English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
saltimbanco
n. போலி மருத்துவர்.
saltiness
n. உப்பார்ந்த தன்மை.
saltire
n. (கட்.) குறுக்கை வடிவக் குறியீடு.
saltire wise
adv. குறுக்கை வடிவில்.
saltness
n. உப்புடைமை, உப்புத்தன்மை.
saltpetre
n. வெடியுப்பு, சாம்பர வெடியகி, வெடிமருந்திலும் இறைச்சிக் காப்பிலும் மருந்துகளிலும் பயன்படும் வெண்படிக உப்பு.
saltpetre-paper
n. வெடிமருந்து கொளுத்தப் பயன்படும் வெடியத் தோய்வுத்தாள்.
saltwort
n. கடல் உப்புச் சேற்றுச்செடிவகை.
salubrious
a. உடல்நலத்திற்கு உகந்த, நலமார்ந்த.
salubrity
n. உடல்நலத்திற்கு உகந்த தன்மை.
Saluki
n. அராபிய வேட்டைநாய் இனம், பெர்சியன் வேட்டைநாய்.
salutary
a. உடனலம் விளைக்கிற, சுகந்தருகிற.
salutation
n. வணக்கவுரை, வணக்க வாழ்த்து, வணக்கவுரை கூறுதல், காட்சி மகிழ்வுரை, வரவேற்பு விளக்கவுரை, விடையனுப்பு வணக்கவுரை, வணக்கமுறை.
salutational, salutatory
a. வணக்கமுறை சார்ந்த.
salute
n. வணக்கமுறை, வணக்கச்செயல், வந்தவுடன் வணக்கந் தெரிவிப்பு, செல்லும்போது வணக்க அறிவிப்பு, வணக்கமுறைதெரிவிப்பு, வணக்கமுறை ஆயுத அசைப்பு, வணக்கமுறைக் கொடியசைப்பு, வணக்கமுறை வேட்டு அறிவிப்பு, வாட்போரில் தொடக்கத் தற்காப்புமுறை நிலை, வணக்கமுறை முத்தம், (வினை.) வணக்கந் தெரிவி, வரவேற்புத்தெரிவி, வணக்கமுறை காட்டு, வணக்க மதிப்பறிவி, சந்திப்புமுறை வணக்க முத்தமிடு, பிரிவுமுறை வணக்க முத்தம் வழங்கு, வணங்கி வரவேற்புச்செய், கண்டு மகிழ்ச்சிதெரிவி, புன்னகையால் வணக்க வரவேற்பறிவி, வசைத்தாக்குச் சூளுரைமூலம் வரவேற்பறிவி, வசைத்தாக்குச் சூளுரைமூலம் உணர்ச்சி தெரிவி, வேட்டுமாரி மூலம் வரவேற்பறிவி, வேட்டுமாரிமூலம் எதிர்ப்புணர்ச்சி தெரிவி, கண்ணுக்கு அல்லது செவிக்குப்புலப்படு, வருகிறவர் வகையில் காட்சியளி.
salutiferous
a. உடல்நலம் மேம்படுத்துகிற.
salvable
a. அழிவினிறுங் காக்கத்தக்க.