English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
presence
n. உளதாந்தன்மை, இருத்தல், அணுக்கம், முன்னிலை, திருமுன், தோற்ற அமைதி, நிலையமைதி, தன்னிலையமைதி, உணர்வமைதி, செயல்தறி அமைதி.
presence-chamber
n. ஓலக்கம்.
present
-1 n. நிகழ்வேளை, (இலக்.) நிகழ்காலம், (பெ.) நிகழ்காலத்திய, தற்போதைய, தற்போதுள்ள, இவ்விடத்திலுள்ள, இதை எழுதுகிற, முன்னிலையிலுள்ள, இப்போது முன் இருக்கிற, இங்குக் குறிக்கப்படுகிற, தற்போது குறிப்பிடப் படுகிற, உளதான, உளரான, உடனிலையான, உடனிருக்கிற, வாழ்பவரான, தற்போதைய மதிப்பிற்குரிய.
presentable
a. அறிமுகப்படுத்தத்தக்க, செப்பம் வாய்ந்த, பரிசாகக் கொடுக்கத்தக்க.
presentation
n. பரிசளிப்பு, பொதுக்காட்சி, நாடக மேடைக்காட்சி, அறிமுகப்படுத்துகை, முன்னிலைப்படுத்துகை, திருமுன்னிலைப்படுத்துகை, திருமுன்னிலக்காட்சி, புறத்தோற்றப்பாங்கு, (மெய்.) கணநேர உணர்வு ஆற்றல்.
presentationism
n. புலனுணர்வே நேராக மனவுணர்வாகும் என்னுங் கோட்பாடு.
presentative
a. மானியமாக அளிக்கத்தக்க, கருத்தை மனத்தில் நன்கு எடுத்துக்காட்டத்தக்க, (மெய்.) கணநேரஉணர்வுக்குகந்த, (மெய்.) புலனுணர்வு நேரே மனவுவ்ர் வாகிறது என்னுங் கோட்பாடு சார்ந்த.
presentee
n. பரிசுபெறுபவர், மானியம் வழங்கப்பட்ட திருச்சபை அதிகாரி, பதவிக்குப் பரிந்துரைக்கப்பட்டவாம், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவர்.
presentient
a. பின்னிகழ்வுபற்றிய முன்னுணர்வுடைய.
presentiment
n. வருந்தீங்குணர்தல்.
presentive
a. சொல்வகையில் பொருளை நன்கு எடுத்துக்காட்டுகிற, கருத்தை நன்கு உளத்துக்குத் தெரிவிக்கிற.
presentment
n. நாடகக்காட்சித்தோற்றம், ஓவியத்தோற்றம், தோற்றக் கவர்ச்சி, மனக்காட்சிப்பாங்கு, உளத்துக்கு எடுத்துக்காட்டுஞ் செயல், திருச்சபை மேலதிகாரியிடம் ஊர்த் தலைமைக்குருவின் குற்றமுறையீடு, (சட்.) முறைகாண் ஆயத்தினரின் சான்றறிவிப்பு.
presents
n. pl. எழுத்துக்கள், வாசகங்கள், ஆவணம்.
preservation
n. காப்பீடு, பதனம், பேணுகை, பதன நிலை.
preservative
n. பதனச்சரக்கு, காப்புமுறை, காப்பு நடவடிக்கை, நோய்த்தடைக் காப்புமருந்து, (பெ.) பதனஞ் செய்ய உதவுகிற, சேமக்காப்புச் செய்கிற, அழியாது காக்கிற.
preserve
n. பதனப்பழச்சாறு, பழச்சத்து, தனிக்காடு, தனிக்காப்பு வேட்டைக்காடு, தனி ஆட்சிவட்டம், போட்டியற்ற தனி உரிமையெல்லை, மீன்வளர்ப்பு நீர்நிலை, (வினை.) வைத்துக் காப்பாற்று, கெடாது பேணு, அழியாது பாதுகாப்புச்செய், உயிருடன் வைத்துப் பேணு, தளராது நடைமுறைப்படுத்து, தொடர்ந்து நடைபெறுவி, பண்புகாத்துப் பேணு, பதனஞ்செய், அழுகாமல் தடு, புரையாமல் பார்த்துக்கொள், தனி உரிமைக்காக வைத்துக்காப்பாற்று, உடல் தளர்ச்சியுறாமற்பேணு.
Preshyterianism
n. திருச்சபைப் பொது ஆட்சிமுறை.
preside
v. தலைமை தாங்கு, மேலாண்மை ஏற்று நடத்து, அல்க்கி ஆட்சி செய், முதன்மைநிலைகொள்.
presidency
n. தலைவர் பதவி, தலைவர் பதவிக்காலம், தலைவர் ஆட்சி வட்டகை, மாகாணம்.