English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
slam
n. தடால் ஒலி, தடாற்கதவடைப்பு, சீட்டாட்ட முழுவரிசைக் கெலிப்பு, (வினை.) கதவைத் தடாலென அடை, கதவுவகையில் தடாலென மூடிக்கொள், தொப்பென்று வை, (பே-வ) அடி, மோது, புடை, தட்டு, எளிதில் வெற்றிகொள்.
slander
n. அவதூறு, பழிதூற்றுரை, பொல்லாங்குரை, பொய்க்குற்றச்சாட்டு, (சட்.) பொய்யுரைப் பழி, (வினை.) பழிதூற்று, பழித்துரை, பொய்ப்பழி கூறு, பொய்யுரைப் பழிசுமத்து, நற்பெயர் கெடு, பெயர் கறைப்படுத்து.
slanderer
n. அவதூறு பேசுபவர், பழிதூற்றுபவர்.
slanderous
a. அவதூறான, பழிதூற்றுகிற.
slang
n. கொச்சைவழக்கு, கொச்சைச்சொல், கொச்சைவழக்குத்தொடர், இழிதகவான குழுஉக்குறி வழக்கு, (வினை.) கொச்சை மொழிகளால் தூற்று, பச்சையாகத் திட்டு.
slangy
a. கொச்சை வழங்கும் இயல்புடைய, கொச்சையின் இயல்புவாய்ந்த.
slant
n. கோட்டம், சாய்வு, சரிவு, சாய்வுநிலை, சரிநிமிர்வில்லா நிலை, மட்டச்சாய்வு, சமதளமில்லாநிலை, வசைக் குறிப்பு, இகழ்ச்சி, மறைமுகக்கண்டனம், சாய்வுச் சார்பு, நோக்கு, கருத்துச்சார்பு, (பெ.) (செய்.) சாய்வான, சரிவான, கோணமான, (வினை.) சரிவாகு, சரிவாக்கு, கோட்டமுறு, நேர்கோட்டிலிருந்து விலகிச்செல்.
slantendicular, slantindicular, slantingdicular
a. (பே-வ) நிமிர்வரையல்லாத, சாய்வுவாட்டமான, சாய்முகமான.
slap
n. அறை, உள்ளங்கை அடி, (வினை.) கை ஓச்சி அடி, அறை, (வினையடை.) அடி அதிர்ச்சியுல்ன் திடீரென்ற, எதிர்பாராமல், முழுதளவாக, நிறைவாக.
slap-bang
adv. மூர்க்கமாக, வன்முறையாக, முழக்கமாக, கூச்சலிட்டுக்கொண்டு, தலைகீழாக, பதற்றமாக.
slap-up
a. (பே-வ) புத்தம் புதுப்பாணி சார்ந்த, நாட்பாணியான.
slapdash
-1 n. வேகப்பாய்ச்சல், மும்முரவேலை, ஆவேசச் செயல், குத்துச்சாந்து, சுண்ணாம்புஞ்சரளைக்கல்லுங் கலந்த சுவர்ப்பூச்சு நீறு, (பெ.) வேகமாகச் செல்கிற, மும்முரமாகப் பாய்கிற, இடையிடைச் செய்யப்பட்ட, கண்ட கண்டபடி செய்யப்பட்ட, மேலீடாகச் செய்யப்பட்ட, முனைப்பின்றிச் செய்யப்பட்ட, (வினை.) குத்துச்சாந்திடு, குத்து மதிப்புரவாகச் சித்தஞ் செய்.
slapjack
n. அடை, வறட்டப்பம், சிங்காரப்பெட்டி, நறுமண முகந்தூள் வைக்கும் தட்டைப்பெட்டி.
slapping
n. அறை, மொத்தடி, (பெ.) மிகுவிரைவான, மிக விரும்பத்தக்க, மிகப் பெரிய, கணிசமான, (வினையடை.) மிகுவிரைவாக, மிக நன்றாக.
slapstick
n. சூத்திரக்கோல், வளைந்து கொடுக்கும் இருபிளவாயுள்ள கோமாளியின் கைப்பிரம்பு, கீழ்த்தர அமளிக்களி நாடகம், (பெ.) கோமாளியின் சூத்திரக்கோலைக் கையாள்கிற, கீழ்த்தர நகைச்சுவை நாடக இயல்புடைய.
slash
n. வீச்சடி, வீக்கடி, வீச்சடித்தடம், கீறற்காயம், வெட்டுச் சிதைவுத்தடம், பிளவுத்தடம், வெட்டுச்சிதைவுக்கூளம், (வினை.) வீக்கு, சுளீரென அடி, கத்தியால் தாக்கு, வாளால் மொத்து, கசையாலடி, சாட்டையால் சொடுக்கு, குத்திக்கீறு, வெட்டிப்பிள, வெட்டிச்சிதை, (படை.) கொப்புக்கவரரண் எழுப்புவதற்காக மரங்களை வெட்டிவீழ்த்து.
slat
-1 n. பாவுதிரைப் பட்டிகை, பலகணித் திரைக்குப் பயன்படுத்தப்படும் நீண்ட மெல்லிய மரச்சிம்பு, வரிச்சல், ஓடுபரப்புவதற்கான மோட்டு மரச்சட்டம், (பே-வ) சாமியோடு, மெல்லிய மோட்டுப்பாவோடு.
slate-black
n. சற்றே நீலங்கலந்த இளம்பசுங் கருநிறம், (பெ.) இளம்பசுங் கருநீல நிறமான.