English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
ignite
v. கொளுத்து, தீப்பிடிக்கவை, தீப்பற்று, மிகுதியும் சூடாக்கு, தீயெழச் சூடாக்கு, வேதியியல் மாறுதலடையும் அளவுக்கு வெப்பூட்டு.
ignition
n. தீப்பற்றவைப்பு, தீப்பற்றுகை, தீப்பிடித்துள்ள நிலை, அழல்மூட்டும் வகைமுறை, உள்வெப்பாலையில் தீக்கொளுவும் ஏற்பாடு.
ignoble
a. இழிபிறவியான, தாழ்நிலையிலுள்ள, கீழான, இழிந்த, ஈனப்பேர் படைத்த, பழிப்புக்கிடமான, (வினை) தாழ்த்து, இழிவுபடுத்து.
ignominy
n. இழிவு, பேரிகழ், அவமதிப்பு, அவமானப்படத்தக்க நடத்தை, ஒழுக்கக்கேடு.
ignorance
n. அறியாமை, மடமை, தெரியாமை, அறியாநிலை, அறியாப்பிழை, அறியாப்பிழையால் நேர்ந்த செயல், அறியாமைப்பருவம், முகமது நபிநாயகத்துக்கு முற்பட்ட காலம்.
ignorant
n. அறிவற்றவர், (பெயரடை) அறியாத, தெரியாத, தகவல் பெறாத நிலையிலுள்ள, அறிவில்லாத, படிப்பில்லாத, எழுத்தறிவற்ற, அறியாமைக்குரிய, அறியாமையால் நிகழ்கிற, அறியாநிலை காட்டுகிற.
ignoratio elenchi
n. (அள) வாதம் மறுப்பதுபோற்காட்டித் தொடர்பற்ற பிற பொருளை மறுக்கும் போலி வாதம்.
ignore
v. பொருட்படுத்தாமல் விடு., புறக்கணி, சிறைக்கணி,. கண்டும் காணாததுபோல் இருந்துவிடு, பொதுச்சான்றாளர் வகையில் ஆதாரமில்லையெனத் தள்ளிவிடு.
Ignore all
அனைத்தும் தவிர்
ignotum per ignotiusm
n. விளக்க கருதும் பொருளைக்காட்டிலும் விளங்காத விளக்கம்.
Iguanodon
n. புதைபடிவமாகக் காணப்படும் மிகப்பெரிய தழையுணியினப் பல்லி வகை.
IIex
-2 n. (தாவ) முள்ளிலைகளும் பசிய சிறுமலர்களும சிவப்புப் பழங்களுங்கொண்ட இலையுதிராப் புதர்ச்ச உள்ளிட்ட பேரினம்.
IIiad
n. திராய் முற்றுகையைப் பொருளாகக்கொண்டு ஹோமர் எழுதியதாகச் சொல்லப்படும் பண்டைக் கிரேக்க கவிதைக் காப்பியம், தொடர் நெடுங்கதை.
iinnermost,
a. உள்ளார்ந்த, உள்தொலைவான, புறத்திலிருந்து.
ijmmortally
adv. நிலையாக, என்றுமுள்ளதாக, நீடித்ததாக.
ijmperfect
n. (இலக்) முடிவுறாநிலை குறித்த வினைச்சொல்லின் காலப்படிவம், வினையின் முடிவுறா இறந்தகாலம், வினைச்சொற் காலப்படிவ வகையில் முடிவுறாநிலை குறித்த.
ijnferno
n. அளறு., நரகம், பயங்கரக்காட்சிக்களம்.
ikiot-stitch
n. தையலிழைத் துன்னல்வகை.