English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
processional
n. ஊர்வலப்பாடல், ஊர்வலப்பாடல் தொகுதி, (பெ.) ஊர்வலஞ் சார்ந்த, ஊர்வலம் போன்ற, ஊர்வலமான, ஊர்வலங்களிற் கொண்டு செல்லப்படுகிற, ஊர்வலங்களிற் பயன்படுத்தப்படுகிற, ஊர்வலங்களிற் பாடப்படுகிற.
processionist
n. ஊர்வலத்திற் செல்பவர்.
prochronism
n. கால முற்குறிப்பீடு, நிகழ்ச்சி நிகழ்ந்தஉண்மையான தேதிக்கு முன்னான தேதியைக் குறிப்பிடுழ்ல்.
proclaim
v. சாற்று, விளம்பரப்படுத்து, உரிமை கோரி வெளிப்படையாக அறிவி, முடிபு வலியுறுத்தி அறிவி, ஆட்சிப் பகுதியைக் கட்டுப்பாட்டு நிலைக்குரியதாக அதிகாரத்தோடு அறிவித்துவிடு, தடை-செய்தி முதலியவற்றை வலியுறுத்தி அறிவி.
proclamation
n. சாற்றுதல், பொது அறிவிப்பு, பொது அறிவிப்புச் செய்தி, அரச விளம்பரம், நாடுகடத்தலறிவிப்பு, நாட்டுப்பகைப் பட்டியலிற் சேர்ப்பு.
proclitic
a. (இலக்.) கிரேக்க மொழியில் ஓரசைச் சொல் வகையில் தனக்கென அழுத்திசைப்பின்றி வருசொல்லுடன் இணைந்தொலிக்கிற.
proclivity
n. சார்பான நாட்டம், சார்பு நோக்கிய பற்று.
proconsul
-1 n. (வர.) பண்டை ரோம ஏகாதிபத்தியத்தில் புறமாகாணத் தலைவர், பிற்கால ரோமப் பேரரசில் முன்னாள் புறமாகாண ஆளுநர், புதிய குடியயேற்ற நாட்டின் ஆளுநர்.
procrastinate
v. காலந் தாழ்த்து, தயங்கு, தள்ளிவை.
procrastination
n. நெடுநீர்மை.
procreate
v. கால்வழி உண்டுபண்ணு, மகவுபெறு, இனம் பெருக்கு.
procreative
a. பிறப்பிக்கிற.
Procrustean
a. வலிந்து மட்ட ஒருமை நிறுவுகிற, வன்முறையால் அளவிற்கு உட்படுத்துகிற.
proctor
n. பல்கலைக்கழக ஓழுங்குகாவலர், மேலாளர், (சட்.) சமயச்சார்புடைய வழக்குமன்றங்களின் வழக்குரைஞர்,.
proctorial
a. பல்கலைக்கழக ஒழுங்கு காவலருக்குரிய, ஒழுங்கு காவல் சார்ந்த, குற்றத் தண்டனைச் சார்பான.
proctorize
v. பல்கலைக்கழக மாணவரிடையே ஒழுங்குமுறையை நிலைநாட்டு.
procumbent
a. குப்புறப்படுத்துள்ள, நெடுஞ்சாண்கிடையான, (தாவ.) நிலத்தின் மேற் படிந்து வளர்கிற.
procuration
n. பிறர்வினை மேற்கோடல், நடைபெறுவித்தல், வழக்குரைஞரின் செயல், வழக்குரைஞரின் உரிமைப் பகர நடவடிக்கை, மாவட்டச் சமயத் தலைவருக்கு அவரது வருகைக்காகப் பணிப்பொறுப்பாளர்கள் அளிக்கும் பணத்தொகை, கடன்பெறுவதற்கான பேரப்பறிவு முயற்சி, கடன் பேரப்பரிவு முயற்சிக்காகக் கொடுக்கப்படுந்தொகை, உடன்படுத்துந் தொழில்.
procurator
n. (வர.) ரோமர் பேரரசின் மாகாணக் கருவூல அதிகாரி, முகவர், பதிலாள், பகரச் செயலுரிமையாளர், இத்தாலிய நகரங்களின் குற்றநடுவர்.
procuratory
n. பகரச் செயலுரிமை அதிகாரம், சட்டப்படியான பகரச் செயலுரிமை.