English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
premiere
n. நாடக முதலாட்டம், திரைப்பட முதல் வெளியீடு (வினை.) நாடக முதலாட்டங்காட்டு, திரைப்பட முதல் வெளயீடு செய்.
premise
-1 n. (அள.) தரவு வாசகம், மெய்க்கோள், மெய்யாகக்கொள்ளப்பட்ட வாதமூலக் கூற்று, முப்ப்புரை, முற்கூற்று, பத்திரத்தின் முதனிலை வாசகம்.
premises
n. pl. (சட்.) முன்கூறப்பட்டவை, முன்கூறப்பட்ட நிலமனையிடங்கள், (சட்.) வரைப்பிடம், சட்டச்செயற்பாட்டுக்கு உட்படும் இடப்பரப்பபெல்லை, வளவு.
premium
n. பரிசில், ஊக்கப்பரிசு, காப்பீட்டுக் கட்டணம், பரிசூதியம், நல்லெண்ண மிகை ஊதியம், வட்டிமீது மிகைக்கட்டணம், தொழிற்பயிற்சிக்கான மதிப்பளிப்பு, வாசி வட்டம், உயர் செலாவணியாக மாற்றுவதற்குரிய மிகை வட்டம், மிகை மதிப்பு, உயர்மதிப்பு.
premolar
n. முன் கடைவாய்ப்பல், கடைவாய்ப்பல்லுக்கு முன்னுள்ள பல், மனிதர் வகையில் இருகதுப்புப்பல்.
premonish
v. முன்னெச்சரிக்கை செய்.
premonition
n. முன்னுணர்வு, முன்னெச்சரிக்கை.
premonitor
n. முன்னெச்சரிப்பவர், முன்னெச்சரிப்பது, முன்னறிந்துரைப்பவர், முன்னறிந்துணர்த்துவது.
premonitory
a. முன்னெச்சரிக்கை தருகிற, முன்னறிவிக்குந் தண்மையுடைய.
Premonstratensian
n. பிரமாண்ட்ரே என்னுமிடத்தில் 111ஹீல் நிறுவப்பட்ட திருநெறித்துறவுக் குழாத்தினைச் சார்ந்தவர், திருநெறிக் குழுவமைப்பு வகையினைச் சார்ந்த பெண்துறவி, (பெ.) திருநெறித்துறவுக்குழு அமைப்புவகையினைச் சார்ந்த.
premorse
a. (தாவ., பூச்.) கட்டைவெட்டித் தறித்தது போன்ற முனையுடைய.
premotion
n. இறைவயவிருப்பறுதி, படைக்கப்படும் உயிரின் மனச்சார்பினை முன்னதாக நிச்சயிக்கும் தெய்வச்செயல்.
prentice
n. புதுப்பயிற்சியர்.
preoccupation
n. பிறிதீடுபாடு, முன்னீடுபாடு, முன்பே வேறு வேலையில் ஈடுபட்டதனால் ஏற்படும் கைக்கட்டுநிலை, இடவகையில் முந்தமர்வு, முற்கோட் கருத்து, முற்சார்பு, முன்முடிபு.
preoccupied
a. பிறிது கவனமாக, ஆழ்நிலையில் தன்னைமறந்த.
preoccupy
v. இடவகையில் முன் அமர்த்திக்கொள், உளவகையில் முன் ஈடுபடுத்திக்கொள், பிறவழிச்செல்ல இடமின்றி உளத்தை முழுதும் ஈடுபடுத்திக்கொள், முன்பே தனதாக்கிக் கொள்.
preordinance
n. முன்விதித்தமை, அன்றெழுதியது.
preparation
n. முன்னேற்பாடு செய்தல், முன்னொருக்கம், பள்ளிப்பாட முன்பயிற்சி, மருத்துக்கலவை, மருத்துணவுத்திட்டம், (இசை.) பின்வரு முரணிசைப்புக்கேற்ற முன் முரணதிர்பு.
preparations
n. pl. முன்னேற்பாடுகள், முன்னொருக்கங்கள்.
preparative
n. முன்னொருக்கச்செயல், (படை., கப்.) முன்னேற்பாட்டுக் கட்டளை அடையாள அறிவிப்பு, முன்னொருக்க முரசறைவிப்பாணை, ஆயத்தநிலைக் குழலுதற்கட்டளை, (பெ.) முன்னொருக்கமான, முன்னேற்படான.