English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
skippingly
adv. தாவுநடையுடன், துள்ளிக்குதித்து, மகிழ்வுடன் குதித்தாடு நிலையில்.
skirl
n. கிறீச்சொலி, பைக்குழல் இசைக்கருவி ஒலி, (வினை.) பைக்குழல் இசைக்கருவிபோல் கிறீச்சிடு.
skirmish
n. சில்லறைச்சண்டை, இடைவரவான சிறு கைகலப்பு, எல்லைப்பூசல், சிறுகலகம், சிறுதிறப் போராட்டம், வாய்ச்சண்டை, சிறு வாக்குவாதம், (வினை.) சில்லறைச் சண்டையிடு, சிறு பிரிவுகட்கு இடையே போரிடு, ஓழுங்கற்ற வகையில் சச்சரவிடு, முற்சிந்தனையற்ற நிலையிற் பூசலிடு, சிறுபோரிடு, சில்லறை வாக்குவாதஞ் செய்.
skirmisher
n. பூசலாளர், சச்சரவிடுபவர், சிறுபோர் விளைவிப்பவர், சில்லறை விவாதத்தில் ஈடுபடுபவர், ஓழுங்கற்ற சுற்றுமுறைச் சொற்போரிடுபவர்.
skirret
n. நீர்வாழ் காய்கறிப் பூண்டுவகை.
skirt
n. அங்கித் தொங்கல், சட்டைக் கீழ்விளிம்பு, பெண்டிர் அரைப்பாவாடை, ஓரம், விளிம்பு, எல்லை, மதிப்புக்குறைவான புறப்பகுதி, (இழி.) பெண்டு, பெண், (வினை.) ஓரமாகச் செல், விளிம்பினைச் சுற்றிச்செல், ஓரம் கடந்துசெல், அருகாகச் செல், அருகில் அமைந்திரு, ஓரமாக அமைந்திரு.
skirt-dancer
n. பாவாட்டம் ஆடுபவர், ஆடை காற்றில் பரவி அழகுத்தோற்றம் தருமாறு ஆடும் ஆடலோர்.
skirt-dancing
n. பாவாட்டம், ஆடை காற்றில் தவழ்ந்தபாடி அழகுதருமாறு ஆடும் ஆட்டம்.
skirted
a. பாவாடை அணிந்த, தொங்கலையுடைய, ஓரமாகக் கொண்ட, ஓரமாகச் சூழப்பட்ட, சுற்றுவிளிம்பாக உடைய, அருகே உடைய.
skirting
n. ஓரம், எல்லை, தொலையோரப் பகுதி, பாவாடைத் துணி, அங்கித் தொங்கல் துணி, அகச்சுவரோரப்பட்டி, ஆடைவிளிம்பு, ஓரம், அருகு, கிணற்றுத் தோவளப்பாவு தளம்.
skirtings
n. pl. மாட்டிறைச்சியின் மலிவான பகுதிகள், தரங்குறைந்த பகுதி ஆட்டுமயிர்.
skirtless
a. தொங்கலற்ற, பாவாடையற்ற.
skirts
n. pl. தொலையோரப்பகுதிகள், முனைக்கோடிப்ப பகுதிகள், எல்லைப்புறங்கள், அக எல்லைகள், புற எல்லைகள்.
skit
-1 n. சிறு வசைத்துணுக்கு, சிறு நையாண்டி அங்கதம், சிறு கேலிக்கட்டுரை, வசை வெடிப்புரை, சிறுதுணுக்கு.
skitter
v. காட்டுக்கோழிவகையில் நீர்மீது விசிறியடித்துக்கொண்டுசெல், நீர்மீது தத்தி இறக்கையடித்தெழு, நீரில் தத்திச் சிறகடித்துக்கொண்டு அமர், தூண்டிலை நீர்மீதாக இழுத்து மீன்பிடி.
skittish
a. வெருட்சியுள்ள, மருட்சியடைகிற, குதிரைவகையில் மருளுகிற, மருண்டு கலைகிற, பெண்டிர்வகையில் நிலையற்ற பண்புடைய, சபலத்தன்மையுடைய, அறைப்புடைய, கூச்சமுள்ள, மனம்போல நடக்கிற, கண்டபடி ஒழுகுகிற, ஏறுமாறாய் இயல்கின்ற, பகட்டி மினுக்குகிற, பசப்பியூடாடுகிற, பொய்க்காதல் புரிகின்ற, காதல் விளையாட்டுடைய, விளையாட்டுத்தனமான, களியாட்டில் ஈடுபட்ட, சுற்றித்திரிகின்ற, கட்டிலமையாத, துடிப்புமிக்க, இளமை பகட்டிக் கொள்கிற.
skittishness
n. குதிரை முதலியவகையில் மருட்சி, நடுக்கம், நாணம், விளையாட்டுத்தனம், எரிச்சலுடைமை, அலைவுடைமை, பெண்கள் வகையில் சபலத்தன்மை, அமைதியின்மை, கட்டிலமையாமை, விளையாட்டுப் பண்பு, மனம்போல நடத்தல், ஏறுமாறாய் இயலல், கண்டபடி நடத்தல், மயக்கித் திரிதல், பகடித்தனம், பசப்பு, பொய்க்காதல் புரிதல், விளையாட்டுப்பண்பு, துடிதுடிப்பு, வேடிக்கை ஈடுபாடு, சோம்பித் திரிதல், இளமைப்பகட்டு நடிப்பு, குறிக்கோளின்மை, பயனின்மை.
skittle
v. மரப்பந்தாட்ட வகையில் ஆட்டக்காரரை அடுத்தடுத்து விரைவில் வெளியாக்கு.
skittle-pins
n. pl. எறிகட்டையாட்டம், பந்தினால் அடித்து வீழ்த்தும் ஒன்பது கட்டைகள் கொண்ட ஆட்டம்.
skittles
n. எறிகட்டையாட்டம், பந்தினால் அடித்துவிழச் செய்யும் ஒன்பது கட்டைகள் கொண்ட ஆட்டவகை, படுமோசம், அறிவின்மை, மூடத்தனம்.