English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
slate-blue
n. மங்கலான கரும்பசு நீலநிறம், (பெ.) மங்கிய கரும்பசு நீல நிறமான.
slate-club
n. கூட்டுநலக்குழாய், சிறு வாரப்பங்குத்தொகையுடன் கூட்டுத்துணையுதவி நலம் நாடி அமைக்கும் குழுஅமைப்பு.
slate-colour
n. பசுநீலக் கரும்பழுப்பு நிறம்.
slate-coloured
a. பசுநீலக் கரும்பழுப்பு நிறம்வாய்ந்த.
slate-grey
n. இளம்பசுநீலச் செம்மஞ்சள் நிறம், (பெ.) இளம் பசுநீலச் நிறமான.
slate-pencil
n. பலப்பம், கற்பலகைக் குச்சி.
slate-writer
n. திப்பிய வரைவு வித்தகர்.
slate-writing
n. திப்பிய எழுத்து, மூடிய கற்பலகையில் எழுத்து வருவிக்கும் வித்தை.
slater
n. பலகைக் கற் பாவோடு வேய்பவர், பலகைக்கற்குச்சி, தோல் நுண்மயிர் களைவதற்கான கற்பலகை அலகுடைய கருவி வகை, (பே-வ) மரப்பேன்.
slattern
n. நடைகேடி, ஒழுங்கற்றவள், தூய்மையற்றவள்.
slatternly
a. ஒழுங்கற்ற, தூய்மையற்ற.
slaty
a. கற்பலகை சார்ந்த, கற்பலகை போன்ற.
slaughter
n. மாக்கொலை, படுகொலை, நுழிலாட்டு, (வினை.) படுக்கொலை செய், நுழிலாட்டு, இரக்கமின்றிக் கொல், விலங்குகளை வெட்டித்தள்ளு, இறைச்சிக்காக வெட்டிக்குவி.
slaughter-house
n. இறைச்சிக் கொட்டில், படுகளம்.
slaughterous
a. படுகொலை செய்யும் பாங்குடைய, கொலைத்தொழிலுடைய, அழிவுசெய்கிற.
Slav
n. ஸ்லாவிய இனத்தவர், கிழக்கு ஐரோப்பாவின் பெரும்பகுதியிற் பரவியுள்ள ருசியர்-பல்கேரியர்-சைலீசியர்-பொஹீமியர் உள்ளிட்ட இனத்தைச் சேர்ந்தவர், (பெ.) ஸ்லாவிய இனஞ் சார்ந்த, ஸ்லவானிக் மொழி சார்ந்த, ஸ்லவானிக் மொழிபேசும் மக்கள் சார்ந்த, ஸ்லவோனியா சார்ந்த.
slave
n. அடிமை, தொழும்பர், பிறராட்சிக்குட்பட்டவர், அடிமைவேளையாள், தன்னுரிமையற்றவர், வவ்ங்கி வாழ்பவர், அடிமைப்பண்புடையவர், பழக்கத்திற்கு அடிமைப்பட்டவர், மாடாய் உழைப்பவர், ஓய்வொழிவற்றவர், தன்னாண்மையிழந்தவர், (வினை.) அடிமைபோல் வேலை செய், தொண்டூழியம் புரி, அடிமையாக்கு, அடிமையாக நடத்து.
slave-ant
n. அடிமை எறும்பு, எறும்புச் சமுதாயத்தில் கட்டாயப்படுத்தி வேலை வாங்கப்படும் எறும்பு.
slave-bangle
n. வங்கி, தோட்காப்பு.
slave-born
a. பிறப்படிமையான, அடிமையாகப் பிறந்த, அடிமைகளாயுள்ள பொற்றோர்களுக்குப் பிறந்த.