English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
stuck-up
a. (இழி.) மாட்டிக்கொண்டு தவிக்கிற.
stud
-1 n. குமிழ், குமிழ் முகப்பு, ஒப்பனைக் குமிழ்ப்புடைப்பு, ஒப்பனைக் குமிழ்முனைப்புப் பரப்பு, பெருந்தலை ஆணி, இருதலைக் குமிழ்மாட்டி, கழுத்துப்பட்டை முகப்பின் ஈரிணை தலைக் குமிழ் மாட்டி, வரிச்சலறைப்படும் குத்துக்கழி, தாற்றுமுள், குறுமுளை, குறுங்கிளை, கிளை அடித்தூறு, (வினை.) குமிழ்முகப்புகளால் அணிசெய், குமிழ் முகப்புகளால் வலிவூட்டு, சிதறலாகப் பொருத்து.
stud-bolt
n. மரை திருகாணி.
stud-book
n. குதிரை மரபுவழி ஏடு.
stud-farm
n. குதிரை வளர்ப்புப் பண்ணை.
stud-horse
n. பொலிகுதிரை.
studded
a. பதிக்கப் பெற்ற, நெருக்கமாகப் பொருத்தப்பெற்ற, தூவப்பெற்ற, எங்குஞ் சிதறலாக அமைந்த.
studding-sail
n. (கப்.) மென்காற்றுக்காலத் தொங்கல் மிகைப்பாய்.
student
n. மாணாக்கர், உதவி நிதி பெறும் ஆராய்ச்சி மாணவர்.
studentship
n. மானியம் பெறும் ஆராய்ச்சி மாணவர் நிலை.
studied
a. திட்டமிட்டுச் செய்யப்பட்ட, வேண்டுமென்றே செய்யப்பட்ட, உள்நோக்குடன் மேற்கொள்ளப்பட்ட, மனமார்ந்து மேற்கொள்ளப்பட்ட, செயற்கையான, மனமறிந்த.
studiedly
adv. மனமார, தெரிந்து, திட்டமிட்டு, செயற்கைப் பண்புடன்.
studiedness
n. தெரிசெயல் நிலை, செயற்கை நடைப்பண்பு.
studio
n. கலைவினையரங்கம், கலைக்கூடம், ஓவியர் பணியரங்கம், சிற்பியின் தொழிற்கூடம், படப்பிடிப்பு மனை, நிழற்படத் தொழிலகம், பட எடுப்பு வளாகம், திரைப்பட எடுப்பு அரங்கம், வானொலி பரப்பரங்கம்.
studious
a. கலவியார்வமுடைய, படிப்பீடுபரடுடைய, முயற்சி அக்கறையுடைய, முயற்சி வேட்கையுடைய, மனமார்ந்து செய்யப்படுகிற, முனைத்த அக்கறையுடைய, ஆர்வமிக்க, ஆவல்மிக்க, கடும் உழைப்பு மேற்கொள்கின்ற.
