English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
slimy
a. சகதியான, குழைசேற்றுத் தன்மைவாய்ந்த, சேறு பூசப்பட்ட, செழி நிறைந்த, சீதக்கட்டார்ந்த, சளியார்ந்த, சீதங்கட்டியுள்ள, பிசுபிசுக்கலான, வழுக்குகிற, பிடிக்கு வசப்படாத, கெஞ்சி ஏய்க்கிற, வெறுக்கத்தக்க வகையில் முகப்புகழ்ச்சி செய்கிற, தன் மதிப்புக்கேடான அடிமைப்பாங்குடைய.
sling
-1 n. கவண், கல்லெறி கருவி, கவண்கயிறு, கல்லெறி கயிற்று முடிச்சு, உறி, தொங்கல் கயிறு, தொங்கல் முடிச்சு, கயிற்றுத்தொங்கல், தொங்கற்கட்டு, காயம்பட்ட உறுப்புக்கான ஏந்துகட்டு, (வினை.) எறி, கவண் ஏறி, மேலிடு, உறியில் தொங்கவிடு, கட்டித்தூக்கு, மேலிருந்து தாங்கப் பெரும்படி அமை, தூங்கு, தொங்கு, தூக்கு கயிற்றினால் மேலேற்று, இடமாற்று.
sling-cart
n. தொங்கற் பளுவண்டி, பளுக்கள் ஊடச்சில் கட்டித் தொங்கவிடப்பட்டு எடுத்துச் செல்லும் வண்டி.
sling-dog
n. பாரஞ்சாம்பிக் கொளுவி.
slink
-1 v. மறைந்து நழுவு, ஒளிந்தோடு, வெட்கத்தால் ஓடிமறைவுறு, வெள்கிப் பின்னிடைவுறு, நாணி ஒதுங்கிச்செல், குற்ற உணர்ச்சியுடன் தலைகுணிந்து செல், கோழைத்தனமாகப் பதுங்கிச்செல், அஞ்சியொடுங்கு.
slip
n. சறுக்கல், வழுக்கல், எதிர்பாராப் பிழை, தவறு, நாச்சோர்வு, சொற்சோர்வு, எழுத்துச்சோர்வு, கட்டுப்பாட்டில் தளர்வு, ஒழுக்கவழு, நடத்தைத் தவறு, தப்புதல், பிழைத்தல், சிறுதுண்டு, கழி, கம்பு, மரப்பட்டிகை, வரிச்சல், வார், தும்பு, தாள்பட்டி, தாள் நறுக்கு, நீண்டொடுங்கிய இடம், ஆட்டக்கள ஓரம், சிறுகிளை, நாற்றுமுளை, ஒட்டுக்கொம்பு, கான்முளை, மரபுக்கொழுந்து, ஆட்டக்களப்பந்துதவிச்சிறுவர்,சிறு தட்டை மீன்வகை, கப்பல் துறை வகையில் சாய்தகள் கட்டுதுறை, கப்பல்துறை வகையில் சாய்தள இறங்குதட்டுட, மட்பாண்டச் சித்திரவேலைப்பாட்டிற்காக அப்பப்படும் களி, திடீர்த் தளர்த்து விசை, விசைத் தோல்வார், விமான ஊடக விசைத்தடையளவு, தலையணஉறை, தளர்த்தியான ஆடை, உட்கச்சு, உள்ளங்கி,உட்பாவாடை, கத்திரி-இடுக்கி-பற்றிறுக்கி முதலியவற்றின் வகையில் பற்று தளர்த்து விசையமைவு, (வினை.) சறுக்கு, வழுக்கிவிடு, வழுகு, நழுவு, கால்இடறப்பெறு, கால்வகையில் இடறு, நழுவிச்செல், நழுவிவிடு, தப்பிமறை, பிடிக்கு அகப்படாமல் தப்பு, வழுக்கித்தெறி, பிடிப்பு நழுவவிடு, தப்பு, தப்பிப்பிழைத்தோடு, இடைபுகுத்து, மெல்ல நுழைவி, திருட்டுத்தனமாகச் செருகு, திருட்டுத்தனமாக நுழை, மெல்லப்புகு, மெல்லவை, நழுவிச்சென்று பொருந்து, நழுவி இயங்கு, வழுக்கி இயங்கு, வழுவு, தெரியாத் தவறு செய், வந்துசேர், அறியா நிலையில் வந்தமை, தானே வந்திணை, முதிராக்கன்று ஈனு.
slip-carriage, slip-coach
n. புகைவண்டி நழுவுபெட்டி, நிற்காமலே கழற்றிவிடப்படத்தக்க தொடர்வண்டிப் பெட்டி.
slip-cover
n. சேமக்காப்புறை, பயன்படாது இருக்கிற தட்டுமுட்டுப் பொருள்களுக்குப் போடும் வரித்துணி உறை.
slip-galley
n. செருகறைப்பெட்டி, அச்சுருப்படிவங்களை வைக்கும் நீள்குறுந் தட்டு.
slip-hook
n. விசைக்கொக்கி, தேவைப்பட்டவுடனே விடுவிப்பதற்குரிய கொக்கி அமைவு.
slip-knot
n. உருவாஞ்சுருக்கு, இழுத்தவிழ்க்கக்கூடிய முடிச்சு, ஒரே இழுப்பினால் அவிழ்க்கக்கூடிய முடிச்சு, நழுவுசுருக்கு, கயிற்றினில் மேலுங் கீழும் இழுத்துக்கொள்ளக் கூடிய முடிச்சு, நெகிழ்வுச்சுருக்கு, கண்ணி தளர்த்தவும் இறுக்கவும் வல்ல முடிச்சு.
slip-rope
n. கப்பல் தள நங்கூரப் பிணைப்பின் உருவு கயிறு.
slip-stream
n. பின்கால்விசை, வானுர்திச் சுழல்விசிறியின் பின்னுந்து காற்றோட்டம்.
slip-up
n. (பே-வ) இழுக்கம், பெருங்குறை.
slipon, slipover
உருவுசட்டை, கொளுவிகளைக் கழற்றாமல் தலைவழி மாட்டிக்கொள்ளக்கூடிய உடை, (பெ.) சட்டைவகையில் தலைவழி எளிதாக மாட்டிக்கொள்ளக்கூடிய.
slipper
n. தொடுதோல், செருப்பு, மனையுள் வழங்கப்படும் தளர்மிதியடி, இறக்கங்களில் உருட்சி தடுக்கும் சக்கரத்தடைகாப்பு, விடுவேடர், வேட்டையில் விசைவார் அழுத்திநாய்களை ஏவிவிடுபவர், பனிச்சறுக்கு சகடம், (வினை.) செருப்பால் அடி.
slipper-bath
n. சாய் கவிகைத்துறை, மூடாக்குடைய செருப்பு வடிவக் குளிப்புத்தொட்டி.
slipperwort
n. மிதியடி போன்ற மலருள்ள செடிவகை.
slippery
a. வழுக்கலான, தள வகையில் சறுக்குகிற, வழுவழுப்பான, நிலைகொடுக்காத, பிடிகொடாத, நிலையற்ற, அடிக்கடி மாறுபடுகிற, நம்பத்தகாத, கணித்துப்பார்க்கஇடந்தராத, வரையறுக்கமுடியாத.