English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
prick-ears
n. நாயின் நிமிர்ந்த கூரான காதுகள், மனிதரின் முனைப்பான செவிகள்.
pricker
n. குத்துவது, குத்து கருவி, கூர்முள், தோல்தைக்கும் ஊசி, சூனியக்காரியை ஆய்ந்து கண்டுபிடிப்பவர், விரைகுதிரை ஊர்பவர்.
pricket
n. ஈராட்டைக் கலைமான், மெழுகுத்திரி செருகிவைக்குந் தண்டு.
prickle
-1 n. துய்முள், பொடிமுள்கற்றை, செடிகளின் மேற்புறத்தில் தோன்றும் முள்போன்ற சுணை, சிறுமுள், முள்எலியின் கடுங்கூர்மையுடைய முள், (வினை.) முள்ளாற் குத்து, பொடிமுள்ளாற் குத்துவது போன்ற உணர்ச்சி உண்டாக்கு, முள்ளாற் குத்தப்படுவது போன்ற உணர்ச்சிபெறு.
prickly
a. செடிகள்-விலங்குகள் வகையில் முட்கள் போர்த்த, முள் நிறைந்த, சுணையுள்ள, முள் குத்தும் உணர்ச்சியுடைய.
pride
n. செருக்கு, இறுமாப்பு, தற்பெருமை, தன்முனைப்பு, அகம்பாவம், பெருமை கொள்ளுவதற்குரியவர், பெருமைக்குரியது, மயில் முதலியவற்றின் வகையில் பெருமிதத்தோற்றம, வீறமைதி, பெருமை உணர்ச்சி, கட்டழகு அமைவு, களிகிணர்ச்சி.
prie-dieu
n. (பிர.) வழிபாட்டில் முழங்காற் படியிடும் சாய்வு மேசை.
priest
n. பூசாரி, அர்ச்சகர், திருச்சபைச் சமயகுரு, சடங்குகள் செய்யும் உரிமைபெற்ற மதகுரு, அயர்லாந்தில் மீனைக்கொல்லப் பயன்படுத்தப்படும் மரக்கொட்டாப்புளி, (வினை.) சமயகுருவாக்கு, புரோகிதராக்கு, சமயச்சடங்குகள் ஆற்றும் பூசாரியாக அமர்த்து.
priest craft
n. குருமாரின் பேராசை, சமயகுருமாரின் உலகியற் பற்றார்வப் பண்பு, புரோகிதச் சூழ்ச்சிமுறை.
priest-ridden
a. சமயகுரு ஆட்சிக்குக் கட்டுப்பட்ட, குரு மாராற் கொடுமை செய்து அடக்கப்பட்ட.
priesthood
n. சமயகுரு நிலை, புரோகிதப்பண்பு, சமயகுருமார் அமைப்பு முறை.
priestly
a. சமயகுருவிற்குரிய, மதகுருவிற்கேற்ற, சமயகுருவினைப் போன்ற, புரோகிதத் தன்மையுடைய.
priests hood, priest-in-sthe-pulpit
n. உயரமான வெண்ணிற மடல்களையுடைய ஒற்றைவிதைச் செடிவகை.
prig
n. நடையழுத்தக்காரர், மயிரிழைநுட்பம் பின்பற்றுபவர், நீக்குப்போக்கறியாத திருத்த முறையினர், மட்டுமீறிய பேச்ச நடைத்திருத்தம் பேணுபவர், விடாப்பிடி ஒழுக்கக் கொள்கையர், போலித் தற்பெருமையாளர்.
priggish
a. மயிரிழை நுட்பம் பின்பற்றுகிற, போலித் தற்பெருமையுடைய.
prim
a. முறை பிசகாத, துல்லிய, செயற்கை ஆசாரமிக்க, பழகாது பின்னடைந்து நிற்கிற, (வினை.) செயற்கை ஆசாரம் மேற்கொள், பழகவிரும்பாத முகத்தோற்றங்கொள், இதழ்க்கோட்டம் மூலம் விருப்பின்மை தெரிவி.
prima
a. முதன்மையான, முதலாவதான, தலைமையான.
prima buffa
n. நாடக அரங்கில் தலைமை நகைச்சுவைப்பாடகி, தலைமை நகைச்சுவை நடிகை.
prima donna
n. இசைநாடகத்தில் தலைமைப்பாடகி, எளிதில் உணர்ச்சி கொள்பவர்.
prima facie
a. முதற்காட்சியில் தோன்றுகிற, முதல் எண்ணத்தை அடிப்படையாகக் கொண்ட, (வினையடை.) முதல் தோற்றத்திலேயே.