English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Maronite
n. லெபனான் பகுதியில் வாழும் சிரியக் கிறித்தவக்கிளை சார்ந்தவர்.
maroon
-1 n. பலத்த ஓசையுடன் வெடிக்கும் வாண வெடிவகை, பழுப்புச் சிவப்புநிறம், (பெயரடை) பழுப்புச்சிவப்பு நிறமான.
maroon(2),
n. மேற்கிந்திய தீவுகளைச் சார்ந்த, நீகிரோ வகுப்பினர், தனித்துக் கடப்படடவர், (வினை) தண்டனையாகக் குற்றவாளியைத் தனியாக தீவில் விட்டுவிடு, பொழுதுபோக்கு.
marqauee
n. பெரிய கூடாரம்.
marque
n. (வர) எதிரிகளின் வாணிகக்கப்பலைக் கைப்பற்றுவதற்கான தனிக் கப்பலாளர் சிறப்புரிமை., எதிரி வாணிகக் கப்பலைக் கைப்பற்றும் உரிமைச்சீட்டு பெற்ற கப்பல்.
marqueterie, marquetry
உள் இழைப்பு வேலை.
marquise
n. கோமான் மனைவி, கோமாட்டி, கூர் முட்டை வடிவ மணிக்கொத்துப்பதித்த கணையாழி.
marquois, marquois scale
n. சமதூர ஒரு போகு கோடுகள் வரைவதற்கான கருவிச்சட்டம்.
marram
n. கடற்கரையில் மணலைப்பற்றி உறுதியாக்கும் புல்வகை.
marriage
n. திருமணம், திருமணத்தொடர்பு, மணவினை, திருமணமுறை, திருமண நிகர்ச்சி, மிக நெருங்கிய இணைவு, சீட்டாட்ட வகையில் ஓரின அரசன் அரசிச் சீட்டுக்களின் இணைவு.
marrow
-2 n. (பே-வ)துணைவர், தோழ்ர், இணைதுணை, முற்றிலும் ஒத்த படிவம்.
marrow-spoon
n. எலும்புகளிலுள்ள மச்சையை எடுப்பதற்கான கரண்டி.
marrowbone
n. மச்சை எலும்பு.
marry
v. மணவினையில் இணைத்து வை, மணஞ் செய்து கொடு, மணங்கொள், மணத்திற்கொள், மணஞ்செய், பொருந்த இணை, திட்பமிகாதபடி கயிறுகளின் புரிமுறுக்கி இணை.
Mars
n. ரோமர்களின் போர்த்தெய்வம், அங்காரகன், செவ்வாய், போர், போர்த்தொழில்.
Marsala
n. வெண்ணிற முந்திரித்தேறல் வகை.
marsh
n. சதுப்புத் தாழ்நிலம்.
marshal
n. படைத்துறை மீயுயர் அலுவலர், சுற்றுலா நடுவருடன் செல்லும் செயலண்மைப் பணித்துணைவர், விழா ஒழுங்கு முறைப் பணியாளர், வீரப்பேட்டி ஒழுங்கு முறைப் பணியாளர், சிறைக்கூட முகவர், அரண்டமனைத் தலையாரி., (வினை) ஒழுங்காகக வரிசைப்படுத்தி வை, (கட்) குடும்ப மரபுச் சின்னங்களை ஒன்று சேர், சடங்குகளோடு அழைத்துச்செல்.
marshalsea
n. (வர) அரண்மனை அலுவலர் நடத்தும் நீதி மன்றம், அரண்மனை அதிகாரியின் கட்டுப்பாட்டிலுள்ள சிறைச்சாலை.