English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
simper
n. பேய்மாலச்சிரிப்பு, (வினை.) அசட்டுச் சிரிப்புச் சிரி, போலி முறுவல் கொள்.
simperingly
adv. இளித்துக்கொண்டு, போலிப் புன்முறுவலோடு.
simple
n. எளிமை, மூலிகை, மருந்துப்பூண்டு, மூலிகைமருந்து, (பெ.) எளிய, கடுமையற்ற, கடுமுயற்சி தேவைப்படாத, எளிதில் விளங்குகிள, ஐயத்திற்கு இடனற்ற, வெளிப்படையான, சிக்கலற்ற, ஒப்பனையற்ற, சிறப்பணியில்லாத, அழகு மிகுதியற்ற, தற்பெருமையற்ற, பணிவார்ந்த, சிறப்பற்ற, பொதுநிலையான, உயர்குடி சாராத, தாழ்நிலைப்பட்ட, சூழ்ச்சியற்ற, பாசாங்கற்ற, கபடில்லாத, எளிதில் நம்புகிற, எதிலும் ஐயம்கொள்ளாத, சூதுவாதற்ற, குழந்தை போன்ற, சிறுபிள்ளைத்தனமான, வெள்ளறிவுடைய, அறிவுமுதிராத, மடமைவாய்ந்த, முதிராத, முதிர்வளர்ச்சியற்ற, திறமையற்ற, அருந்திறலற்ற, கல்லாத, நாகரிகப்பாங்கறியாத, நாட்டுப்புறப்பாங்கான, கலைப்பாங்கற்ற, உயர் இன்ப நுகர்வற்ற, இன்பவாழ்வு வாய்ப்பற்ற, இன்பவாய்ப்பு வளஞ் சாராத, தனியான, ஒற்றயைன, நேரான, சமநிரப்பான, ஒருசீரான, ஒரே வகைப்பட்டட, கூட்டிணைப்பற்ற, கலப்பற்ற, பிறிதியைபற்ற, கட்டற்ற, திரிபற்ற, கூடுதல் குறைவற்ற, இயற்போக்கான, தேர்ந்து கொள்ளப்படாத, ஒரே மூலக்கூறுடைய, பிரிக்கமுடியாத, பிரிவு உட்பிரிவுகள் இல்லாத, பொறிவகையில் இயல் விசையார்ந்த, இயந்திர ஆற்றலில்லாத, எலும்பு முறிவுவகையில் தசைச் சிக்கலற்ற, வட்டிவகையில் இயற்கணிப்பான, கூட்டுவட்டியில்லாத, கருத்துவகையில் பகுத்தாயப்படமுடியாத, வாசக வகையில் தனிநிலையான,உறுப்பு உள்ளுறுப்புகளற்ற, (தாவ.) இலைவகையில் தனி ஒற்றையான, பல்கூட்டிலையல்லாத, (தாவ.) மலர் சூலக வகையில் ஒற்றைக் ஒற்றைக் கருவகங் கொண்ட, (கண.) தொகை வகையில் ஒரே எண்ணால் குறிப்பிடத்தக்க, (கண.) கூட்டல் வகையில் ஓரினஞ் சார்ந்த, (கண.) ஒப்புருவகையில் உய்வுருவின் விசைப்பெருக்க வடிவு உட்கொள்ளாத, (கண.) எண்வகையில் பின்னக் கலப்பற்ற.
simple-hearted
a. எளிய உள்ளங்கொண்ட.
simple-mindedness
n. எளிய மனமுடைமை.
simpler
-1 n. பூண்டுவளத் திரட்டாளர், பூண்டுவள வல்லுநர்.
simpleton
n. எளிதில் ஏமாறுபவர், எதையும் எளிதில் நம்புபவர், உலகியலறியாதவர், அரைகுறை அறிவுடையவர்.
simplify
v. எளிமையாக்கு, செய்ய எளிதாக்கு, புரியுமாறு செய், சிக்கலகற்று, நேர்நிலையாக்கு, சுருக்க வடிவாக்கு, எளிய வடிவாக்கு.
simplism
n. செயற்கை எளிமை, போலியௌிமை.
simulacrum
n. வடிவம், உருத்தோற்றம், நிழலுரு, போலியுரு, போலிச்செய்தி.
simulant
a. உருப்போலியான.
simulate
v. பாவித்தல் செய், போலியாக நடித்துக்காட்டு, போன்று நடி, போன்று நட, பிறிதுரு மேற்கொள், மற்றுருக்கொள், உணராததை உணர்வதாகக் காட்டிக்கொள், சொற்போலியாகு, சொல்வகையில் போலியாக ஒத்த பிறிது சொல்லின் வடிவம் மேற்கொள்.
simulation
n. பாவிப்பு, பாசாங்கு, போலிநடிப்பு, போலி செய்தல், உருப்போலி, செயற்போலி, உணர்ச்சிப்போலி.
simultaneity
n. உடனிகழ்வு, சமகால நிகழ்ச்சி.
simultaneous
a. உடனிகழ்வான.
simurg
n. பெர்சிய பழங்கதை மரபுவழக்கில் மாபெரும் பறவை வகை.
sin
n. பழிவினை, பாவம், தீவினைப்பயன், பாவ உணர்ச்சி, புனிதக்கேடு, சமயநெறி திறம்பல், அறக்கொலை, பொல்லாங்கு, தீங்குநிலை, தீவினை, (வினை.) பாவமிழை, பொல்லாங்கிழை, பழிக்கறைப்படுத்து, தீங்கிற்காளாக்கு, நன்றிக்கேடு செய்.