English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
portico
n. மூடு முன்றில், புகுமுக மண்டபம்.
portion
n. பங்கு, பாகம், கூறு, உண்டிச்சாலைகளின் வாடிக்கைக்காரர்களுக்குப் படைக்கப்படம் உணவின் அளவு, பெண் வழிச்சீர், சீதனம், விதி, ஊழ், (வினை.) பங்குகளாகப் பிரி, பங்கிட்டுக் கொடு, பங்கு ஒப்படை, பெண்ணுக்குச் சீர் வரிசைசெய், சீதனங்கொடு.
portionless
a. உடைமையற்ற, சீதனம் இல்லாத
Portland
n. போர்ட்லாந்து தீவிலுள்ள சிறை, (பெ.) போர்ட்லாந்து தீவுடன் தொடர்புடைய.
portly
a. பருத்த, கொழுத்த, வீறார்ந்த தோற்றமுடைய.
portmanteau
n. பயணத் தோற்பெட்டி, நடுவிலிருந்து தட்டையாக மடிக்கவல்ல பெருந்தோற்பெட்டி, இருபாதி ஒட்டுச்சொல், இரண்டு சொற்களின் ஒலிகளும் பொருள்களும் கலந்துருவான கற்பனைச்சொல்.
portolano
n. (வர.) துறைமுகத் திசைகாட்டிச் சுவடி.
portolio
n. கைப்பை, உதிரித்தாள்கள் படங்கள் வைப்பதற்குரிய கெட்டித்தாள் பையுறை, அமைச்சர் பதவி, வணிக இணைப்புக்கழக முதலீடுகளின் பட்டியல்.
portrait
n. உருவப்படம், சொல்லோவியம், விளக்க வருணனை.
portraitist
n. உரவப்படம் வரைபவர்.
portraiture
n. உருவப்பட வரைவு, உருவப்படம், உருவப்படக்கலை, உருவப்படத்தொகுதி, விளக்க வருணனை.
portray
v. உருவப்படமெழுது, விளக்கமாக வருணி.
portrayal
n. உருவப்படமெழுதுதல், விளக்கமாக வருணித்தல், ஒப்புருஹ்ம்.
Portreeve
n. (வர.) நகரத்தின் முதன்மையான அலுவலர், நகர முதல்வருக்கு ஒரு படி கீழான அலுவலர்.
Portuguese
n. போர்ச்சுகல் நாட்டுக்குடிமகன், போர்ச்சுக்கல் நாட்டு மொழி, (பெ.) போர்ச்சுக்கல் நாட்டைச் சார்ந்த, போர்ச்சுக்கல் நாட்டுமொழியைச் சார்ந்த.
pose
-1 n. நிற்கும் விதம், நிலை, மனப்பாங்கு, மனநிலை, பாவிப்பு, மேற்கொள்ளும் நிலை, தாய விளையாட்டு வகையில் முதலாட்ட உரிமை, (வினை.) ஓவியரின் மாதிரி வகையில் குறிப்பிட்ட தோற்றநிலையில் அமைவி, குறிப்பிட்ட தோற்ற நிலையை மேற்கொள், தனித்திறம் பாவி, தனித்திறனுடையவர் போலப் பாவனை மேற்கொள்ளு, வலியுறுத்து, வலியுறுத்திக்கொடு, கடாவிடு, தாய ஆட்டவகையில் முழ்ற் காயைக் களத்தில் வை.
poser
n. திணறவைக்குங் கேள்வி, திகைப்பூட்டும் புதிர், தடுமாறச் செய்பவர்.
posit
v. உண்மையென ஏற்றுக்கொள், மெய்யாகக்கொள், உள்ளதென வாதத்துக்காக வைத்துக்கொள், நிலையில் அமை, ஒழுங்குபடுத்திவை.