study
n. படிப்பு, கல்வி, வாசிப்பு, ஆராய்ச்சி, ஆழ்நிலை ஆய்வு, ஆழ்நிலை ஏடாய்வு, கூராய்வு, நுண்ணாய்வு, ஐயநிலைத் தேர்வாராய்வு, பயிற்சி ஆய்வு, கலைத்துறைப்பயிற்சிப்பணி, இசைப்பயிற்சி வாய்பாடு, ஓவியர் பயிற்சித் தேர்ச்சிப்படம், அறிவாராய்ச்சித்துறை, ஆராய்ச்சிக்குரிய துறை, அறிவாராய்ச்சி ஏடு, கலை ஆராய்ச்சிஏடு, ஆராய்ச்சி ஏடு, ஆராய்ச்சியின் முதற்படி முயற்சி, விருப்பார்வம், ஆர்வ உழைப்பீடுபாடு, ஆர்வமுயற்சி, ஆர்வமுயற்சிக்குரிய ஒன்று, ஆர்வக்கவலைக்குரிய செய்தி, சிந்தனைக்குரிய செய்தி, நடிப்புக்குரிய உருப்பாடம், நடிப்புப்பகுதி மனப்பாடஞ் செய்பவர், ஆய்வறை, படிப்பறை, கலைப்பணியறை, (வினை.) கருத்தூன்றிப் படி, கூர்ந்து பயிலு, ஊன்றி அறிவுத்திறம் பெறப் பாடுபடு, அறிவு நோக்கமாகக் கொள்ளு, கல்வி பயிலு, தேர்வுநாடிப்படி, தேர்வுத்துறைநாடிப் பயிற்சி மேற்கொள், ஆராய்ச்சிசெய், அறியமுயலு, தேர்ந்தாராய், மனமார எண்ணிப்பார்த்து வகுத்தாராய்வு செய், ஆலோசனை செய், ஆலோசனைக்கு எடுத்துக்கொள், ஆலோசித்துக் கண்டுபிடி, நுணுகிக்காண், கூர்ந்து கவனி, நோக்கி ஆராய், நுணுகி ஆராய், சிந்தனையுடன் நோக்கு, தன்னைமறந்த சிநதனையில் ஆழ்வுறு, குறித்து அக்கறை கொள், குறித்துக் கவலைப்படு, கருத்தூன்றி முயற்சி செய், செய்து முடிக்கப்பாடுபடு, இடைவிடாது முயலு, இடைவிடாது சமாளிக்க முயற்சி செய், காத்திருந்து கவனஞ் செலுத்திப்பார், மனமார எண்ணிப் பார், செயல் செய்வதன் முன் பிறர் விருப்பம்- உணர்ச்சிகள்-நலச்சார்வு எதிர்வுகளை எண்ணிப்பார்.
stuff
n. மூலப்பொருள், ஆக்கமூலச் சரக்கு, மூலப்பொருள் தொகுதி, உணவுச் சரக்கு, சரக்கு, பண்டம், பொருள், கருப்பொருள், சத்து, சாரம், கம்பளிப் பண்டம், பட்டுப் பருத்தி நேரியல் சணலல்லாத துகிற் பொருள், தனிமுறைச் செய்பொருள், தனிமுறைக் கலவை, மருத்துக் கலவை, மூட்டை முடிச்சுத் தொகுதி, பணம், குடிச்சரக்கு, மது, பத்திரிகைப்படி, ஏட்டுப்படி, பத்திரிக்கைச் செய்தி, ஏட்டுச் செய்தி, எழுத்துருவச் செய்தி, செய்தி, கழிபொருள், இழி பொருள், செத்தை, (இழி.) காரியம், வழக்கமான வேலை, (இழி.) புளுகு, ஏய்ப்புரை, வீணுரை, (வினை.) திணித்து வை, அழுக்கி வை, செருகி அடை, நிரப்பு, நிரப்பியடை, வைத்துத்திணி, இடம் நிரப்பு, உணவைத் திணித்தடை, தின்று கொழுக்கவை, பேரூண் கொள், தின்று கொழு, திணித்துப் பெரிதாக்கு, உள் திணித்து உப்பவை, புள்-விலங்கு முதலியவற்றின் வகையில் உள்ளீடகற்றித் தோலில் பஞ்சு முதலியன திணித்துவை, புளுகு.
stuff-gown
n. துணைநிலை வழக்கறிஞர் மேலங்கி, பட்டினாலியலாது கம்பளியாலியன்ற மேலங்கி.
stuffed
a. திணித்து வைக்கப்பட்ட, சேமப்பொருள் நிரம்பிய, உணவுப்பொருள் சேகரம் உடைய, மூக்கடைத்துக்கொண்ட, தொண்டையடைத்துக்கொண்ட.
stuffer
n. அடைப்போன், அமுக்குவோன், விழுங்குவோன்.