English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
slidable
a. நெகிழ்த்தித் தள்ளத்தக்க, இழைவுடைய.
slide
n. சறுக்கல், இழைவியக்கம், பனிச்சறுக்கிழைவு, பனித்தளச் சறுக்கிழைவுத்தடம், பனிச்சறுக்கிழைவுத்தளம், பனிச்சறுக்காட்டத்தளம், வரியிழைவு, ஒருதிசை நேரிழைவாக நழுவிச்செல்லும் நிலை, சாய்விழைவுத்தளம், சாய்சறுக்குத்தளம், இயந்திர இழைப்பகுதி, இழைவுறுப்பு, இழைகதவம், செருகிழைவு, உரிய இடத்தில் இழைவாகச் செருகிவைக்கப்பட்ட பொருள், இழைவூக்கு, தலைமயிரொப்பனையில் செருகி வைக்கும் கவரூசி, ஆய்வாடிகளின் காட்சிவில்லை, (வினை.) நழுவிச்செல், வழுக்கியோடு, நழுவிச்செல்லுவி, இழைந்துசெல், பனிப்பரப்பு மீது சறுக்கிச் செல், சறுக்ககுக்கட்டை மீது ழறுக்கிச் செல், சறுக்காட்டமிடு, தங்குதடையின்றி எளிதிற் செல், தன்னுணர்ச்சியின்றிச் செல், நழுவிநகர்வுறு, மெல்லிழைவாகப் படிப்படியாகச் செல்.
slide-caliper
n. நுண்விட்டமானி, நழுவு நுண்படிக்கலமுடைய விட்டமளக்கும் கருவி.
slide-valve
n. இழைவடைப்பு.
slide-way
n. இழைவரி, இயந்திரத்தில் உறுப்பு வழுக்கி இயங்குவதற்கிடமளிக்கும் பகுதி.
slider
n. பனிச்சறுக்கிச் செல்பவர், வழுக்கிச் செல்பவர், சறுக்கிச் செல்வது, இழைந்தோடும் உறுப்பு, தாள்வில்லைகளுக்கிடையிலுள்ள குளிர்பாலேடு, சேதாமை, சிவந்த வயிறுடைய ஆமை வகை.
sliding-door
n. செருகிழைகதவம், குடுமியின் மீது இயங்காமல் நீள்தொளையூடே பக்கவாட்டில் இழுக்கப்படுங் கதவு.
sliding-keel
n. இழைவுகட்டை, படகு பக்கவாட்டிற் சாயாமல் தடுக்கும் அடிமட்ட மையப்பலகை.
sliding-rule
n. உறழ்படியளவைக்கோல், நுண்ணளவு காட்டும் நழுவுபடியுடைய அளவுகோல்.
sliding-scale
n. உறழ்வுபடிவீதம், தீர்வை-வரி முதலியவற்றின் வகையில் படிப்படியாக ஏறியிறங்கிச் செல்லும் திட்டவீத அளவுமுறை.
sliding-seat
n. நெகிழ்விருக்கை, பந்தயப் படகில் துடுப்புவலிப்பவரின் உடலசைவுக்கேற்ப நெகிழ்ந்தசைந்து கொடுக்கும் அமர்வுப்பீடம்.
slight
n. ஏளன அவமதிப்பு, புறக்கணிப்பேளனம், உரியமரியாதை காட்டத்தவறுதல், (பெ.) மெல்லிதான, ஒல்லியான, நொய்தான தோற்றமுடைய, முக்கியமல்லாத, கவனிக்கவேண்டாத, சிறிய அளவான, மிகுதியாயிராத, முழுநிறைவாயிராத, போதாத, அருகலான, குறைவாயுள்ள, மிகச்சிறிதான, (வினை.) பொருட்படுத்த வேண்டாத வகையில் நடத்து அல்லது பேசு, ஏளன அவமதிப்புச் செய். மரியாதை காட்டத் தவறு, வெளிப்படையாக அசட்டை செய்.
slighting
n. புறக்கணிப்பு, ஏளன அவமதிப்பு, (பெ.) ஏளனமாக அவமதிப்புச் செய்கிற, புறக்கணிக்கிற.
slightingly
adv. ஏளன அவமதிப்பாக, மரியாதைக்குறைவாக.
slily
adv. சிறுசூழ்ச்சிமுறையுடன், நுண்ணயச் சூழ்ச்சியுல்ன், மறைசூது முறையாக, மூடுதந்திரமாக.
slim
a. மெல்லிய, ஒடுங்கிய, ஒல்லியான, இடுங்கிய, நீள் பொருள்களில் மிகக்குறைந்த சுற்றளவுள்ள, ஒரு கைக்குள் அடங்குகிற, நொய்தான கட்டமைப்புடைய, மிகச்சிறிய வடிவமுடைய, சூழ்ச்சிமிக்க, பொல்லா யூகமிக்க, தீவினையஞ்சாத, (வினை.) ஒடுங்கியதாக்கு, உடல் வகையில் ஒல்லியாவதற்குரிய வழிவகைகளைக் கையாளு.
slime
n. வண்டற்சகதி, படிசேறு, தொழி, குழைசெழி, சேறார்ந்த பொருள், களிம்புப் பசைமண், குழம்பு வடிவநிலக்கீல், சீதக்கட்டு, மீன்கசிவுக்களிம்பு, உடல்தசைப் பொருள், மாசு, அழுக்கு, ஒழுக்கங்கெட்ட நிலை, தன்மதிப்பற்ற அடிமைப்பண்பு, (வினை.) சேறு பூசு, களிம்பு தடவு, பாம்பு வகையில் இரைவிழுங்குமுன் ஈரப் பதமாக்கு, (இழி.) நெறிபுறக்கணித்து எப்பாடுபட்டாயினும் செயலை வெற்றிக்குக் கொண்டுசெல்.
slime-gland
n. களிம்புச்சுரப்பி, நத்தை இன வகையில் பசைநீர் சுரக்குங் கழலை.
slime-pit
n. நிலக்கீல் கிடங்கு.
sliminess
n. சேறார்ந்த தன்மை, பிசுக்குத்தனம்.