English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
overweighted
a. வரம்புமீறிச் சுமையேற்றப்பட்ட, எடை மீறிய.
overwhelm
v. மூழ்கடித்துவிடு, மேலழுத்தி அமுக்கு, அடியிற் புதைத்து விடும்படிச்செய், திடீரென அமுக்கி அழி, உணர்சசியில் ஆழ்த்து, கேள்விமாரியால் திணறச்செய்.
overwhelming
a. திணற அடிக்கிற, சமாளிக்க முடியா அளவு பெரிய.
overwind
v. கடிகாரம் முதலிய வகையில் எல்லைக்குமேல் சுற்று.
overwork
-1 n. அதிக வேலை, வரம்புகடந்த உழைப்பு.
overwrite
v. மிகையாக எழுதிப் பெயர்கெடுத்துக்கொள்.
ovibovine
n. செம்மறியாட்டிற்கும் எருதுக்கும் இடைப்பட்ட தன்மைகள் கொண்ட விலங்கு, (பெயரடை) செம்மறியாட்டிற்கும் எருதிற்கும் இடைப்பட்ட தன்மைகள் கொண்ட.
ovicide
n. செம்மறியாட்டுக் கொலை.
Ovidian
a. ஓவிட் என்ற லத்தீன் கவிஞரைச் சார்ந்த, ஓவிட் என்ற லத்தீன் கவிஞரின் காவியத்திற்குரிய.
oviduct
n. முட்டைத் தூம்பு.
ovine
a. செம்மறியாடுபோன்ற, ஆடுகளுக்குரிய.
oviparous
a. முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கிற, முட்டையிற் பிறக்கிற.
ovipositor
n. முட்டையிடும் உறுப்பு.
ovoid
n. முட்டைவடிவப்பொருள், நீள்வட்டம், (பெயரடை) கெட்டியான நீளுருளை வடிவுடைய, முட்டை வடிவான.
ovolo
n. (க-க) கால்வட்ட வளை பகுதியுடைய சித்திர வேலைப்பாடு.
ovorhomolidal
a. சாய்சதுரத்திற்கும் நீளுருளை வடிவிற்கும் இடைப்பட்ட.
ovoviviparous
a. உடலுக்குள்ளேயே முட்டை பொரித்துக் குஞ்சுகள் உண்டாக்குகிற.