English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
steer
-1 n. காயடிக்கப்பட்ட எருது, காளை, விடை எருது.
steerable
a. வழிகாட்டத்தக்க, திசையறிந்து திருப்பத்தக்க.
steerage
n. வழிச்செலுத்துஞ் செயல், வழிச்செலுத்தும் அனுபவத் திறம், செயலாட்சித் திறம், நடத்துவதற்குரிய கருவிகல சாதனம், போர்க்கப்பல் வகையில் சிறதிறப் பணியாளர் தனியிடம், கப்பல் இயக்குமுறை இடம், பயின் கட்டையின் இயங்குதிற விளைவு, கப்பலின் போக்கமைவு, கப்பலின் குறைந்த கட்டணப் பகுதி, (பெ.) குறைந்த கட்டணப்பகுதிக்குரிய.
steerage-way
n. பயின்கட்டை செயற்படுவதற்கு வேண்டிய கப்பலின் குறைந்த அளவு வேகம்.
steerer
n. வழிகாட்டுவோர், வழிசெலுத்துவோர், திசைதிருப்புவோர்.
steering
n. வழிச் செலுத்துகை, வழிதிருப்புகை, செயல் கட்டாட்சி, (பெ.) வழித்திருப்புகிற, வழிச்செலுத்துகிற, செயல்முறை கட்டுப்படுத்துகிற.
steering-gear
n. இயக்கு கருவியமைவு.
steering-wheel
n. உந்துகல இயக்காழி.
steerling
n. விதையடித்த இளங்காளைக் கன்று.
steersman
n. கப்பலின் இயக்குநர், செயல் இயக்குநர்.
steersmanship
n. கப்பல் இயக்குதிறம், நடைமுறை இயக்குதிறம்.
steeve
-1 n. (கப்.) தொடுவான் கோணம், கப்பல் முன்புற உந்துகோலுக்கும் அடிவானுக்கும் இடையேயுள்ள கோண நிலை, (வினை.) (கப்.) கப்பல் முன்புற உந்துசட்ட வகையில் தொடுவான் கோணிடு, முன்புற உந்து சட்டத்தினைத் தொடுவான் கோணிடுவி.
Steinberger
n. ரைன் ஆற்றுப் பகுதி வெண்மது வகை.
steinbock
n. காட்டு வெள்ளாடு.
stele
n. நடுகல், பெயர்வரி பொறித்த கல்லறைச் சிலை.
stellar
a. விண்மீனுக்குரிய, உடுக்கள் சார்ந்த.
stellate
a. விண்மீன் போல அமைவுற்ற, விண்மீன் போலப்புறநோக்கிய சினையுடைய.
stellenbosch
v. (படை. இழி.) நயமுறை விலக்கீடு செய், புறக்கணித்து வை.
stelliferous
a. விண்மீன் உட்கொண்ட, உடுக்கள் தாங்கிய, உடுக்குறியுடைய, உடுக்குறிகள் நிரம்பிய, உடு வடிவங்கள் கொண்ட.
stelliform
a. விண்மீன் உருவாமன, உடுவடிவான.