English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Masorete, Masorite
விவிலிய நுல் மூலபாடம் பற்றி யூதரிடையே மரபாக வந்த செய்திகளைத் தொகுக்கும் யூதப்புலவர்.
masque
n. கலைபயில்வோரின் இசைநாடகக் கூத்து வகை, இசைநாடகக் கூத்துக்காக எழுதப்பட்ட நாடகம்.
masquerade
n. அயிற்பெண்டு முகமூடி நடனம், பொய்த்தோற்றம், பகட்டு, (வினை) அயிற்பெண்டாடு, முகமூடி நடனத்தில் கலந்துகொள், மாறுவேடத்தில் தோன்று, உருமாறிச் செல், பொய்த்தோற்றம் கொள்.
mass
-1 n. ரோமன் கத்தோலிக்கக் கோயில்களில் இயேசு நாதரின் இறுதி உணவுவிழா, இறுதி உணவு விழாவில் பயன்படுத்தப்படும் வழிபாட்டுச்சுவடி, இறுதி உணவு விழாப்பாடல்களின் இசைமெட்டமைவு.
mass-spectrograph
n. திரிபடிவ வகைபிரி கருவி, மின்காந்தக்களங்களுடாக அணுவிசை இயக்கவதன் மூலம் தனிம மறுபடிவங்களைப் பிரிப்பதற்குரிய கருவியமைவு.
massacre
n. நுழிலாட்டு, படுகொலைக்களரி, கொன்று குவிப்பு, (வினை) கொன்று குவி, படுகொலை செய்.
massage
n. உருவுதல், வருடுதல், தசைகளும் மூட்டுக்களும் செயலாற்றத் தூண்டுவதற்காக அவற்றைத் தேய்த்துப் பிசைந்து விடுதல், (வினை) உருவு, வருடு, தேய்த்துப் பிசைந்துவிடு.
masse
n. மேசைக் கோற்பந்தாட்டக் கோலினைச் செங்குத்தாகப் பிடித்துக்கொண்டு கொடுக்கப்படும் அடி.
masseur
n. உடம்பைத்தேய்த்துப் பிசைந்துவிடுதலைத் தொழிலாகக் கொண்டவன்.
massif
n. மலைமுகட்டுத் திரள்.
massive
a. பெருத்த, கனமான, கெட்டியான, திண்மையான, பெரும்படியான, கணிசமான, உறுப்புக்கள் வகையில் பெரிதாக உருவாகியுள்ள, மலைக்கவைக்கிற, உள்ளத்தில் பதியும் ஆற்றல்வாய்ந்த, பரும அளவு மிக்குடைய.
massy
a. திண்மையான, பளுவான.
mast
-1 n. மரக்கலக்கூம்பு, கப்பற் பாய்மரம், வானொலியமைப்பின் வான் கம்பிக் கம்பம், பறவைக்கப்பலைக் கட்டி நிறுத்துவதற்குரிய உறுதியான எஃகுக்கோபுரம்.
mast-head
n. பாய்மரத்தின் உச்சி, சுற்றுக்காட்சியிடம், தண்டனைக்காக நிறுத்தப்படும் இடம், (வினை) பாய்மரத்தின் உச்சிக்கு உயர்த்து, பாய்மரத்தின் உச்சிக்கு ஏற்றுவது மூலமாக ஒறு.
mastaba
n. (தொல்) சரிவான பக்கங்களும் தட்டையான மேற்பகுதியுமுடைய பண்டைய எகிப்தியக் கல்லறை.
master
n. தலைவன், ஆண்டை, எசமான், மேலாளர், ஆயன், மேலாட்சியாளர், நிலைய மேலாண்மையர், கல்லுரித் தலைவர், கப்பல் முதல்வர், பணி முதல்வர், பணிமனை மேலுரிமையாளர், உடையவர், மேலுரிமையர், காப்பாளர், ஆசிரியர், ஆசான், குரு, மெய்விளக்கத்துறை ஆசிரியர், ஆசான், குரு, மெய்விளக்கத்துறை ஆசிரியர், வல்லார், திறலாளர், தேர்ச்சியாளர், கைதேர்ந்தவர், துறைபோனவர், ஆட்சித்திறமையாளர், நம்பி, இளஞ்சேய், இளநிலை ஆண்டை, (பெயரடை) தனி முதன்மையான, தலைமை நிலைக்குரிய, தனிச்சிறப்பு வாய்ந்த, அடக்கியாளும திறமுடைய, வென்று மேம்படும் திறலுடைய, ஆட்சியாற்றல் வாய்ந்த, (வினை) கீழடக்கு, இடக்கியாளு, போராடி வெல்லு, நிறை ஆட்சிக்குட்படுத்து, முற்றிலும் தன்வயப்படுத்து, முழுத் தேர்ச்சியடை, துறைபோகக் கைவரப்பேறு, தலைமைவகித்தாட்சி செய்.
master-at-arms
n. போர்க்கப்பலின் காவற்பணியாளர்.
master-key
n. ஆணித்திறவு, பல பூட்டுகளைத் திறக்கவல்ல திறவுகோல்.
master-stroke
n. தேர்ச்சித்திறமிக்க செயல், வன்றிறச் செய்கை.
masterful
n. அடம்பிடித்த, பிடிமுரண்டான ஆதிக்க மனப்பான்மையுள்ள, வீறாப்புடைய.