English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
phrontistery,
எண்ணிப் பார்ப்பதற்கான இடம்.
Phrygian
n. பண்டைய சிறிய ஆசியாவில் உள்ள பிரிஜியா சார்ந்த.
phthisical
a. ஈளை சார்ந்த, காசநோயுடைய.
phthisis
n. ஈளை, காசநோய்.
phut
n. கொப்புளம் அல்லது மெல்லிய தோற்பையின் வெடிப்பொலி, துப்பாக்கிக்குண்டு பாயும் ஒலி, (வினையடை)'பட்'டொன்று.
phylactery
n. யூதர்கள் அணியும் மறைவாசகங்கள் அடங்கிய சிறு தோற்பேழை, பகட்டாரவாரச் சமய விணைமுறை, தாயத்து.
phyletic
a. (உயி.) இனக்குழு சார்ந்த.
phyllophagan
n. தழையுணி, இலைகளைத் தின்றுவாழும் விலங்கு.
phyllophagous
a. தழையுணியான, இலைகளைத் தின்று வாழ்கிற.
phyllopod
n. தழைக்காலி, இலைபோன்ற கால்களையுடைய நத்தையின் உயிர், (பெ.) இலைபோன்ற கால்களையுடைய.
phyllostome
n. தழைமூஞ்சி வாவல், இலைபோன்ற மூக்கினையுடைய வெளவால்.
phyllotaxis
n. இலையடுக்குமுறை.
phylloxera
n. செடிப்பேன் இனம், கொடிமுந்திரிச்செடியை அழிக்கும் பூச்சுவகை.
phylogenesis, phylogeny
விலங்கு அல்லது செடிவகையின் இனவளர்ச்சி, விலங்கு அல்லது செடிவகையின் இனவரலாறு.
phylum
n. (உயி.) விலங்கு அல்லது செடிவகையின் இனப்பெரும்பிரிவு.
physic
n. நோய்தீர்க்குங் கலை, பண்டுவம், மருத்துவத் தொழில், (பே-வ) மருந்து, (வினை.) மருந்துகொடு.
physical
a. இயற்பொருள் சார்ந்த, சடப்பொருள் தொடர்பான, இயற்பியல் சார்ந்த, இயற்பியல் விதிகளுக்கிணங்கிய, உடல்சார்ந்த.
physician
n. மருத்துவர், மருத்துவத்திலும் அறுவையிலும் சட்டப்படித் தகுதி பெற்றவர், நோய்தீர்ப்பவர், கோளாறு அப்ற்றுபவர், தீங்கு நீக்குபவர்.
physicism
n. இயற்பொருட் கோட்பாடு, வெறும் இயற்பொருள்களே அல்லது சடப்பொருள்களே உண்மையானவை என்னுங்கோட்பாடு.
physicist
n. இயற்பியல் ஆய்வுத்துறை மாணவர், இயல்நுல் மாணவர், உயிரின் இயற்பொருள் தோற்றக் கோட்பாட்டாளர்.