English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Pentateuch
n. விவிலிய நுலின் பழைய ஏற்பாட்டில் மோசே என்பாருக்கு உரியதாகக் கருதப்பட்ட முதல் ஐந்து ஏடுகள்.
pentathlon
n. பண்டைக்கிரேக்கர் பயிற்சி விளையாட்டுப் போட்டியில் பங்கெடுத்துக்கொள்ளும் அனைவரது ஐந்து நிகழ்ச்சித் தொகுதி, தற்கால ஒலிம்பிக் பந்தயங்களில் ஐந்து ஆட்டத்தொகுதி.
pentatomic
a. (வேதி.) அணுத்துகளில் ஐந்து அணுக்கள் கொண்ட.
pentatonic
a. ஐந்து இசைக்குரல்கள் கொண்ட.
pentavalent
a. ஐந்திற இணைவாற்றலுடைய, தனிமங்களில் ஐந்து அணுக்கள் நீரகத்தோடு இணையும் ஆற்றலுடைய.
Pentecost
n. யூதர்களின் அறுவடை விழா, யூத திருக்கோயிலின் திருக்கட்டளை நாள் விழா, ஈஸ்டர் விழாநாளுக்குப்பின் அடுத்த ஏழாவது ஞாயிற்றுக்கிழமை.
penthouse,pentice
சாய்விறக்கி மோடு, முக்கியன்ன கட்டிடச் சுவரோடு இணைந்துள்ள சரிவுக்கூரை, மேற்கட்டி, அணியொப்பனைப் பந்தல்.
pentode
a. கம்பியில்லாத தந்தி தடுக்கிதழ்கள் வகையில் ஐந்து மின்வாய்கள் கொண்ட.
Pentonville
n. தனித்தனி அறைகளில் கைதிகளை அடைப்பதற்கேற்ப அமைக்கப்பட்ட லண்டன் நகரச் சென்ற.
pentstemon
n. பகட்டு வண்ணமலர்களுடைய தோட்டச்செடிவகை.
penult, peunltimate
n. ஈற்றயல் அசை, ஈற்றயல், (பெ.) கடைசிக்கு முந்திய, ஈற்றயலான.
penumbra
n. அரைநிழற் கூறு, நிலவுலகு திங்கள் இணை நிழலான திண்ணிழற்பகுதி சூழ்ந்த அரைநிழல் வட்டம், கதிரவன் கறைப் பொட்டுச் சூழ்ந்த இளங்கரும் பகுதி.
penurious
a. கடுமிடிமையான, பற்றாக்குறையான, கஞ்சத்தனமான.
penury
n. இலம்பாடு, ஏழ்மைநிலை நல்குரவு.
penwiper
n. பேனா துடைக்குஞ் சிறுதுண்டு.
peon
n. பணியாள்., ஏவலாள், பணிமனை குற்றேவலன், ஸ்பானிய அமெரிக்க வழக்கில் நாட்கூலியாள், மெக்ஸிகோவில் அடிமையாய்விட்ட கடனாளி.
peonage
n. குற்றேவலர் பணி, பணியாட்களை வேலைக்கு அமர்த்துதல்.
peony
n. வெண்சிவப்பு மலர்ச்செடி வகை.
people
n. மக்கள், சமுதாயம், இனம்-நாட்டு மக்கள், வாழ்குழு, மக்கள் வழூப்பு, மக்கள் குழாய், குடிமக்கள், மாவட்டக் கிறித்தவ குருமார் கூட்டம், (வினை.) குடியமர்வு செய், குடிமக்களாக்கு, வாழ்குடிகளாக்கு, தங்கிவாழச் செய், விலங்கினங்கள் வாழச் செய், தங்கிவாழ், குடியமர்.
peoples
n.pl. உறவினர், படைதாங்கிய உழைப்பவர் குழு, புடையர் குழு, பரிவாரம், தொழிலாளர் குழு, பொதுமக்கள் குடியுரிமையாளர்.