English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
stroke
-1 n. அறை, அடி, வீச்சு, தாக்கு, அடி அதிர்ச்சி, தாக்கதிர்வு, வீச்சுக்கோடு, கீறல் வரை, கையெழுத்தின் ஒரு கீறல், ஓவியர் வரைக்கீற்று, தூரிகையின் ஒரு கீற்று வரை, மணி அடிப்பொலி, மணி நாவின் ஒரு தாக்கொலி, துடுப்பின் ஓர் இழுப்பு, ஒரு முறை தண்டு வலிப்பு, பின்தண்டு உகைப்பவரின் முன்னோடித் தண்டு வலிப்பு, கையின் ஒரு வீச்சு, இயக்க அசைவின் ஒருதிசைத் தனி வெட்டியக்கம், செயலின் ஒரு வீச்சு, முயற்சியின் ஒரு மூச்சு, ஒருவிசை முறை, நோயின் ஒரு வன்தாக்கு, மின்னல் இடி ஆகியவற்றின் ஒரு திடீர் வீழ்வு, இடரின் ஒரு மோதல், திடீர் வாய்ப்பு நேர்பு, வாய்ப்பின் குருட்டடிக்கூறு, பந்தடி, அருநுட்பம், அருநுட்பம், மேதைமையின் நுண் அருந்திக்கூறு, கணநேரச் செயல், சிறு செயல், சிற்றஞ்செயல், அருவிசைச் செயல், அருவிசை நிகழ்வு, நொடிப்பு, கணம், (வினை.) பின் தண்டுகைப்பவர் வகையில் முன்னோடித் தண்டுவலித்துக் காட்டு, முன்னோடித்தண்டு வீச்சடிப்பு ஒத்துத் தண்டுகை, ஊடுவரையிடு, கோடு அடித்து வெட்டு.
stroking
n. தைவரல், (பெ.) தடவுகிற, தட்டிக்கொடுக்கிற, அன்பளாவலுடைய.
strokingly
adv. தட்டிக் கொடுக்கும் பண்புடன், தைவரும் பாணியில்.
stroll
n. சிற்றுலா, ஓய்வுநேரச் சிறு சுற்றுலா, திரிதரல், அருங்காடசிக்குழுவினரின் சுற்றரவு, (வினை.) சுற்றித்திரி, நாடோடியாகத் திரி, ஓய்வுநேர உலா மேற்கொள், உலாவரல் அருங்காட்சிக் குழுவினராகச் சுற்று.
strolling
n. உலாவரவு, சுற்றித்திரிவு, (பெ.) உலாவரவுடைய, சுற்றித்திரிகிற.
stroma
n. (உயி.) உயிர்ம உட்சட்டம், உயிர்ம உட்பிழம்புச் சட்டக்கூறு சார்ந்த.
stromatic
a. உயிர்ம உட்சட்டஞ் சார்ந்த, உயிர்ம உட்பிழம்புச் சட்டக்கூறு சார்ந்த.
strong
a. வலிமை வாய்ந்த, பலமான, வல்லமை வாய்ந்த, வெல்திறமிக்க, தோலாத, செல்வாக்குமிக்க, செல்திறமிக்க, உடலூமுடைய, உடல்நல உறுதியுடைய, ஆற்றல் வாய்ந்த, திண்ணிய, கெட்டியான, திடமான, உரம் வாய்ந்த, உறுதி வாய்ந்த, கட்டுறுதியான, வளையாத, முறியாத, ஊடுருவ இடந்தராத, உடையாத, கிழியாத, தேய்வுறாத, கலைக்க முடியாத, நிலையான, நிலைநிறுத்தப்பட்ட, தாங்குந் திறமையுடைய, தாக்குப் பிடிக்கக்கூடிய, மாற்றமுடியாத, மாறாத, வன்தாக்குடைய, வலிமையுடன் செயலாற்றுகிற, செயலுக்கமுடைய, ஊக்க உரமுடைய, பயன் முனைப்பான, விளைவூக்கமுடைய, வேகமார்ந்த, முடிவுநோக்கி விரைகின்ற, ஐயுறவற்ற, மயக்க தயக்கமற்ற, பண்பில் மேம்பட்ட, நிறவகையில் முனைப்பான, பேச்சுவகையில் கடுமையான, கடுஞ்சொல் வழங்குகிற, வேதியியல் பொருள்களின் வகையில் இணைவாற்றல் மிக்க, எண்தொகையளவுடைய, செறிவார்ந்த, பிறபொருட் கலப்பு மிகக்குறைந்த, காரமான, மது வகையில் வெறிமிக்க, ஊசிப்போனா, தீவாடையுடைய, புளிப்பான, சொல்வகையில் பொருட் செறிவுமிக்க, மொழிநடை வகையில் சுருக்கச்செறிவும் உணர்வாற்றல் முனைப்பும் உடைய, (இலக்.) சொல் அழுத்த வகையில் விசையார்ந்த, (இலக்.) வன்திரியியலான, வினைச்சொல் வகையில் உள்ளுயிர்மாறுதலால் படிவமாற்றுமுறுகின்ற, வாணிகக்கள வகையில் ஒரேபடித்தாக விலையேற்றமுறுகிற.
strong-box
n. வன்காப்புப் பெட்டி, சேமக்காப்புப் பேழை.
strong-minded
a. வன்னெச்சமுடைய, பெண்கள் வகையில் ஆண்களோடு இணையான அறிவு-சட்ட உரிமை வேண்டுகிற.
strong-room
n. வன்காப்பறை, சேமக்காப்பறை.
stronghold
n. அரண்காப்பு, கோட்டை, வன்காப்பிடம், புகலிடம், தஞ்சம், பிடிப்பிடம், வன்காப்பானவர்.
strongish
a. வலிமைப்பகட்டான, சற்றே மிகுவலிமை வாய்ந்த.
strongiy
adv. வலிமையுடன், திண்ணியதாக, உறுதியாக, வேகமாக, வற்புறுத்தி.
strontia
n. மஞ்சள் நிற அரு உலோக வகையின் உயிரகை.
strontian
n. மஞ்சள் நிற அரு உலோக வகையின் உயிரகை, (பெ.) மஞ்சள் நிற அரு உலோக வகையின் உயிரகையாலான.
strontium
n. மஞ்சள் நிற அரு உலோக வகை.
strop
n. தீட்டுவார், இழுப்புப்பபட்டை, (வினை.) வாரில் தீட்டு.
strophanthin
n. நெஞ்சுவலிமைக்கான தாவர நச்சுப்பசை மருந்து வகை.
strophe
n. பண்டைய கிரேக்க நடனப்பாடல் வகையில் இசைக்குழுவின் முதற்பாடற் கூறு, எதிர்ப்பாடற் கூறு, செய்யுட் கூறு.