English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
sin-eater
n. பழி தின்றி, இறந்தவர் பிணத்தருகிருந்து அப்பந்தேறல் அருந்துவதால் அவர் பாவத்தை ஏற்பதாகக் கருதிக் கூலிக்கமர்த்தப்பட்டவர்.
sin-eating
n. சபிண்டிச் சாப்பாடு.
sin-offering
n. பழிமாற்றுவினைப் பலியீடு, பழிமாற்று வினைப்படையல்.
Sinaitic
a. சினாய் மலை சார்ந்த, சினாய்த் தீவக்குறை சார்ந்த.
Sinanthropus
n. பீகிங் குரங்கு போன்ற புதை படிவ மனிதன்.
sinapism
n. அழ்ன் பின்னாக, காலவகையில் குறிப்பிடப்பட்ட காலமுதலாக அதன்பிறகு, இதற்குமுன்னாக, காலவகையில் நிகழ்காலத்திலிருந்து குறிப்பிட்ட இறந்தகாலம் வரை, முதற்கொண்டே, முதலாகவே, இறந்த கால வழக்கில் குறிப்பிட்ட காலத்திலிருந்து, பின்னாக, குறிப்பிட்ட காலத்தக்குப் பிற்பட்டு நிகழ்காலத்துக்குள்ளாக, இருந்து இதுவரை, இறந்த கால வழக்கில் நிகழ்ச்சிக்காலத்திலிருந்து தற்சமயம் வரை, என்பதனால், என்ற காரணத்தால்.
sincere
a. உள்ளார்ந்த, மனமார்ந்த, நேர்மைவாய்ந்த, வாய்மை தவறாத, உண்மையான, நடிப்பற்ற, பாசாங்கமற்ற, நாணயமான.
sincerely
adv. உள்ளார, மனமார்ந்த நிலையில், உண்மையாக, நாணயமாக.
sincerity
n. வாய்மை, நேர்மை, மனமார்ந்த நிலை, கபடின்மை.
sinciput
n. முன்மண்டை, நெற்றியிலிருந்து உச்சிவரையுள்ள தலைப்பகுதி.
sine
-1 n. நெடுக்கை, செங்கோண முக்கோணத்தின் பிறிது கோண எதிர்வரை அடிவரைவீத அளவு.
sine die
adv. எல்லை வரையறையின்றி, நாள் குறிப்பிடாமல் ஒத்திப் போடப்பட்டு, நாள் குறிப்பிடாமல்.
sine qua non
n. இன்றியமையாத் தகுதிக்கூறு, உயர் நிலையான முற்படு காரணக்கூறு.
sinecure
n. உம்பளமானியப் பணி, ஆன்மிகப் பணியின்றி ஊதியமும் பெருமையும் தரும் திருக்கோயில் அலுவல், உம்பளப்பணி, (பெ.) உம்பளமாணியப்பணி வாய்ப்புடைய, உம்பளப் பணியளிக்கிற.
sinecured
a. உம்பளப்பணி வாய்ப்பு அளிக்கப்பெற்ற.
sinecurism
n. உம்பள மானியப்பணி நிலை, உம்பளப் பணிப்பேறு.
sinecurist
n. உம்பள மானியப்பனி பெறுவோர்.
sinew
n. தசைப்பற்று, தசைநார்களை எலும்புடன் இணைக்கும் இழைமம், தசைநாண், தசைப்பற்றின் இழை நரம்பு, தசை நாண் துணுக்கு, தசைப்பற்றுக் கூறு, (வினை.) தசை நாராய் அமை, இணைத்துப்பிடி, பற்றிப்பிணை, தாங்கு, ஆதாரவலிமையாயிரு.
sinewed
a. தசைநாணுடைய, தசைப்பற்று வலிமையுடைய, தசைப்பற்றுச் செறிவுடைய.
sinewiness
n. தசைப்பற்றுடைமை, தசைப்பற்றுச் செறிவுடைமை, செறிவலிமை, சலாகைத்திரட்சி, செறிந்து திரண்டு ஒடுங்கிய உடலுடைமை.