English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
ionterpunctuate
v. நிறுத்தக்குறியிடு.
iota
n. கிரேக்க நெடுங்கணக்கில் ஓர் எழுத்து, இம்மி, மிகச் சிறிய அளவு, சிறு துகள்.
iotacism
n. கிரேக்க மொழியில் 'இ' என்னும் உயிரெழுத்தை மிகுதியாகப் பயன்படுத்துதல், பிற உயிர்களிலும் இகர ஒலி ஏற்றல்.
ipecacuanha
n. வாந்தியும் வயிற்றுப்போக்கும் உண்டாக்கும் தென். அமெரிக்க மூலிகை வேர்.
ipse dixit
n. வாதமுறை சாரா ஆணைக்கூற்று.
ipsissima verba
n. pl. வழுவற்ற சரிடியான சொற்கள்.
ipso facto
adv. அவ்வுண்மை காரணமாகவே, அது காரணமாகவே.
irade
n. துருக்கி சுல்தானின் எழுத்துமூலக் கட்டளை.
Irak, Iraq
மெசபோடேமியர் உள்ளிட்ட அராபிய அரசு.,*,
irascible
a. எளிதில் கோபிக்கிற, முன்கோபியான.
irate
a. கோபமுள்ள, சினமுடைய.
ire
n. கோபம், வெகுளி, சினம்.
irenic, irenical
அமைதி குறிக்கொண்ட, சமாதானத்தை நோக்கமாகவுடைய.
iridaceous
a. பகட்டான மலர்களையும் கத்திபோன்ற இலைகளையும் வேர்க்கிழங்குகளையுடைய அல்லியினகச் செடியினததைச் சார்ந்த.
iridescent
a. வானவில் வண்ணங்காட்டுகிற, இடத்திற்குத் தக்கபடி பன்னிறம் பகட்டிக்காட்டுகிற.
iridium
n. உறுதியம், அணு எண் ஹ்ஹ் கொண்ட உறுகடுமைமிக்க உலோகத தனிமம்.
iridosmine
n. தங்கப்பேனா முனைகளுக்குப் பயன்படுத்தப்படும் உறுதியம் என்மியம் இணைந்த உலோகக் கலவை.
Iris
-1 n. கிரேக்க வானவில் தெய்வ அணங்கு, வானவர் தூதணங்கு.
Irish
n. ஐரிஷ் மொழி, அயர்லாந்து மக்களால் பேசப்படும் மொழி, (பெயரடை) அயர்லராந்தைச் சார்ந்த.
Irishman
n. அயர்லாந்து நாட்டான்.