல்லது சிவப்பு மலர்களையுடைய பாறைச் செடிவகை.
Saxon
n. பிரிட்டனில் கி.பி.5ஆம் 6ஆம் நுற்றாண்டுகளில் படையெடுத்துவந்து குடியேறிய வட செர்மானிய இனஞ் சார்ந்தவர், பிரிட்டினில் குடியேறிய வட செர்மானிய இனங்களைச் சார்ந்தவர், பிரிட்டனில் குடியேறிய வட செர்மானியர் இனமொழி, வடக்கு செர்மானியிலுள்ள சாக்ஸன்இன மொழி, பண்டைய (கி.பி.1066க்கு முற்பட்ட) ஆங்கிலமொழி, ஆங்கிலேயரின் முன்னோரான செர்மானிய இனத்தவர், ஆங்கிலேயரின் முன்னோரான செர்மானிய இனத்தவர், ஆங்கிலேயரின் மூதாதையர், ஆங்கில மொழி பேசுபவர், ஆங்கில இன மரபினர், தற்காலச் சாக்ஸனி நாட்டவர், ஆங்கிலமொழியின் செர்மானிய இனக்கூறு, (பெ.) பழங்கால ஆங்கிலமொழி சார்ந்த, ஆங்கிலேயரின் மூதாதையரினஞ் சார்ந்த, ஆங்கில மொழிமரபு சார்ந்த, ஆங்கிலேயரின் முன்னோரான செர்மானிய இனத்தவர் சார்ந்த,பழங்கால ஆங்கிலமொழியிலுள்ள.
Saxondom
n. ஆங்கில இனம் பரவியுள்ள உலகப்பகுதி, ஆங்கில மொழி பேசும உலகப்பகுதி.
Saxonism
n. தூய ஆங்கில மரபு, பழங்கால ஆங்கில மொழி மரபு, தூய ஆங்கிலப் பழக்க வழக்கங்களையே கைக்கொள்ளும் பான்மை.
Saxonist
n. பழங்கால ஆங்கில மொழிப் புலஹ்ர்.
Saxonize
v. ஆங்கில இனமரபு ஆக்கு, ஆங்கில இனமரபு மேற்கொள்.
saxony
n. நேர்த்தியான கம்பளிவகை, நேர்த்தியான கம்பளித் துணிவகை.
saxophone
n. (இசை.) கூடிசைக்குழுமக் கருவி.
say
-1 n. கூற்று, கூறவேண்டுங் கருத்து, கூறவேண்டுவதைக்கூறுவதற்கான வாய்ப்பு, கருத்து முடிவில் பங்கு, (வினை.) சொல்லு, வாய்விட்டுரை, கருத்து வெளியிடு, கருத்துக்கூறு, தெரிவி, கருத்தறிவி, ஓது, ஒப்புவி, எடுத்துரை, பேச்சுத்தொடர், குறிப்பிடு, குறித்துரை, உறுதியாகக் கூறு, துணிந்து கூறு, தீர்மானமாகக் கூறு, வற்புறுத்தியுரை, வாக்குமூலஞ் செய், சாற்று, செப்பு, விடையாகக்கூறு, வகுத்துரை, சொல்லாடு, சொல்வகுத்துரை, சொல்வடிவங்கொடு, கணித்துரை, உத்தேசமாகக் கூறு, என்றுரை, என்று எடுத்துக்கொள், ஊகமாகக் கூறிக்கொள், சான்று கூறு, வாத ஆதாரமாகக் கூறு, கூறிக்கொள், மாதிரியாகக் கொள்.
Sayid
n. இஸ்லாமிய வழக்கில் நபிநாயகத்தின் புதல்விபாதிமாவின் மரபினர்களில் ஒருவர்.
saying
n. சொல்லுதல், பழஞ்சொல், முதுமொழி.
sbi rro
n. இத்தாலிநாட்டுக் காவல்துறையினர்.
scab
n. அசறு, கடுந்தழும்பு, சிரங்கு, கால்நடைச்சொறி, தாவரப் பூஞ்சைக்காளான் நோய், கசடன், அழுக்குப்பிடித்தவன், கருங்காலி, வேலை நிறுத்தத்தில் சேர மறுப்பவர், தொழிற்சங்கத்தில் சேர மறுப்பவர், வேலை நிறுத்தஞ் செய்தவருக்குப் பதிலாக வேலைக்குச் செல்பவர், (வினை.) புண்வகையில் பொருக்கு வை, கருங்காலியாக நட.
scabbard
n. வாளுறை, கத்தியுறை.
scabbard-fish
n. ஓலைவாளை, வாளுறைபோல மின்னும் கடல்மீன் வகை.
scabbed, scabby
சொறி பிடித்துள்ள, சிரங்கு நோய்க்கு ஆளான, இழிந்த, கொடிய, பயனற்ற.
scabiious
n. பல்வகை வண்ணமுடைய காட்டுச்செடி வகை, (பெ.) சொறி சிரங்கு பிடித்துள்ள, பொருக்குகள் நிறைந்த.