English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
nicety
n. நுண்ணய ஒழுகலாறு, சரிநுட்பம், நுட்பதிட்பம், அருநயப் பண்பு, நயநுணுக்கம், நுட்ப வேறுபாடு, வேண்டா நயநுணுக்க விவரம்.
niche
n. மாடக்குழி, சிலையுருக்கள் வைப்பதற்குரிய சுவர்மாடம், தனியிடம், ஒருவர்க்குரிய தனி ஒதுக்கிடம், (வினை.) சுவர் மாடத்தில் வை, உள்ளிழைந்து அமர்ந்து கொள், பதுங்கி ஒட்டிக் கொள்.
nick
n. வடு, கணிப்புக்குறி, குறியாட்டத்தில் முதலடிக் கெலிப்பெறி, தேறல் அளவு கலத்தில் கள்ள அடித்தட்டு, குறிக்கொண்ட புள்ளி, குறித்த கணம், சரியான தறுவாய், காலங்கடந்துவிடுவதற்கு முற்பட்ட கடைசிக்கணம், (வினை.) வடுப்படுத்து, வடுக்குறியீடு, குதிரை வாலை உயர்த்தி வைத்துக் கொள்ளும்படி வாலடியில் வடுவிடு, குறியாட்டத்தில் கெலிப் பெண் அடை, வேட்டையில் குறுக்குவெட்டிச்செல், பந்தயத்தில் மூலை வெட்டிச்செல், சரியாக ஊகித்துவிடு, வண்டி தவறுமுன் எட்டிப்பிடித்துவிடு, காலங் கடந்துவிடு முன் கைப் பற்று.
nick-nack
n. சிறுதிறப் பொருள்கள், பளுவற்ற சிறுதிறக் கருவிகலங்கள், சிறுதிறத் துணிமணித் துணுக்குக்கள்.
nickel
n. நிக்கல், கலவைகளில் பெரிதும் பயன்படுத்தப்படும் கெட்டியான ஒளிரும் வெள்ளை உலோகம், அமெரிக்க சிறு நாணயம், ஜரோப்பிய சிறு நாணய வகை, (வினை.) நிக்கல் மூலாம்பூசு.
nickname
n. விளையாட்டுப் பெயர், செல்லப்பெயர், (வினை.) செல்லப் பெயரிட்டழை, விளையாட்டுப் பெயர் கொடு.
nicotian
n. சுருட்டு முதலியவை பிடிப்பவர், (பெ.) புகையிலை சார்ந்த.
nicotine
n. புகையிலை நஞ்சு, புகையிலையிலிருந்து வடித்திறக்கப்படும் எண்ணெய் வடிவ நச்சுச்சத்து.
nictate,nictitate
கண்கொட்டு, இமை, உள்ளிமைப்படலம் திறந்து மூடியாடப்பெறு.
nicy
n. குழந்தை வழக்கில் இனிப்புத் தின்பண்டம்.
nid-nod
v. தலையசைத்துக்கொண்டேயிரு.
nidamental
a. நத்தை வகைகளின் முட்டைத் திரளை வைப்பதற்குப் பயன்படுகிற.
niddering
n. இழிமகன், கோழை, (பெ.) இழிவான, கோழையான.
niddle-noddle
a. தலையாடுகிற, நடுங்குகிற, ஆட்டங்கொடுக்கிற, (வினை.) தலையாடிக் கொண்டிரு, தடுமாறு, தள்ளாடு, ஊசலாடு.
nide
n. ஓரீடு, வான்கோழி, வகையின் ஓரீற்றுக்குஞ்சுகள்.
nidificate,nidify
கூடு கட்டு.
nidus
n. பூச்சியினம் முட்டையிடுமிடம், சிதல்கள் அல்லது விதைகள் வளர்ச்சியடையுமிடம், நோய் விளையும் இடம், கோட்பாடு தழைப்புறும் இடம், இயற்கைக்கொள்கலம், முட்டைத் திரள், பருத்திரள்.
niece
n. உடன்பிறந்தாரின் மகள், தமையன்-தமபி-தமக்கை-தங்கை மகள்.
niello
n. வெள்ளிச் செதுக்குருவின் வரைகளை நிரப்புவதற்கான கருப்புக் கலவைப்பொருள், வெள்ளிச் செதுக்கிற் கரும்வண்ணம் நிரப்பும் வேலைப்பாட்டுப் பணி.
niersteiner
n. வெள்ளைத் தேறல் வகை.