English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
struthious
a. நெருப்புக்கோழிக்குரிய, நெருப்புக்கோழி போன்ற, நெருப்புக்கோழியினஞ் சார்ந்த.
strutting
a. தத்தி நடக்கிற, செருக்குநடையுடைய.
strychnia, strychnine
n. எட்டிச்சத்து, முனைத்த தாவர நஞ்சுவகை, நரப்பு மருந்தாகப் பயன்படும் நச்சு மருந்து வகை.
stub
n. மர அடித்தூறு, பல் அடிக்கட்டை, எழுதுகோலின் தேய்ந்த அடிக்குற்றி, நாய்வாலின் தறிகட்டை, கொழுந்தாணி, மொட்டை ஆணி, இலாடத் தேய்விரும்பு, தாள்முறி அடித்துண்டு, (வினை.) தூறை வேராடு கல்லியெடு, அடித்தூறு அகற்று, வெட்டி அடிக்கட்டையாக்கு, அடிக்கட்டையில் அடித்துக் காயப்படுத்து, அடிக்ட்டை மீது மோது, அடிக்கட்டை மோதுவது போல் மொட்டை முனைமீது மோதப்பெறு, புகைச்சுருட்டு அடிக்குச்சினை அழுத்துவித்தவி, அடிக்குச்சினை அவித்தடக்கு.
stub-mortise
n. அரைகுறைப் பொருந்துகுழி அமைவு.
stub-tenon
n. அரைகுறைப் பொருந்து முனை அமைவு.
stubbed
a. தறித்துவிடப்பட்ட, அடிக்கட்டையாக விடப்பட்ட தூறுவடிவான, அடித்தூறு செதுக்கி அகற்றப்பட்ட, அடிக்கட்டை போல மொட்டை மொழுக்கையான.
stubbiness
n. மொட்டை மொழுக்கையாயிருத்தல், அடிக்கட்டை நிறைந்திருத்தல்.
stubbing
n. கட்டையெடுத்தல், கட்டைவிடல், அடிக்கட்டை செதுக்கீடு.
stubble
n. அரிதாள் கட்டை, அரிதாள் கட்டைப்பரப்பு, அறுவடையான வயல், அரிதாள், வைக்கோல், கத்தரித்த முடி, முடி அடிமயிர்க்கற்றை, தாடி அடிக்கற்றை,குறுகக் கத்தரித்த தாடி, மழிப்பின் அடிமயிர்க்கற்றை, கட்டைவிட்ட தாடியின் முரட்டுமழிப்பு, புதர்க்கற்றை, குறுமயிர்க்கற்றை.
stubble-fed
a. அரிதாள் கட்டையிடை வளரும் குறும்புல் தின்று வளர்கிற.
stubble-field
n. அறுவடையான வயல்.
stubble-rake
n. அரிதாள் வாரி.
stubbled
a. அரிதாள் கட்டை போன்ற, அரிதாள் கட்டை போர்த்துள்ள.
stubbly
a. அரிதாள் கட்டை, நிறைந்த அரிதாள் கட்டை போர்த்துள்ள.
stubborn
a. பிடிவாதமான, இசையாத, கீழ்ப்படியாத, முரடான, நெகிழ்வற்ற, எளிதில் உருகாத, எளிதில் இணையாத, வசப்படுத்த முடியாத, அடங்காத.
stubby
a. அடிக்கட்டைகள் நிறைந்த, அடிக்கட்டைகளால் மூடிய, மொட்டை மொழுக்கையான.
stubs
n. pl. ஆணி இலாடம் முதலிய பழைய இரும்புப் பொருட்குவை.
stucco
n. குழைகாரை, சுவர்ப்பூச்சுச் சிற்ப ஒப்பனைக்குரிய அரைசாந்து, (வினை.) குழைகாரை பூசு.
stuck
v. 'ஸ்டிக்' என்பதன் இறந்தகால-முடிவெச்ச வடிவம்.