English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
sprayer
n. பூவாளி, தௌி வாளி.
Sprayer house
தௌிப்பான் அகம்
sprayey
-1 a. பூங்கொத்தார்ந்த, தளிர்க்கிளை வடிவான.
spread
n. படர்வு, பரவுதல், பரப்பீடு, பரப்புதல், விரிவு, மலர்தல், அகலம், வீச்ச, விரிவெல்லை, பரப்பெல்லை, படர்ச்சித்திறம், விரிவகற்சித்திறம், மேற்படர்வு, வாணிக வழக்கில் சரக்கின் ஆக்க மதிப்புவரும் விற்பனை விலைக்கும் இடையேயுள்ள மிகை, (பே-வ) விருந்துணவு, விருந்து, (வினை.) விரிவுறு, பரவு, விரி, பரப்பு, விரிவாக்கு, அகலமாக்கு, பரவச்செய், எங்கும் பரவலாக்கு, பரவு இடங்கொள், பரப்பீடு செய், பிரசாரஞ் செய், பரப்பிக்காட்டு, விரித்துக்காட்டு, பரந்து கவி, பரந்துமூடு.
spread-eagle
n. (கட்.) விரிசிறைக் கழுகுருவம், நாணயப் பொறிப்பு வகையில் விரிசிறைக் கழுகுவடிவம், சிறைவிரிகழுகாட்டம், உள்ளங்கால் உள்விளிம்பிரண்டும் ஒன்று முன் ஒன்று பின்னாக ஒருங்கே உறைபனிமீது சறுக்கிச் செல்லும் ஆட்டவகை, (கப்.) கைகால் பரப்பிய பாய்க்கயிறுகளில் கட்டி அடிக்குந் தண்டனைக்கு உட்பட்டவர், (பே-வ) முதுவடாக அறுத்துப் பரப்பி வைக்கப்பட்ட கோழி இறைச்சி, (பெ.) பகட்டாரவார முழக்க மிக்க, ஆரவாரத் தேசீயப்பற்றார்வங்கொண்ட, ஆரவார நாட்டுப்பற்றார்வ முழக்கங்கொண்ட, தற்பொருமையுடைய, (வினை.) பரப்பு, உரிய எல்லைகடந்து நிலவு, கைகால் பரப்பிவைத்துக் கட்டு, விரிசிறைக் கழுகுவடிவம் வெட்டி அமை, ஆரவாரப்பேச்சுப்பேசு, ஆரவார நாட்டுப் பற்றார்வ முழக்கமிடு.
spread-over
n. விரிபரப்பீடு, நேர ஏற்பமைவாக்கம், இடுங்கிய மணிக்கூறுகளைத் தனித்தேவைகளுக்கேற்ப அமைத்துக்கொள்ளும் பாங்கு.
spree
n. குதியாட்டம், தங்குதடையற்ற மிகுகிளர்ச்சி, களியாட்டு, குடிவெளியாட்டம், (வினை.) குதியாட்டமிடு, களியாட்டயர்.
sprent
a. தௌிக்கப்பெற்ற, கவிந்து பரவப்பெற்ற.
sprig
n. சிறுகிளை, முளை, தண்டு, இளந்தளிர் ஒப்பனை அணி, தலையற்ற சிற்றாணி, இளைஞன், சிறுவன், (வினை.) தளிர்க்கிளை போன்ற ஒப்பனை செய்.
spriggy
a. சிறுகிளைகள் நிரம்ப உள்ள, சிறுகிளை போன்ற.
sprightliness
n. களிகிளர்ச்சி, அகமகிழ்வுநிலை, எழுச்சி, உயிர்த்துடிப்பு, சுறுசுறுப்பு.
sprightly
a. எழுச்சி மிக்க, களியார்வமிக்க, சுறுசுறுப்பான, கிளர்ச்சி வாய்ந்த, மகிழ்ச்சி நிரம்பிய.
sprigtail
n. கூர்முனை வால் தாரா, சதுப்பு நிலக் கூர்வால் கோழி வகை.
spring
n. குதிப்பு, பாய்வு, துள்ளல், திடீர் இயக்கம், பின்வெட்டு, பின்னெறிவு, பின்னுதைப்பு விசை, நெகிழ்ச்சித்திறம், பாய்திறம், திருகு சுருள்வில், விசைவில், வில்வளைவு விசை, அதிர்ச்சி தாங்கும் வில்லமைவு, வில்வளைவின் பக்க உயர்ச்சி, விசைமூலம், அகத்தூண்டுதல், நோக்கம், தொடக்கம், தோற்றம், எழுச்சி, இளவனில, தளிர்ப்புப்பருவம், ஊற்று, எண்ணெய்க்கிணறு, ஊற்றுப்பள்ளம் வேலைஏற்ற உச்சிநில, இருமைப்பருவ வேலை ஏற்றம், ஞாயிறு-திங்கள் ஆகிய இரண்டினாலும் ஏற்படம் கடல்நீர்ப் பருவ எழுச்சியலை, உத்தரத்தின் மேல்நோக்கிய வளைவு, பலகையின் தலைப்பு, ஒழுக்கு, முதலியவற்றின் கசிவுத்தொடக்கம், (கப்.) கப்பல் நிலைக்கயிறு, (கப்.) பாய்மர வெடிப்பு, நார்வே நாட்டு நடனவகை, நார்வே நாட்டு நடன வகையின் இசை, கிளர்ச்சி வாய்ந்த நடன இசை, (வினை.) துள்ளு, குதி, பாய், தாவிக்குதி, விசையுடன் பாய், கட்டறுத்துத் தெறித்துப் பாய், திடுமென, இயங்கு, விரைந்தியங்கு, மேலெழுந்து பாய்வுறு, குதித்தோடு, விசையுடன் தெறித்தோடு,திடுமெனத்தோன்று, தோற்றமுறு, எதிர்பாராது தோன்று,எழு, விறியெழு, மேலெழுந்து தோன்று, தோன்றப் பெறு, வெளிப்படு, உருவாகு, விளைவாகு, விளைவாகத் தோன்று, மரபுவழித்தோன்று, தளிர்ப்புறு, விரைவளர்ச்சி அடை, திடுமெனத் தோற்றுவி, கட்டைவகையில் திருகுறு, வெடிப்புறு, பிளவுறு, கீறு, வேட்டை விலங்குகள் வகையில் கிளறிவெளிப்படுத்து, ஊர்திகளுக்கு விலவிசையூட்டு, சுரங்கக் கண்ணிகளை வெடிக்க வை, (கட்.) கடற்புயலால் பலகை தளர்ந்து கழலப்பெறு.
spring-board
n. தாவு விற்பலகை, குதிப்பதற்கு உந்து விசை தரும் மிதிபலகை.
spring-box
n. சுருள்விற்பெட்டி.
spring-carriage, spring-cart
n. வில் வண்டி.
spring-clean
v. முற்றிலுந் துப்புரவு செய்.
spring-cleaning
n. முழுநிறை துப்புரவு.
spring-halt
n. குதிரையின் திடீர் நொண்டித்தனம்.