English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
sleazy
a. துகில் வகையில் உறுதியற்ற, இழைம வகையில் நொய்தான, (பே-வ) ஒழுக்கங்கெட்ட.
sled
n. சிறு பனிச் சரக்குகலம், சரக்குகள் கொண்டுசெல்வதற்கான பனிச்சறுக்கு இழுப்பு வண்டி, முற்காலத்தில் தூக்கிடுவதற்குரியவரை இழுத்துச் செல்லும் வண்டி, (வினை.) சறுக்கு வண்டியில் இட்டுக்கொண்டு செல், சறுக்குகலத்திற் செல்.
sledge
-1 n. பனிச்சறுக்கூர்தி, சறுக்குகலம், சரக்குக்கொண்டுசெல்லும், நிலச்சறுக்கிழுப்பு வண்டி (வினை.) பனிச்சறுக்கூர்தியிற் செல், பனிச்சறுக்கூர்தியிற் பயணஞ் செய், சறுக்குகலத்திற் கொண்டு செல்.
sledge-hammer
n. கொல்லுலைக்கூடம், கருமானின் சம்மட்டிக்கூடம், (பெ.) உலைக்கூடத்தால் அடிக்கும் ஆற்றலுடைய, சம்மட்டியடி அடிக்கிற.
sleek
a. பட்டிழைவான, மென்னாசிவான, மென்மையும் வழவழப்பும் வாய்ந்த, மென்பளபளப்பான, (வினை.) பட்டிழை வாக்கு, மென்னொசிவாக்கு, மென்மையும் வழவழப்பும் உடையதாக அழுத்தித்தடவு, மென்பளப்புப்பட வருடு.
sleep
n. உறக்கம், தூக்கம், உயிரினங்களின் பருவச் செறிதுயில் நிலை, ஒருமுறைத்துயில், துயில்நேரம், நீடமைதி, ஓய்வு, அசைவின்மை, கவனியாதிருத்தல், துஞ்சுதல், சாவு, (வினை.) உறக்கத்தில் ஆழ்ந்திரு, தூங்கிவிடு, துயில்கொள், தூங்கிக்கழி, தூங்கி நிலைமாறப்பெறு, செயலற்றிரு, செயலடங்கியிரு, அமைந்திரு, உணர்ச்சியற்றிரு, சோம்பியிரு, அக்கறையற்றிரு, எழுச்சியற்றிரு, அசைவற்றிரு, அசைவிலதாய்த் தோன்று, கல்லறையிற்கிட, இரவுநேரத்தில் தூங்க வாய்ப்புடையதாயிரு.
sleep-walker
n. தூக்கத்தில் நடப்பவர், தூக்கநடப்புக்கோளாறுடையவர்.
sleep-walking
n. தூக்கத்தில் நடத்தல், தூக்கநடப்புக் கோளாறு, (பெ.) தூக்கத்தில் நடக்கிற, தூக்கநடப்புக்கு ஆளான.
sleeper
n. தூங்குபவர், வாரை, விட்க்குறுக்குக்கை, குறுக்குவிட்டம், தண்டவாளக் குறுக்கைகட்டை, தொடர் வண்டித்துயிற் பெட்டி.
sleepiness
n. தூக்கக் கலக்கம்.
sleeping
n. உறங்குதல், உறக்கம், (பெ.) உறங்குகிற, உறங்குவதற்குரிய, உறக்கமூட்டுகிற, உறக்கத்துடன் இயலுகிற.
sleeping-bag
n. துயிற்பை, வழிப்போக்கச் தூங்குவதற்காகப் பயன்படுத்தும் பை.
sleeping-car, sleeping-carrgiage
n. துயிற்பெட்டி, துயில்வாய்ப்பிடம் அமைக்கப்பெற்றுள்ள இருப்பூர்தித் தொடர்வண்டிப்பெட்டி.
sleeping-draught
n. தூக்கமருந்து, துயில் தூண்டுங்குடிநீர்மம்.
sleeping-sickness
n. ஈவகையின் கடியினால் வரும் கொடிய ஆப்பிரிக்க நச்சு நோய்வகை.
sleeping-suit
n. தூக்கநேரத் தளர் உடுப்பு.
sleepless
a. உறக்கமற்ற, உறங்காது, கழிக்கப்படுகிற, உறக்கமின்மைக்குக் காரணமான.
sleepy
n. சோம்பேறி, கவனிக்காதிருப்பவர், (பெ.) உறங்கிவழிகின்ற, அரைத்தூக்க நிலையிலுள்ள, தூங்குவதற்கு ஒருங்கியுள்ள, வழக்கமாகவே சோம்பலான, வழக்கமாகவே எதிலும் நாட்டஞ் செலுத்தாத, கிளர்ச்சியில்லாத, பழங்கள் வகையில் சுவையற்று, உலர்ந்துபோன.
sleepyhead
n. சோம்பலுள்ளவர், கவனிக்காதிருப்பவர்.
sleet
n. ஆலங்கட்டி மழை, (வினை.) கல்மழை பெய், ஆலங்கட்டியாக மழை பெய்.