English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
lowbrow
a. (பே-வ.) தனியறிவுச்சிறப்பற்ற, பண்பாட்டு உயர்வற்ற.
lowbrowed
a. தாழ்ந்த, மேன்மையற்ற, உயர்பண்பற்ற, பாறை வகையில் புறங்கவிந்துள்ள, கட்டிடம் முதலியவற்றின் வகையில் தாழ்ந்த வாயிலுள்ள, இருளார்ந்த.
lower
-2 a. இருபொருள்களிடையே கீழான, தாழ்ந்த, தாழ்படியிலுள்ள.
lower-bracket
a. பட்டியலின் அடியிற் சேர்க்கப்பட்ட.
lower(1), a. low
என்பதன் உறழ்படி.
lowest, a. low
என்பதன் ஏற்றயர்படி.
Lowland
a. ஸ்காத்லாந்தின் தென்கிழக்குப் பகுதிசார்ந்த அல்லதுத தென்கிழக்குப் பகுதியிலுள்ள.
Lowlander
n. தென் ஸ்காத்லாந்து வாணர்.
Lowlands
-1 n. ஸ்காத்லாந்தின் தென்கிழக்குப் பகுதி.
lowliness
n. பணிவு, பணிவமைதி.
lowly
a. அடக்கவொடுக்கமான, பணிவுள்ள, தாழ்நிலையிலுள்ள, ஏழ்மை வாய்ந்த, எளிமையான, பகட்டில்லாத, (வினையடை) அடக்கமாக, பணிவாக, தாழ்மையாக, எளிமையாக.
loxodromic
n. எல்லா நிரைகோடுகளையும் சம அளவில் ஊடுருவிச் செல்லுஞ் சாய்வரை, (பெ.) சாய்வான தன்மையில் கப்பலிற் பயணஞ் செய்கிற, சாய்வாக மிதந்துசெல்கிற, எல்லா நிரைகோடுகள் வகையிலும் ஒரே வாய்வளவில் ஊடு செல்கிற.
loxodromics
n. எல்லா நிரைகோடுகளையும் சம அளவில் ஊடுருவிச் செல்லும் கப்பற் பயண முறை.
loxygen
n. ஆகாய விமானத்தில் பயன்படுத்தப்படும் நீரியல் உயிரகம்.
loyal
n. மாறா உளத்தர், கிளர்ச்சிப்பொழுதிலும் பற்று மாறாதவர், (பெ.) திடப்பற்றுடைய, பற்றுறுதிகாட்டுகிற, ஆர்வப் பற்றடைய, நம்பிக்கைக்குரிய கடமை தவறாத, காதல் உறுதியுடைய, பொறுப்பு மீறாத.
loyalty
n. இராஜ பக்தி, அரசப்பற்று, நிறைமை, பற்றுறுதி, வாய்மை தவறாமை, பற்றுறுதிக் கோட்பாடு.
lozenge
n. சாய்சதுர உரு, வைரவடிவம், எதிர்ச்சம கோணத்தீர்க்க சதுரம், மரபுரிமைச்சின்னத்தில் முதுகன்னி அல்லது கைம்பெண் நிலைக்குரிய சாய்சதுரவடிவக் கேடயம், சர்க்கரை கலந்த எளிதில் கரையுமியல்புடையமருந்து, நலமார்ந்த இன்பண்ட வகை, பலகணிச்சட்டத்தில் சாய்சதுரக் கண்ணாடித்தகடு.
lozenged
a. மாறுபட்ட வண்ண அடுக்குடைய சாய்சதுரப் பலகணிச் சட்டம் பொருந்திய, பலகணிவகையில் சாய்சதுரக் கண்ணாடிச் சட்டங்களையுடைய.
lubber
n. மொண்ணைத்தடியன், அருவருப்புப் பேருரு மடையன், நாகரிகம் தெரியாதவன், நாட்டுப்புறத்தான், காட்டான், செயல்நுட்பம் தெரியாத மாலுமி.
lubnricative
a. உயவுப்பண்புடைய, உராய்வுதடுக்கிற.